பெண்கள் ஜாக்கிரதை

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

சமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:

  1. இரு அண்டை வீட்டாரிடையே ஒரு தகராறு. அப்போது ஒரு வீட்டிலிருந்த பெண்மணி தன் அடுத்த வீட்டுக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் – அதாவது உள்ளாடையுடன் தன்னெதிரே நின்றார் என்று காவல்துறையில் புகார் செய்தார். சுமார் பத்து வருடங்கள் கழித்து சமீபத்தில் வேறு சாட்சியங்க்ள் ஏதுமில்லையென்றாலும் அந்தப் பெண்ணின் வாய்வழி சாட்சியம் மட்டுமே போதும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, அந்த அயல்வீட்டுக்காரர் தண்டிக்கப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு வயது சுமார் 70.
  2. ஒரு விமானத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணினருகேயிலிருந்த இருக்கையில் பயணிக்க நேர்ந்தது. அந்தப் பெண் அவருடைய முழங்கை தன் மேல் இடித்தது. அதனால் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று முறையீடு செய்தார். அதனால் அந்த விமானம் தரை இறங்கிய போது மத்திய ரிசர்வ் போலீசார் அந்த நபரைக் கைது செய்யக் காத்திருந்தனர்.
  3. ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் ஒரு பெண்மணியை இதே போல் முழங்கையால் இடித்தார் என்று கூறி, அந்தப் பெண்ணைச் சார்ந்த பலர் அந்த மனிதரை ரயிலிருந்து இறக்கி நையப் புடைத்தனர்.
  4. ஒருவர் தன் திருமணத்தின்போது தாலி கட்டும் நேரத்தில் ஒரு பெண் வந்து அவர் தன்னை காதலித்துக் கைவிட்டுவிட்டதாகக் கூறி, திருமணத்தை நிறுத்தி விட்டார். பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் வரதட்சிணை கேட்டார் என்று புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த நபரைக் கைது செய்துவிட்டனர்.

இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.

அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் – ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.

கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 1424 முறை) ::

நிழல் கடிகை

எப்படி :: 2 மறுமொழிகள் »

குறிச்சொற்கள்: ,
:: (பார்வை 1125 முறை) ::

தனித்து நில்

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

மந்தை மனப்பாங்கினின்று மாறுபட்ட சிந்தனை!

Be different

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 945 முறை) ::

கனவுக் கால்கள்!

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

அழகு கொஞ்சும் கால்கள்

குறிச்சொற்கள்: , , ,
:: (பார்வை 1024 முறை) ::

உயிர்கொல்லிப் பூச்சிகள்

இயற்கை :: மறுமொழி ஒன்று »

புச்சியினங்களில் பல தம் வண்ணமயத் தோற்றத்தால் நம் மனத்தைக் கவர்கின்றன. ஆனால் அவற்றில் பல கடுமையான விஷத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும், அவை உருவத்தில் சிறியதாகவும், அழகாகவும் இருந்தாலும் அவற்றின் விஷம் நம் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டவை என்பதையும் நாம் அறிந்துகொண்டு, அதனை சிறுவர்களுக்கும் அறிவூட்டதல் மிக்க அவசியம்.

சரி. இப்போது உலகின் 5 மிக ஆபத்தான பூச்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.

Tsetse Fly
5. "டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly):

ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.

Killer bee 4. ஆப்பிரிக்க இனத் தேனீ (Africanized Bee):

ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.

Death stalker3. கொலைகாரத் தேள் (DeathStalker):

இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்!

Black widow 2. கருவிதவைச் சிலந்தி (Black Widow Spider)

பாம்பை விட 15 மடங்கு கொடிய விஷத்தை தன் கொடுக்கில் கொண்டது இந்தச் சிலந்தி. இதன் உடலில் சிவப்பு வண்ண மணற்கடிகைக் குறியைக் காணலாம். இந்த வகைச் சிலந்திகளில் பெண்ணினம் ஆண் சிலந்தியுடன் கூடியிருந்து புணர்ச்சி செய்தபின் அந்த ஆணையே கொன்று தின்று விடுவதால் அவை இந்தப் பெயரைப் பெற்றன. கூடிக் களித்தபின் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடித் தப்பிக்கும் ஆண் சிலந்திகள் அதிஷ்டம் செய்தவை. ஆனால் கொஞ்சம் "கேரா"க சோம்பியிருந்தால் தன்னைவிட உருவத்தில் பெரியதும், விஷத்திலும் அதிகக் கடுமையும் கொண்ட பெண் பார்ட்னருக்கு ஆப்பிள் ஜூஸாக மாறவேண்டியதுதான்!

Anopheles 1.. மலேரியாக் கொசு (Anopheles Mosquito):

இந்தக் கொசுக்கள்தான் உலகில் மிக அதிகமான பேர்களைக் கொல்கின்றன. ஆண்டுக்கு 30 கோடி மக்களுக்கு மலேரியா, டெங்கு, யனைக்கால் போன்ற நோய்களை வாரி வழங்கி வருவது இந்த "துக்கினியூண்டு" கொசு வகைதான். என்னதான் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு நாம் அவற்றை அழிக்க முயற்சித்தாலும், இன்னும் முழுமையாக இந்தக் கொசுத் தொல்லையிலிருந்து மனிதன் மீள முடியவில்லை. இந்தப் போராட்டம் இவ்வுலகு உள்ள மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

செய்தி உதவி: ஃபுல்கர்.

குறிச்சொற்கள்: , , , ,
:: (பார்வை 1157 முறை) ::

துன்பம் நேர்கையில்…

இசை :: 4 மறுமொழிகள் »

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. "ஓர் இரவு" என்ற பழைய படத்தில், இனிய கர்நாடக இசையில் தேஷ் ராகத்தில்) மெட்டமைக்கப்பட்டு, எம்.எஸ்.இராஜேஸ்வரியும் V.J.வர்மாவும் இணந்து பாடிய இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இசை அமைத்தவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். திரையில் தோன்றியவர்கள் நாகேஸ்வர ராவ், லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி்).
(இந்த வீடியோவை மோசர் பியர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்ததால் யூடியூபிலிருந்து நீக்கி விட்டனர்)


YouTube - வீடியோவைக் காணுங்கள் Thunbam Nergaiyil

இந்தப் பாடலின் ஆடியோவை மட்டும் கேட்டு இன்புற விரும்பினால் இந்த சுட்டிக்குச் செல்க.

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 1292 முறை) ::

இதயம் கழன்று விழும் அபாயம்!

இயற்கை :: மறுமொழி ஒன்று »

ஸ்பெயின் நாட்டின் "எல் சோர்ரா" என்னும் மலைச்சுனை சுழ்ந்த மலைத் தொடரில், எல் மகினோட்ரோமோ என்னுமிடத்தை நோக்கி வளந்து வளைந்து செல்லும் இந்த லங்கடா ஒற்றையடி மலைப் பாதை (இதன் பெயர் "El Caminito del Rey") 1901-ல் அமைக்கப்பட்டதாம். இதன் விவரம் இந்த விக்கிபீடியா பக்கத்தில்.

மிகுந்த இடிபாடுகளுடன் கூடிய இப்பாதையில் செல்கையில் கரணம் தப்பினால் மரணம்தான். ஆனால் இரு கைகளும் ஒரு கண்ணும் வீடியோ எடுப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆள் எப்படி பேலன்ஸ் பண்ணுகிறார்!


பயங்கரம் மிகுந்த இதே இடத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ (யூடியூபிலிருந்து)


YouTube - வீடியோவைக் காணுங்கள் El Camino Del rey

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 973 முறை) ::

பெண்குலத்தின் கோலம்

மனித மனம் :: 8 மறுமொழிகள் »

வயிற்றுப் பிழைப்புக்காகஅயல் நாட்டில் வேலை செய்து நொந்து நூலாகும் இந்தியர்கள் தங்கள் உற்றார் உறவினரால் வெறும் பணம் காய்ச்சி மரமாகத்தான் கருதப்படுகிறார்கள். என்.ஆர்.ஐ என்றாலே இங்குள்ள கடைக்காரர்கள்கூட விலையை ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் எவ்வளவுதான் பிறருக்காக தங்கள் கைக்காசை சிலவு செய்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான உணர்வுபூர்வ உறவுகளை அவர்கள் பெறுவதில்லை.

இந்த அவல நிலை இப்போது இன்னும் மோசமடைந்திருக்கிறது, திருமணம் என்னும் பெயரில். இன்றைய இந்துஸ்தான் டைம்ஸில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

ஜெயா என்னும் பெண் துவாரகையில் வசிக்கிறார். இவருடைய கணவர் அமேரிக்காவில் இருக்கிறார். கணவர் வெளியூரில் இருப்பதால் அந்த பெண்மணிக்கு ஆணுறவு தேவைபட்டிருக்கிறது. மாட்டியவர் தீபக் குமார் என்னும் டிரைவர். ஆனால் அந்த டிரைவர் இவருடைய தொடர்ந்த கள்ள உறவுக்கு இணங்காமல் இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள முடிவு செய்கிறார்.

வந்தது கோபம் அந்தப் பெண்குலத்தின் சிகரத்திற்கு!! இரணடு அடியாட்களை அமர்த்தி அந்த தீபக் குமாரின் முகத்தின்மேல் ஆஸிட் ஊற்றச் செய்கிறார். பாவம் அந்த டிரைவர், தன் ஒரு கண்ணையே இழந்து நிற்கிறார்.

காவல்துறை அந்தப் பெண்மணியையும் அவருடைய அடியாட்கள் இருவரையும் கைது செய்துள்ளது.

என்.ஆர்.ஐ இளைஞர்களே, இதுபோன்ற திருமணங்கள் உங்களுக்குத் தேவைதானா? உங்களை நினைத்தால் "ஐயோ பாவம்" என்றுதான் தோன்றுகிறது! :(

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 1202 முறை) ::

யார் குற்றவாளி?

மனித மனம் :: மறுமொழி இனிமேல்தான் »

தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன.

இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். "எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு அறிகையை அளிப்போம்" என்று கூறிவிட்டனர். அந்த அறிக்கை என்ன்வாகும்? இதற்குமுன் நடந்த பல்வேறு விசாரணை அறிக்கைகளின் கதிதான் இதற்கும்.

ஆனால், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார்? மத்திய அரசும், மத்திய அரசில் சுகாதாரப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரும் இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று கூறிவிட்டனர். மாநில அரசும் கைவிரித்தாகி விட்டது. நர்சுகள்தான் தவறு செய்துவிட்டனர் என்றனர். அவர்களும் இது அநியாயப் பழி எங்கள் மேல் என்கின்றனர்.

குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் இந்த அறிக்கைகளைப் படித்து திருப்தி அடைய வேண்டியதுதானா!

பின் யார்தான் குற்றவாளி? இறந்த குழந்தைகளா!!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 839 முறை) ::

சும்மா பொழுது போக்கு!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters). :razz:

  1. இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!
  2. டான்ஸ் மாஸ்டர்!
  3. பறக்கும் பெங்குவின்கள்!
  4. உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!
  5. கை விரலே கைப் பேசியானால்!

என்ன, ஜாலியா பொழுது போச்சா!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 1253 முறை) ::

 

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 5451 access attempts in the last 7 days.