எங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் […]

இன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்” – அசரீரி!) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்!) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் […]

ஜனவரி 8, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று “கிரௌண்டில்” விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று […]

பேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது. பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் […]

நம் நாட்டில் National Institute of Oceanography மற்றும் Indian Space Research Organisation எல்லாம் உள்ளன. இவைகளின் சேவைகளை பத்திரிக்கைகள் விவரமாக பறை சாற்றியுள்ளன. தனக்குத் தானே பட்டங்கள் அள்ளித் தந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை. ஆமாம், கருப்பு சிறப்பாடையுடன் நடைப் […]

அவர்களுக்கு கடல்தான் அன்னை. கடல்தான் வாழ்வு கடல்தான் வயிற்றை நிரப்பும் அட்சய பாத்திரம் ஆனால் அந்தக் கடலே கணக்கற்றோருக்குக் காலனானான் நேற்று. “ட்சூனாமீ” என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்! ஜப்பானிய மொழியில் எழுதினால் […]

Carnatic Music Trinity

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று என்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆனால் சங்கீதம் என்பது வேறு அனுபவம்; சங்கீதக் […]

சிறு வயதில் ரேடியோதான் எனக்கு நெருங்கிய துணை. எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் – முதலில் Texla பிறகு Bush – இரவு நேரங்களில் கர்னாடக சங்கீதம் தான் குத்தகை – அதிலும் செம்மங்குடி போன்ற மூக்கு வித்வான்கள்தான் ”நீ இழு, […]

முன்பு கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது மர்லின் மன்றோ உட்பட பல நூற்றுக்கணக்கான பெண்கள் அவருடன் உறவு வைத்திருந்ததாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் சொன்னார், இவை எல்லாமே உண்மையாக இருந்திருந்தால் கென்னடிக்கு ஒரு காப்பி கோப்பையைத் தூக்கக் கூட […]

சென்ற சில ஆண்டுகளில் காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் மாண்டு போன எல்லா ஆடு, மாடு, நாய், பூனை, கொசு, மூட்டைப் பூச்சி, மரவட்டை எல்லாவற்றிற்கும் யார் காரணம் என்பது தெரிந்து விட்டதாமே! அடேங்கப்பா, ஒரே கல்லில் இவ்வளவு மாங்காயா! கின்னஸ் காரர்கள் […]