உள்ளங்கை » life

வாரியாரின் மணிமொழிகள்
திருமுருக. கிருபானந்தவாரியார் அவர்கள் தன் "கலையறிவினாலும், அனுபவ அறிவினாலும் நுணுகி" எடுத்த "மணிமொழிகள்" (திருப்புகழமிர்தம் வெளியீடு-1968) கையேட்டிலிருந்து நான் தொகுத்துள்ள சில முத்துக்கள்:

இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலுடன் படுக்கையில் படுத்துப் புரளாதே.

பெண்களை ஆண்கள் காவல் புரிவதனால் பெண்மை தாழ்ந்ததன்று. வன்மை காவல் புரியும். வன்மைக்கு மென்மை அடங்கும்.

அறிவு, குடிப்பிறப்பு, அடக்கம், அளவறிந்து பேசுதல், கல்வி, ஆற்றல், தன் சக்திக்குத் தகுந்த தானம், நன்றியறிதல் — இந்த எட்டுக் குணங்களும் மனிதனை ஓங்க வைக்கின்றன.

பார்த்துக் கெட்டது பிள்ளை

பார்க்காது கெட்டது பயிர்

இட்டுக் கெட்டது காது

இடாது கெட்டது கண்

கேட்டுக் கெட்டது குடும்பம்

கேளாது கெட்டது கடன்

உண்டு கெட்டது வயிறு

உண்ணாது கெட்டது உறவு

கற்பிக்கப் பட்டவன் குருவைக் கவனிக்க மாட்டான்

திருமணம் ஆனவன் தாயைக் கவனிக்க மாட்டான்

ஆசையற்றவன் பெண்ணைக் கவனிக்க மாட்டான்

பயனை அடைந்தவன் உதவி செய்தவனைக் கவனிக்க மாட்டான்

கரையை அடைந்தவன் படகைக் கவனிக்க மாட்டான்

நோய் நீங்கியவன் மருத்துவனைக் கவனிக்க மாட்டான்

சிறியோர்தானே என்றெண்ணி ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளாதே

மூன்று பொருட்களை மிச்சம் வைக்காமல் அடியுடன் அழிக்கவேண்டும் — நெருப்பு, கடன், பகைவன்.

வாய்க் கொப்பளித்து ஒருபோதும் வலப்பக்கம் உமிழக் கூடாது

அன்னம், நெய், உப்பு மூன்றையும் கையால் படைக்கக் கூடாது.

சனி, செவ்வாய்க் கிழமைகளில் சவுளம் செய்து கொள்ளக் கூடாது

விநாயகருக்குத் துளசியும், சிவனுக்குத் தாழையும், பார்வதிக்கு நெல்லியும், சூரியனுக்கு அருகும், வைரவர்க்கு நந்தியாவர்த்தமும், திருமாலுக்கு அட்சதையும் சாத்தக் கூடாது.

கடும் வெயில், மயானப் புகை, தன்னைவிட வயதானவளைப் புணர்தல், தேங்கிய குட்டை நீர், இரவில் தயிரன்னம் – இந்த ஐந்தும் ஆயுளைக் குறைக்கும்.

மாலை வெயில், ஓமப் புகை, இளம் மனைவி, அருவி நீர், இரவில் பால் அன்னம் இவ்வைந்தும் ஆயுளைப் பெருக்கும்.

தன் கையால் படுக்கையை விரித்துக் கொள்வதும், தன் கையால் ஆசனப் பலகையிட்டுக் கொள்வதும், தன் கையால் அன்னம் படைத்துக் கொள்வதும், ஆக இம்மூன்றும் ஆயுளைக் குறைக்கும்.

நதி, குளம் முதலிய தீர்த்தங்களில் உடை உடுத்திக் கொண்டு முழுக வேண்டும். நீராடியபின் உடையை நீருள் பிழியக் கூடாது.

ஒற்றையாடையுடன் உணவு செய்யக் கூடாது.

இரு கைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.

கீழ்பால் நோக்கி யுண்போர்க்கு ஆயுள் வளரும்

மேற்பால் நோக்கி யுண்போர்க்கு பொருள் சேரும்

தென்பால் நோக்கி யுண்போர்க்கு புகழ் வளரும்

வடபால் நோக்கி யுண்போர்க்கு நோய் வளரும்

இரவில் இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித் தயிர், இலைக் கறி, நெல்லிக்காய் – இவைகளை உண்ணக் கூடாது. உண்டால் இலட்சுமி கடாட்சம் நீங்கும்.

ஆண்கள் இடப்பக்கம் கீழிருக்கவும், பெண்கள் வலப்பக்கம் கீழிருக்கவும் ப்படுத்துறங்க வேண்டும்.

அருளின்பம் வாழி; உயிர்களெல்லாம் வாழி!

பிழைக்கத் தெரிய வேண்டும்!
ஆம், இவ்வுலகில் புத்திசாலித்தனமாக பிழைக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். எங்கோ யாரோ சொன்னார், எந்த நூலிலோ எழுதியிருக்கிறது என்று வரட்டு சித்தாந்தங்களில் மூழ்கி, தன் வாழ்க்கையையும், தன் குடும்பத்தினரையும் துயரத்தில் ஆழ்த்தி விடுபவர் அநேகம். மக்கள் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்ந்து நம் எதிவினையை அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் பிழைக்கும் வழி.

நண்பர் பிகேபி தன் வலைப் பதிவில்  கீழ்க்கண்ட செய்தியை எழுதியுள்ளார். அது உங்கள் மனத்தைத் தொடும் என்று என்ணுகிறேன்!

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?

இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்… சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.

முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்… சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே… இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க… அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்… இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் – முதலை சொல்வது மாதிரி… இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்… ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன… அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !

ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்…

நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.

சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல… முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.

பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த… முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.

முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது – புரிந்ததா… இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !

சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர… அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி… சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.

பறப்பு, பரபரப்பு
ஏனிந்த அவசர வாழ்க்கை? ஏன் இவ்வளவு பரபரப்பு?

நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன?

நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும்?

"அடுத்த வீட்டுப் பெண்"ணில் வரும் "எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது அப்ப அப்போ அப்படி அப்படிதானே நடக்கும்" என்கிற வசனம் என் மனத்துக்கு மிக்க இசைவானது! (யார் அந்த நடிகர் – பக்கிரிசாமியா?)

வாழ்வில் அவசரமே கூடாது என்கிற இந்த எண்ண அலையை பிறிதொரு தொடர்பில் என் ஆங்கில வலையின்பால் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் கோனேரிராஜபுரம் சுப்புணி. அவரை ஒருமுறை "என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டேன்.  வெகு நிதானமாக என்னைப் பார்த்து "சும்மாத்தான் இருக்கிறேன்" என்றார். அவரைப் பார்க்க எனக்கு பொறாமையாக இருந்தது. ஆகா, "சும்மா" இருக்கும் அந்த அற்புத சுகத்தை நம்மால் அனுபவிக்க இயலவில்லையே என்கிற தாபம் மேலிட்டது.

எங்கள் ஊரில் பலர் இவ்வாறு பேசக்கேட்டிருக்கிறேன்.

"வர்ர ஆனில சின்னப்பயலுக்கு கல்யாணம் பண்ணீட்லாம்னு இருக்கேன்"

"யாரு அந்த 'ஓடும்புள்ள ஒடியாரும்புள்ளையா' இருப்பானே அவனா? செத்த நேரம் செவனேன்னு இருக்கமாட்டானே. என்ன பண்ணிக்கிட்டு  இருக்கான் இப்ப?"

"சும்மாத்தான் இருக்கான்"

(அதுவே ஒரு உத்தியோகம் போலும்!)

கிராம வாழ்க்கையின் முக்கிய அங்கமே அவசரமின்மைதான். எங்கள் ஊரில் தங்கள் நிலத்தை சொந்த சாவடி செய்பவர்கள்கூட அவ்வளவு சுறுசுறுப்பாக ஓடிவிடமாட்டார்கள். காவேரியில் பொங்கி, வெண்ணாறு நிரம்பி, வெட்டாற்றில் வடிந்து, பின் "ஷட்ரஸு" திறக்கப்பட்டு ஓடம்போக்கியாற்றில் தண்ணி வந்து, வடிகால் வழியாக நம் "பங்கி"ல் தலைகாட்டியபிறகு சாவகாசமாக குறுவை, தாளடி, நாற்றங்கால் என்று வேலையைத் தொடங்குவார்கள். ம்ம்ம். அது அந்தக் காலம். இப்பெல்லாம் அங்கே ஏது தண்ணீர்!

வேலை வேண்டுமா? விழியைத் திறந்து வைத்துக்கொள்!
தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது "கட்டுக்கட" மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற விளம்பரத்தை பொது இடத்தில் வைத்தது.

புரிந்தவர் சென்றனர், வென்றனர்!