உள்ளங்கை » vijay tv

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா!
என் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி  முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு?”

ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், சுருதிகளில்… பெரும்பாலும் 'கிரீச் கிரீச்' என்ற சவுண்டுதான் வந்து கொண்டிருக்கும்! அவை திடீர் திடீரென்று கிளம்பி என் கவனத்தை சிதறடிப்பது சில சமயம் மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனெனில் அந்த நேரத்தில்தான் நான் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து தீவிர யோசனையுடன் இவ்வுலகத்தை உய்விக்கும் உபாயங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன். அது தடைப்படலாமா!

ஆனால் அந்த நிலை மாறி, இப்போது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியின் முழு நேர ரசிகனாக மதம் மாறி விட்டேன்!

அந்த “சூப்பர் சிங்கர் ஜூனியர்” நிகழ்ச்சியின் விசிறியாக என்னை மாற்றிய ரசவாத வித்தையைச் செய்த அந்த குட்டிக் குயில் யார்?

இதோ இவர்தான் – அவர் பெயர் “பிரியங்கா”. அந்த “ஏஞ்சல்” பாடிய பாட்டுதான் என்னைக் கவர்ந்திழுத்தது.

என்னை ஈர்த்த அந்தப் பாடல் எது? அது ஒரு டூயட் பாடலாக இருந்தாலும் என்னைக் கவர்ந்தது பிரியங்காவின் பிருகாவுடன் கூடிய குழைவான குரலும், அவர் பாடும் விதமும்தான். அது இதோ:

<object width="480" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/PnOhxF_oQHw?fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/PnOhxF_oQHw?fs=1" type="application/x-shockwave-flash" width="480" height="385" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object>

அந்த செல்லக் குயில் பிரியங்கா பாடிய மற்ற பாடல்கள் இவை:

www.youtube.com/watch?v=0

பிரியங்கா பாடும் நேர்த்தியைப் போல் அவருடைய அமைதியான தோற்றம், கள்ளம் கபடில்லாத சிரிப்பு, அவருடைய உடை, முடி அலங்காரம் எல்லாமே அழகு!

அந்தப் பெண்ணின் குரல் அநாயாசமாக மேல்ஸ்தாயியில் சஞ்சாரம் செய்கிறது. சிறிதளவுகூட பிசிறில்லாமல் பலவித ஜாலங்களைப் புரிகிறது. ஆனால் அவருடைய தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது; ஒரே “அமரிக்கையான” சிரிப்புதான் அந்த முகத்தில் குடிகொண்டிருக்கும்! இத்தனை குழைவும், பிருகாக்களும், மேல் “நோட்ஸ்” பாடும்போடு ஒலிக்கும் அலைக்கற்றைகளும் பல பாடகர்களை பொறாமை கொள்ளச் செய்யும் என்ப்து நிச்சயம். நாமும் பார்க்கிறோமே, கர்நாடக இசை மேடைகளில், என்னென்னமோ கைகால்களை ஆட்டி, முகத்தைச் சுளித்து பலவித அங்க சேஷ்டைகளைச் செய்தவண்ணம் இருக்கிறார்கள்; ஆனால் பாவம், குரல்தான் பேச மறுக்கிறது!

பிரியங்காவின் பெற்றோர்கள் உணமையிலேயே பெரும் பாக்கியசாலிகள்!