ஒரு ஆட்டோக்காரரின் மனித நேயம்

மனித நேயம் :: 2 மறுமொழிகள் »

அவசரமாக ஒரு இடத்துக்குச் செல்லவேண்டி (சென்னையில்) ஆட்டோக்காக சாலையோரத்தில் காத்திருந்தேன். சில ஆட்டோக்கள் கண்டுக்காமல் போய்க்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் லேசாக வேகத்தைக் குறைத்து நான் செல்ல வேண்டிய இடத்தை சொல்லத் தொடங்கியதுமே "புர்"ரென்று கிளம்பிச் சென்று விட்டனர். இந்த சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள தனியாக ஏதாவது சைக்காலஜி கிளாஸ் போக வேண்டும் என்று தோன்றியது. சிலர் சொல்கிறார்கள், அங்குள்ள ஆட்டோகளில் பெரும்பகுதி காவல் துறை அதிகாரிகளுக்குச் சொந்தமானது. ஆகையால் சாலையும், சட்டமும் அவர்கள் ஜேபியில் என்ற மனப்பன்மை மேலோங்கி நிற்பதால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்கிறார்கள்!

அதிருக்கட்டும். இப்போது என் கதைக்கு வருகிறேன். வெகு நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்து என்னருகில் நின்றது. ஓட்டுனர் என்னை நிமிர்ந்து பார்த்தார். "ஆகா, என்னே என் பாக்கியம்!" என்று மகிழ்ந்து நான் செல்லுமிடத்தை மரியாதையுடன் கூறினேன். தலையை இரண்டு மில்லிமீட்டர் அசைத்தார். இது போதாதா!

ஆனால் உள்ளே அமர்ந்த பிறகுதான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.

ஆமாம். நான் கண்டவரையில் பிரயாணிகள் அமரும் இருக்கைக்கு எதிரே ஒரு இரும்பு கம்பியோ, சட்டமோ, பிளேட்டோ போட்டிருப்பார்கள். ஏறும்போதே நம் முழங்கால்ளைப் பதம் பார்த்துவிடும். ஓடும்போது மற்ற குலுக்கல்களில் இது தேவலை என்றாகிவிடுவது வழக்கம்.

ஆனால் அந்த ஆட்டோவில் முழங்கால் இடிக்குமிடத்தில் குஷன் வைத்து ரெக்ஸின் போட்டு திண்டு மாதிரி அமைப்பு இருந்தது. "தோடா!" – என்ன கலி முத்திப் போச்சா, ஆட்டோக்காரரெல்லாம் பிரயாணிகளின் சுகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டனரே! ஆச்சரியம் தாங்காமல் அந்த ஆட்டோக்க்காரரை சிலாகித்து பாராட்டினேன். அவர் உடனே ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு என் பக்கம் திரும்பி பேசத் தொடங்கினார்.

"சார், ஒரு கொயந்த சார். பாவம் சார். முனாடி ஒரு பேமானி சடன் பிரேக் போட்டுட்டான் சார். இன்னா பண்றது, நானும் அடிச்சேன். பாவம் சார். கொயந்த சார். முழங்கால் பேந்து ரத்தமா கொட்டிச்சு சார். ஆசுபத்திரிக்கி இட்டாந்தேன் சார். பாவம் சார் கொயந்தெ சார். அதுக்கப்பரம்தான் குசன் போட்டேன். பாவம் சார், கொயந்தெ சார்."

அவர் கண்கள் கலங்கி இருந்தன.

நான் இறங்கி பணம் கொடுத்தபோது எண்ணிக்கூடப் பார்க்காமல் அந்தக் குழந்தையையே நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார், அந்த பண்பாளர்!

இவர்களால்தான் இன்னும் மழை பெய்கிறது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,
:: (பார்வை 916 முறை) ::

மாயமாய் நிறம் மாறும் இலைகள்

இயற்கை :: மறுமொழி இனிமேல்தான் »

வண்ணக்களை மாற்றி குளிர் காலத்திற்கு கட்டியம் கூறி வரவேற்கத் தயாராகும் இலைகள்!

உதிர்வதற்குமுன் உதிர நிறம் ஏன்! மறையும்முன் ஏனிந்த மாற்றம்!

மரங்களின் தோல்மேல் புதிய வண்ணப் பூச்சுடன் கூட, பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்ற அதிசயத்தை இப்போது காண முடிகிறது! ஏன் இந்த இலைகள் இலையுதிர் காலத்திற்குமுன் தங்கள் இயல்பான பச்சை நிறத்திலிருந்து பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறத்திற்கு மாறுகின்றன? இனி வரப்போகும் குளிர்காலத்தில் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்காது என்பதால், பச்சையத்தால் பயனில்லை என்று அதனை மறைத்து வித்தை காட்டுகிறதா இயற்கை?

விடைகளை இங்கே, இங்கே காணலாம். இதனைப் பற்றிய கவிதை ஒன்றை இந்தப் பதிவில் வாசியுங்களேன்!

குறிச்சொற்கள்: , , , , , ,
:: (பார்வை 819 முறை) ::

களைகிறது பெரியாரிச மாயை!

தேசீயம் :: 3 மறுமொழிகள் »

ஆம், ஏமாந்தது போதும்!. தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!!

இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களுக்கு வலைவீசும் இத்தகைய சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்காதீர்கள்!

  • "பெரியார் ஒரு தமிழ் இன விரோதி" என்பதை ஐயத்துக்கு இடமின்றி பல ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார், "குருவிகள்" என்னும் புனைப் பெயரில் எழுதும் ஈழத்துத் தமிழர், தன் "தேடற்சரம்" வலைப் பதிவின் மூலம்.
  • "தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" என்று அறைகூவி பெரியாரிசத்துக்கு ஒரு பெரிய "ஆப்பு" ஒன்றை அடித்திருக்கிறார், நாடறிந்த தலித் தலைவரும், சிறந்த சிந்தனாவாதியுமான சந்திரபான் பிரசாத் அவர்கள், தன் ஆங்கிலக் கட்டுரையில். அதனை தமிழாக்கம் செய்து தன் வலைப்பதிவில் இட்டிருக்கிறார் ஜாடாயு அவர்கள். தமிழர் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது!
  • "சந்திப்பு என்னும் வலைப் பதிவர்" இத்தகைய "தீரா-விட" சக்திகளின் செயல்பாடுகளை எப்படி விளக்கியிருக்கிறார் பாருங்கள்:-

    பெரியாரின் சமகாலத்தில் தஞ்சையில் நேரடி களத்தில் நின்று தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "சாணிப்பால் குடிக்காதே! சாட்டையடி அடிக்காதே! அடித்தால் திருப்பியடி, செருப்பை போட்டு நட!", என நிலப்பிரபுக்களின் மிரட்டலுக்கும், கொலை வெறிக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். பி. சீனிவாசராவ் அதன் தளகர்த்தர் – இவரும் ஒரு கர்நாடக பிராமணர்தான். ஆனால் எந்தக் கட்டத்திலும் நிலப்பிரக்களோடு சமரசம் செய்துக் கொண்டவர் இல்லை! ஏன்? பெரியார் உட்பட, திராவிட இயக்கத்தவர்கள் இதுபோன்ற நேரடி களப்போராட்டத்தில் ஈடுபட்டு அடி உதை பட்டதுண்டா? வரலாறு இருக்கிறதா?

    அண்ணாதுரை ஆட்சியின்போதுதானே கீழ்வெண்மணியில் 48 தலித் மக்கள் உயிர் பறிக்கப்பட்டது! ஏன், சமீபத்தில் திருநெல்வேலியில் மாஞ்சோலை தலித் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி 18 பேரை கொலை செய்தது யாருடைய ஆட்சி! திராவிடத் தலைவர்களின் ஆட்சியில் தலித்துக்கள் தலை நிமர்ந்து விட்டனரா?

  • திராவிட மாயை என்பது ஒரு "விஷச் செடி" என்று துகிலுறித்துக் காட்டுகிறார், தரன் அவர்கள் தன் வலைப் பதிவில்.
  • "திண்ணை" இணைய இதழில் மலர் மன்னன் அவர்கள் வடித்துள்ள இந்தக் கட்டுரை வரலாற்று ஆய்வுடன் நமக்கு இந்த திராவிட அவலத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
  • ம. வெங்கடேசன் என்னும் தலித் அன்பர் தாம் எழுதிய "ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்" என்னும் நூலில் ஈவேராவின் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களை முழுமையாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறார். ஈவேரா முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதையும், தமிழ் வெறுப்பு என்னும் விஷம் அவர் மனத்தில் பிராமண வெறுப்பைவிட இன்னும் ஆழமாக வேரூறி நின்றது என்பதையும், வேறு பல அரிய தகவல்களையும் தொகுத்து அந்த நூலில் எழுதியுள்ளார். தமிழர் அனைவரும் வாசித்து தன் மனத்திரையை விலக்கவேண்டும் என்பதற்காக இந்த அறியதொரு சேவையை தன் தாய்நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார் வெங்கடேசன் அவர்கள். இந்த மகத்தான வரலாற்று ஆவணத்தின் சில பகுதிகளை "திண்ணை" வலை இதழில் கட்டுரைகளாக வரைத்திருக்கிறார், "விஸ்வாமித்ரா" அவர்கள். அதனையும் அதன் எதிர்வினைகளையும், துணைக் கட்டுரைகளையும் இந்த சுட்டியில் காணலாம்.
  • ஈவேராவும், அவரது கூட்டாளிகளும் தலித் இன எழுத்தாளர்களையும், அவர்கள் தொடங்கிய பத்திரிக்கைகளையும் எவ்வாறு இருட்டடிப்பு செய்தனர் என்பதையும், உண்மைகளை எவ்வாறு திரிபு செய்தனர் என்பதையும் சிறப்பாக விளக்கியிருக்கிறார், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள், தன் "காலச்சுவடு" கட்டுரையில்.

தமிழர்களே, உங்கள் எதிரிகளை இனம் கண்டுகொள்ளுங்கள். தலித்துக்கள் நம்மைச் சேர்ந்தவர்கள். அவர்களை அரவணையுங்கள். அவர்களுக்கு முனைப்புடன் உதவுங்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயலாற்றும் இயக்கங்களுக்குத் துணைபோகாதீர்கள்.

வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!!

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 1023 முறை) ::

தலித்துக்களும் பிராமணர்களும் ஒரே இனம்!

தேசீயம் :: 2 மறுமொழிகள் »

உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்:-

  • டில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.
  • புது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.
  • காசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் "பண்டிட்" பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
  • ஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.
  • தென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்
  • ஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.
  • பிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.
  • தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.

இப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் "ஆதிக்க சாதியினர்" என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா?

உண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்?

  • பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்?
  • "இரெட்டைக் குவளை" முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்?
  • தலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்?
  • தலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்?

இவர்களெல்லாம் யார் தெரியுமா?

பிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் "ஆதிக்க சாதியினர்"தான்!

இவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்!

ஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்!

உ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.

தமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.

ஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து "பஞ்சமர்" என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.

ஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்?

இது இன்றைய நிலைமை – பழைய கதை அல்ல!

யார் அவர்கள்?

இனம் கண்டுகொள்ளுங்கள் தலித்துக்களே!

குறிச்சொற்கள்: , , , , , , , , ,
:: (பார்வை 889 முறை) ::

தமிழனை அந்நியனாக்கிய அரசியல்!

தேசீயம் :: மறுமொழி இனிமேல்தான் »

தமிழ்நாட்டைத் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களின் மக்கள் இந்தியை ஒருநாளும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியை ஏதோ ஒரு அரக்கன் போல் சித்தரித்து, இந்தியை கற்றுக் கொண்டால் தமிழனின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பது போலவும் பிரசாரம் செய்தனர் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். அறுபதுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, பள்ளிகளை மூட வைத்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி அந்த போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தது திமுக. அராஜகம் செய்து சிறை சென்றவர்கள் தியாகிகளாகப் போற்றப்பட்டனர். ஆனால் அதே திமுக எம்.பிக்கள் இந்திய தூரகங்கள் இந்தியை எவ்வளவு தூரம் பயன்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்யும் குழுவில் பங்கெடுத்து எல்லா வெளிநாடுகளையும் அரசு செலவில் சுற்றி வந்தனர். அதற்கு மட்டும் இந்தி பரவாயில்லை போலும்! இதுபோன்ற இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகிறார், அறிவானந்தன் என்பவர் தன் பதிவில்! மேலும் பி.எஸ்.நரேந்திரனின் "இந்தியும். நந்திகளும்" என்னும் தலைப்பிட்ட "திண்ணை"க் கட்டுரையும் வாசியுங்கள்.

"திராவிட" என்னும் சொல் தமிழ்நாடு மற்றும் ஏனைய தென் மாநிலங்களையும் சேர்த்துத்தானே குறிக்கிறது? பின் ஏன் தமிழ்நாடு மட்டும் இந்தி எதிர்ப்பில் தனித்து நிற்கிறது? இதுதான் சில குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் சதி! மக்களின் உணர்ச்சிகளை பொய்யான பிரசாரத்தினாலும், எழுச்சியூட்டும் பேச்சு வன்மையினாலும் உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் பெறும் இத்தகைய நான்காம்தர அரசியல்வாதிகள் உண்மையில் தமிழக மக்களுக்கு எத்தகைய தீங்கை விளைவித்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழக மக்களை, அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களைத் தாண்டி உள்நாட்டில் வசிக்கும் சாதாரண மக்களை தேசிய நீரோட்டதிலிருந்து விலகி நிற்கும்படியாகச் செய்து விட்டனர். இதுவரை இரண்டு தலைமுரைகளுக்கு இத்தகைய தீங்கை விளைவித்துவிட்டனர். இந்தி என்னும் மொழி இந்தியா முழுதும் பொதுவாக பேசப்படும் மொழி (தமிழகத்தைத் தவிர!). வங்காளம் போன்ற மாநிலங்களின் மொழி தனியாக இருந்தாலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தியும் சரளமாகத் தெரியும். தமிழக மக்கள் தனித்து நிற்பதால் மற்ற மாநில மக்கள் தமிழன் என்றாலே ஒரு ஐயக் கண்ணோடு நோக்குகிறார்கள். "மதராசியா, அவன் ஒரு 'அகடம் பகடம்' ஆளய்யா" என்பார்கள்!

இந்தியை கற்றுக் கொள்ளாததினால் இழப்பு யாருக்கு? இந்தி மொழிக்கா, அல்லது அந்த மொழியை பேசும் மக்களுக்கா? தமிழர்கள்தான் பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரிந்தால் இந்தியாவில் எந்த மூலைக்கும் சென்று வேலை பார்க்கலாம், தொழில் செய்யலாம், வணிகம் செய்யலாம். அதைச் செய்ய இயலாத சூழ்நிலையை உருவாக்கியது சரியா? தமிழக மக்கள் சிந்திக்கவேண்டும்.

இந்தியாவில் அறிவு ஆங்கிலம் பேசுகிறது. ஆனால் அந்த அறிவை பயன்படுத்தும் செல்வம் – அது இந்தியில்தான் பேசுகிறது!!

நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?

சிந்தித்துப் பாருங்கள்.

குறிச்சொற்கள்: , , , , , , , ,
:: (பார்வை 1017 முறை) ::

ஹூசைனுக்கு விருது முடிவை கேரள அரசு கைவிடவேண்டும்: கவிஞர் கோரிக்கை

ஹிந்து மதம் :: 5 மறுமொழிகள் »

உலகம் போற்றும் ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் என்பவர் வக்கிரம் பிடித்து அலைகிறார். இந்தத் தள்ளாத வயதிலும் இந்து மதத்தை இழிவு படுத்தி, தன் இஸ்லாமிய அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறார். அதையும் பல கோடி இந்துக்கள் பெட்டைகள்போல் சகித்துக் கொண்டு அவரைப் போற்றி வருகின்றனர். சசின் தெந்துல்கர் அவரிடம்போய் ஒரு ஓவியத்தை என்னமோ பெருதற்கறிய பேறுபோல் பெற்றுகொள்கிறார்.

அப்படி என்னதான் அவர் வரைந்தார் என்று கேட்கிறீர்களா? இதோ இந்த வீடியோ தொகுப்பைப் பாருங்கள். உண்மையான இந்தியன் எவருக்கும் இரத்தம் கொதிக்கும் என்பது திண்ணம்!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

அவருக்கு கேரள அரசு ராஜா ரவி வர்மா விருது வேறு கொடுக்கப் போகிறதாம். இதைவிட வெட்கக்கேடான விஷயம் ஏதும் நடக்கப் போவதில்லை!

ரவி வர்மா நம் கடவுட்களை எவ்வளவு அழகு பொங்க பக்தி ரசத்துடன் வரைந்திருக்கிறார்! அவர் பெயர் கொண்ட விருதை லட்சுமியையும், சீதையையும், துர்க்கையையும் நிர்வாணமாகவும் மிருகங்களுடன் புணர்வது போலவும் வரைந்து தன் வக்கிர உணர்வுகளுக்குத் தீனி யிட்டிருக்கும் ஒரு மனம் பிறழ்ந்த ஜந்துவுக்கு கொடுக்கப் போகிறதாம் கேரள அரசு. இது எதற்காக? எல்லாம் சிறுபான்மையினர் ஓட்டுக்காகத்தான்!

ஆனால் ராஜா ரவிவர்மா விருதுக்கு ஓவியர் எம்.எஃப். ஹூசைனை தேர்வு செய்ததை வாபஸ் பெற வேண்டும் என்று மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கேரள அரசுக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

இடதுசாரிகள் ஆதரவாளர் என்ற போதிலும் அதற்காக கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஆதரிக்க முடியாது. எம்.எஃப். ஹூசைனுக்கு விருது வழங்கும் முடிவு சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் செயல் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.

இந்துக் கடவுள்களை ஆபாசமாக சித்திரிக்கும் ஹூசைனுக்கு ராஜா ரவி வர்மா விருது வழங்கக் கூடாது என்று பாஜக, பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்புகள் கோரின. இதனிடையே, ஹூசைனுக்கு ராஜா ரவிவர்மா விருதை கேரள அரசு வழங்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 1405 முறை) ::

இவளல்லவோ புதுமைப் பெண்!

என்ன நடக்குது இங்கே :: 3 மறுமொழிகள் »

ஆண்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் போலவும், பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கடைசியில் சாதித்துவிடுகிறார்கள். ஆண்களின் சூரத்தனமெல்லாம் சும்மா பந்தாவோடு சரி. "Last laugh" குறிப்பிடப்படும் கடைசி வெற்றி பெண்கள் கையில்தான். இந்த உண்மை சரித்திர நிகழ்வுகள் முதல் அன்றாட நடப்புகள் வரை மீண்டும் மீண்டும் பலவிதங்களீல் நிருபிக்கப்படுன்றது.

சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தன் திருமணத்தன்று ஓடிப்போய் தன் பழைய காதலனைக் கைப்பிடித்திருக்கிறார். ஆனால் திருமண மண்டபத்தில் இவளுக்காக பட்டுப் புடவை, தாலி, மோதிரம் போன்றவற்றிற்கு ஏராளமாக செலவழித்து விட்டு, தாலியும் கையுமாக பேஸ்தடித்துக்கொண்டு நிற்கிறான் மணமகன்!

கடைசியில் அவன் காவல்துறையில் புகார் கொடுத்தபிறகு பெண்வீட்டார் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய இன்றைய தினமலர் செய்தி இதோ:-

திருமணத்தன்று ஓடிப்போனவள்!

குறிச்சொற்கள்: , , , , , , ,
:: (பார்வை 1035 முறை) ::

என்று ஒழியும் இந்த ஜாதி வெறி!

தேசீயம் :: 3 மறுமொழிகள் »

பாரதத்தின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன் நடந்துவரும் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றிய வாதங்களில், இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் பி.பி.ராவ் ஜாதி முறையில் நம் சமூகத்தைப் பிளக்கும் அபாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவருடைய வாதத்தின் சாரம்:

ஆயிரக்கணக்கான ஜாதிகளால் நாடே பிளவுப்பட்டு இருக்கும் போது இந்தியாவை ஒரு நாடு என்று அழைக்க முடியாது. ஜாதியும், சகோதர மனப்பான்மையும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகாது. எனவே இரண்டும் நிலைத்து இருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். ஜாதியத்தால் இந்துக்கள் அழிந்து விடுவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பால், இட ஒதுக்கீட்டால் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் வெறுத்து போய் உள்ளனர். அவர்களை இனம் கண்டு நக்சலைட்டுகள் தங்கள் வசம் மாற்றி வருகின்றனர். இதனால், நக்சலைட் அமைப்பு வளர்ந்து வருகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் சமூக, ஜனநாயக கட்டமைப்புக்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை வேற்றுமைபடுத்த கூடாது என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணானது. இதர பிற்படுத்தப்பட்ட மக்களில் மேல் மட்டத்தில் உள்ளவர்களே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் பலன் பெறுகின்றனர். கீழ்மட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்காதவரை ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு பலன் தராது.

அடுத்த தலைமுறையையாவது இதுபோன்ற ஜாதிப் பாகுபாடின்றி ஒற்றுமையாய் இருக்க விடுவார்களா?

:: (பார்வை 1153 முறை) ::

வந்தே மாதரம்!

தேசீயம் :: மறுமொழி ஒன்று »

நான்கு முன்னணி பாடகர்கள் இசைக்கும் நம் தேசீய உணர்ச்சி கீதம்!


YouTube - வீடியோவைக் காணுங்கள் 

:: (பார்வை 889 முறை) ::

கோவையை நினைவு கொள்வோம்!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி இனிமேல்தான் »

covai-dinamalar

நன்றி : தினமலர்.

:: (பார்வை 722 முறை) ::

 

21-ல் இது-10« முதல்...89101112...கடைசி »
WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in

Bad Behavior has blocked 5451 access attempts in the last 7 days.