2008
திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஹைகோபி.
குறிச்சொற்கள்: hindu, om, அகரம், ஓம்திருமுருக.கிருபானந்த வாரியார் அவர்களின் செவிக்கினிய அகர, ஓங்கார விளக்கத்தை நண்பர்களுக்கு புத்தாண்டு விருந்தாக சமர்ப்பிக்கின்றேன்!
YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஹைகோபி.
குறிச்சொற்கள்: hindu, om, அகரம், ஓம்என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!
இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.
அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.
தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.
டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மிகுதியையும் வாசிக்க »
நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். நம் நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லாத அலங்காரம் என்று நமக்குத் தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த குட்டை தேவையாகத்தானே இருக்கிறது!
என்னைபோல் நீங்களும் சிரமப்படக்கூடாதே என்பதற்காக இந்த செய்முறை விளக்கம். இதைவிட சிறந்த விளக்கப்படம் உங்கள் கைவசம் இருந்தால் தெரிவியுங்கள். சுட்டுவிடலாம்! ![]()
(படத்தைக் தட்டினால் பெரிசாகும் – உங்களுக்குத் தெரியாதா என்ன!)
நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்!





நன்றி:-
குறிச்சொற்கள்: zip, zipper, விழிம்பிணைப்பு
எதெதெற்கோ போர்டுகளையும் கட்-அவுட்டுகளையும் வைத்து சாலையை அடைக்கிறார்களே, நம் மக்கள் கண்ட இடங்களையெல்லாம் நரகலாக்கும் நாகரிகமற்ற பழக்கத்தை மாற்றும் வகையில் இந்த அறிவிப்புப் பலகையை அனைத்துப் பொது இடங்களிலும் வைத்தாலென்ன?
இதுக்கெல்லாம் அசருவோமா நாங்கள் என்கிறீர்களா!!
படம் – நன்றி: Mike Jolley
குறிச்சொற்கள்: defecation, habits, health, hygiene, public
"வாழ்விலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மூன்று வெள்ளையர்கள்: பால், சர்க்கரை மற்றும் உப்பு" என்று எங்கோ வாசித்திருக்கிறேன்! ஆனால் நாம் இவ்வுலகிலிருந்து வெளியேறும்வரை நம்மால் இம்மூன்று "வெளுத்தவர்கள்" இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கக்கூட இயலாது என்பது உண்மை!
இவற்றில் முதலில் குறிப்பிடப்பட்ட்ட பாலை எடுத்துக் கொள்ளலாம் – இங்கு பால் என்று நாம் குறிப்பிடுவது பசு மற்றும் எருமைப் பாலைப் பற்றித்தான் – புலிப்பால், ஆட்டுப் பால், தாய்ப்பால் இவைகளைப் பற்றியல்ல!
அடிப்படையில் பால் அருந்துவதே மனிதனுக்குக் கெடுதல் என்று கூவி பால்காரர்கள்தம் வாழ்வாதாரத்தில் கைவைக்க முயல்வோர் பலருண்டு பாரில்! அந்த பால் எதிர்ப்புக் கழகத்தார்களிடம் "குறையென்ன கண்டீர் எந்தம் மக்கள் அன்றாடம் பருகிடும் ஆவின் பாலில்?" என்று கேட்போமா:-
மிகுதியையும் வாசிக்க »
Bad Behavior has blocked 5451 access attempts in the last 7 days.
சமீபத்திய மறுமொழிகள்