உள்ளங்கை

பெண்குலத்தின் கோலம்
வயிற்றுப் பிழைப்புக்காகஅயல் நாட்டில் வேலை செய்து நொந்து நூலாகும் இந்தியர்கள் தங்கள் உற்றார் உறவினரால் வெறும் பணம் காய்ச்சி மரமாகத்தான் கருதப்படுகிறார்கள். என்.ஆர்.ஐ என்றாலே இங்குள்ள கடைக்காரர்கள்கூட விலையை ஏற்றிவிடுகிறார்கள். ஆனால் எவ்வளவுதான் பிறருக்காக தங்கள் கைக்காசை சிலவு செய்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் உண்மையான உணர்வுபூர்வ உறவுகளை அவர்கள் பெறுவதில்லை.

இந்த அவல நிலை இப்போது இன்னும் மோசமடைந்திருக்கிறது, திருமணம் என்னும் பெயரில். இன்றைய இந்துஸ்தான் டைம்ஸில் வந்துள்ள செய்தியைப் பாருங்கள்:

ஜெயா என்னும் பெண் துவாரகையில் வசிக்கிறார். இவருடைய கணவர் அமேரிக்காவில் இருக்கிறார். கணவர் வெளியூரில் இருப்பதால் அந்த பெண்மணிக்கு ஆணுறவு தேவைபட்டிருக்கிறது. மாட்டியவர் தீபக் குமார் என்னும் டிரைவர். ஆனால் அந்த டிரைவர் இவருடைய தொடர்ந்த கள்ள உறவுக்கு இணங்காமல் இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள முடிவு செய்கிறார்.

வந்தது கோபம் அந்தப் பெண்குலத்தின் சிகரத்திற்கு!! இரணடு அடியாட்களை அமர்த்தி அந்த தீபக் குமாரின் முகத்தின்மேல் ஆஸிட் ஊற்றச் செய்கிறார். பாவம் அந்த டிரைவர், தன் ஒரு கண்ணையே இழந்து நிற்கிறார்.

காவல்துறை அந்தப் பெண்மணியையும் அவருடைய அடியாட்கள் இருவரையும் கைது செய்துள்ளது.

என்.ஆர்.ஐ இளைஞர்களே, இதுபோன்ற திருமணங்கள் உங்களுக்குத் தேவைதானா? உங்களை நினைத்தால் "ஐயோ பாவம்" என்றுதான் தோன்றுகிறது!

யார் குற்றவாளி?
தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன.

இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். "எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு அறிகையை அளிப்போம்" என்று கூறிவிட்டனர். அந்த அறிக்கை என்ன்வாகும்? இதற்குமுன் நடந்த பல்வேறு விசாரணை அறிக்கைகளின் கதிதான் இதற்கும்.

ஆனால், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார்? மத்திய அரசும், மத்திய அரசில் சுகாதாரப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரும் இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று கூறிவிட்டனர். மாநில அரசும் கைவிரித்தாகி விட்டது. நர்சுகள்தான் தவறு செய்துவிட்டனர் என்றனர். அவர்களும் இது அநியாயப் பழி எங்கள் மேல் என்கின்றனர்.

குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் இந்த அறிக்கைகளைப் படித்து திருப்தி அடைய வேண்டியதுதானா!

பின் யார்தான் குற்றவாளி? இறந்த குழந்தைகளா!!

சும்மா பொழுது போக்கு!
அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters).

இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!

டான்ஸ் மாஸ்டர்!

பறக்கும் பெங்குவின்கள்!

உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!

கை விரலே கைப் பேசியானால்!

என்ன, ஜாலியா பொழுது போச்சா!

வண்ணதாசனின் கைவண்ணம்
ஆனந்த விகடனைக் கையிலெடுத்தவுடன் என் கண்கள் தேடுவது வண்ணதாசனின் கைவண்ணத்தில் கோலமிடும் "அகம் புறம்" பகுதிதான். நம் கண்முன்னே தோன்றும் சாதாரண மனிதர்கள்கூட அவர் எழுத்துக்கள் மூலம் புதிய தோற்றமும் பொலிவும் பெற்று தனிச்சிறப்புடன் விளங்குவதுபோல் தெரிகிறார்கள். அன்றாடம் நாம் காணும் இயற்கைக் காட்சிகள்கூட அவருடைய எழுத்துக்களால் வடிக்கப்படும்போது புதுப் பொலிவுடன் தோற்றமளிக்கின்றன. அவருடைய வர்ணனைகள் எவ்வித சொல் அலங்காரங்களும், பாசாங்குகளுமின்றி நேரடியாக நம்மிடம் உரையாடும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

தன் பள்ளி நாட்களைப் பற்றியும், அப்போது தம்மோடு பழகிய முகங்கள், மனத்திலிருந்து நீங்காத சின்னஞ்சிறு நிகழ்வுகள் இவைகளைப் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் அவர் நம்முடைய மனத்தில் ஆழப் பதிந்திருக்கும் நினைவுகளையும் கிளர்ந்தெடுத்து மீள்காணச் செய்கிறார். அவருடைய அந்தப் பின்னோக்கிய பயணத்தில் நம்மையறியாமலேயே நாமும் பங்கெடுத்துச் செல்கிறோம்!

வெங்கட்டரமணன் என்று ஒரு சகா. மூக்கு நீளமாக இருக்கும். அவனுடைய கையெழுத்து அவ்வளவு அழகாக இருக்கும். அப்புறம்தான் என்னுடையது எல்லாம். என் மூக்கு பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது.

கீவளூர் போர்டு ஹைஸ்கூலில் என் பக்கத்து டெஸ்க் உத்திராபதி நினைவில் வந்து தன் தீர்க்கமான மூக்குடன் எட்டிப்பார்க்கிறான்.

அப்புறம் என் மூக்கு பற்றியும் பேசாமல் இருப்பது நல்லதுதான்!

இந்த வரிகளை வாசிக்கும்போது என் கண்கள் பனிக்கின்றன, ஏனென்று தெரியவில்லை:

இப்போதுகூடக் கேட்கிறது, ஆழ்வாரப்பனின் "செந்தமிழ்த் தேன்மோழியாள்" பாட்டு. "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே" என்று ஆழ்வாரப்பன் பாட ஆரம்பிக்கும்போது, அவன் கண்கள் மூட ஆரம்பித்து தலை பின்னுக்குச் சாய்ந்துவிடும். முழுப் பாட்டையும் அப்படியே பாடி முடித்த பிறகுதான் கண் திறந்து, முகம் சமதளத்துக்கு வந்து எங்களை எல்லாம் பார்க்கும். நாங்கள் கையைத் தட்டிக் கொண்டே அவனைப் பார்ப்போம்.எனக்கு அவன் பாடின பிறகு கைதட்டும் போதெல்லாம் ஒரு மாதிரி அழுகை வரும்.

… ஆழ்வாரப்பனைக் காணவே காணோம். பாட்டை நம்மிடம் விட்டுவிட்டுப் பாடியவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.

நயம் கொண்ட எழுத்து என்பதற்கான அடையாளங்கள்:-

வேறு வேறாக எதையுமே அடையமுடியாது போல. முதலில் அடைந்ததையே மீண்டும் மீண்டும் அடைகிறோம். அல்லது, இப்போது அடைந்ததன் ஒத்திகைகளையே ஏற்கனவே அடைந்து வந்திருக்கிறோம். அப்படித்தானா.

அவருடைய ஆக்கங்களை மேலும் வாசித்தபின் வரைகிறேன்.

நிரந்தரப் பாகுபாடுகள்
இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி இது:-

சென்னை: கடந்த 20 வருடங்களாக நிலப் பட்டா தர மறுக்கும் அதிகாரிகளால் மனமுடைந்த முதியவர், தான் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, கோட்டைக்கு வந்த முதல்வரின் காரின் மீது வீசினார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று துவங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி வந்தார். முதல்வரின் "கான்வாய்' 9.30 மணிக்கு கோட்டைக்கு வந்தது. நுழைவாயிலுக்குள் நுழையும் போது, அருகில் உள்ள பூங்காவில் இருந்து முதியவர் ஒருவர் ஓடி வந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுதாரிப்பதற்குள், "தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கிறார்கள், முதல்வரிடம் புகார் கொடுத்தும் லஞ்சம் கேட்கிறார்கள்' என்று கத்தியபடியே கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து, முதல்வரின் கார் மீது வீசினார். காற்றில் பறந்த வேட்டி, பாதுகாப்பு காரின் மீது விழுந்தது.

முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் முதியவரை பிடித்து, துறைமுக போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டி.டி.கே., நகரில் வசிப்பவர். பெயர் நாராயணன்(64); விவசாயி. இவருக்கு 60 சென்ட் நிலம் உள்ளது. அந்நிலத்திற்கு பட்டா கேட்டு, இருபது வருடங்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துள்ளார். லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா தருவோம் என்று அதிகாரிகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், இவரது மகள் வாங்கும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்துகிறார். முதல்வரிடம் புகார் கொடுத்தும், பட்டா கிடைக்கவில்லையே என்ற வேதனையில் இப்படி செய்து விட்டேன்' என்று தெரிவித்தார். ண்எனினும், கோட்டை பாதுகாப்பில் "குறட்டை' விட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகள் முடிவு செய்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் யார் யார், என்ற விவரங்களை சேகரித்துள்ளனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக போலீசார் விசாரித்து வருகின்றனர்

இதை வாசிக்கும்போது தெரியவரும் ஒரு விசனத்துக்குறிய உணமையைப் பார்த்தீர்களா:

இது ஜனநாயக நாடு. மக்களுக்குச் சேவை செய்யவே மந்திரிகள் உள்ளனர். ஆனால் ஒரு சாதாரணக் குடிமகன், தன் கோரிக்கையை எற்போர் யாருமில்லை, பிரச்னையைத் தீர்ப்பார் யாருமில்லை, நியாயம் எங்கும் கிட்டவில்லை என்னும் விளிம்புக்குத் தள்ளப்பட்ட நிலையில் இந்த முறையைக் கையாண்டிருக்கிறார். வீதியெங்கும், "நான் உங்கள் ஊழியன், உங்களுக்காகவே வாழ்கிறேன், தமிழினக் காவலன்" என்றெல்லாம் அறைகூவும் பிரம்மாண்டமான போஸ்டர்களையும், கட் அவுட்டுகளையும் நம்பி அந்த அப்பாவி மனிதர் முதல்வர்முன் தன் குறையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த நிகழ்வுக்குப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், "பாதுகாப்பு என்னவாயிற்று, போலீஸ்காரர்கள் என்ன செய்தார்கள்" என்ற நோக்கில்தான் மேல்நடவடிக்கை எடுக்க முயல்கின்றனரேயன்றி, அந்த குடிமகனின் பிரச்னையை தீர்ப்பதற்கான செயல்முறையைப் பற்றி யாரேனும் (முதல்வர் உட்பட) மூச்சுவிடுகிறார்களா பாருங்கள்! அது ஒரு பொருட்டான விஷயமேயில்லை; முதல்வர் கார்முன் ஒரு சாதாரண மனிதன் வருவதாவது, இது தெய்வக் குற்றம், அரசாங்கக் குற்றம் போன்றதல்லவா! என்ன கொடுமை இது!

இயற்கையின் விசித்திரத்தைப் பாருங்கள் - ஒரு சாராரின் ஆதிக்க உணர்வையும் எதேச்சாதிகாரத்தையும் எதிர்த்து மக்கள் கொதித்தெழுந்து அதனைக் கட்டுடைக்கின்றனர். அதன்பின் இன்னொரு சாரார் தன் கையில் ஆதிக்கத்தை எடுத்துக் கொண்டு ஏனையோரை அடிமைப் படுத்துகின்றனர். பெயர்கள்தான் வேறாக இருக்குமேயன்றி வழிமுறை ஒன்றுதான். முன்பு அரசர் இருந்தார். இப்போதும் இருக்கிறார். ஆனால் அவர்க்குப் பெயர் முதன் மந்திரி (அ) பிரதம மந்திரி. ஆனால் பழைய முறையைவிட இந்த ஜனநாயகம் இன்ன்னும் மோசம். முன்பு ஒருநாட்டுக்கு ஒரு ராஜாதான். இப்போது பல ராஜாக்கள், பல பெயர்களில்.

அடித்தள மக்கள் அதேஅடித்தளத்தில்தான் உழல்கின்றனர். "இந்தா, பிடி"-யென்று வாக்குறுதிகளையும், உணர்வெழுச்சியூட்டும் சொல்லாடல்களையும் வண்டிவண்டியாக அள்ளி வீசுவார்கள். அவ்வளவே. படிநிலைப் பாகுபாடுகள், வர்க்க மேலாண்மை போன்றவை எல்லா காலகட்டத்திலும் ஏதாவது ஒரு உருவத்தில் இருந்தே தீரும். இதுதான் இயற்கையின் நியதி போலும்!

தான் தனது எனும் பெண்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் தங்கள் வருங்காலக் காணவன்மார்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்கள் பாருங்கள்! கருப்பாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வெண்டும், ரவுடி போல இருக்க வேண்டும், தன்னை மட்டும் பார்க்க வேண்டும், வெளியாரிடம் தன்புருஷன் பெரிய படிப்பு படித்திருக்கிறான் என்று பெருமையாகப் பேசிக்கொள்ளும்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்குகிறார்களேயன்றி, தான் எப்படி அவனுடன் ஒத்துப்போய் குடும்பம் நடத்துவேன் என்பதைப் பற்றி ஒருவரும் சொல்லக் காணோம்.

அனைத்தையும் கேட்டபிறகு நமக்குத் தெளிவாகத் தெரிவது, இக்காலப் பெண்கள் தெரிவு செய்யும் துணைவன் தன் வீட்டில் வளரும் நாய் போல் பெண்கள் விருப்பங்களை ஒட்டி நடந்து கொள்ள வேண்டும். அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் இருக்கக் கூடாது.

மணவழ்வு என்னும் ஒரு சமூகக் கட்டமைப்பு இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறிர்கள்?

YouTube - வீடியோவைக் காணுங்கள் video link

மறைக்கப்படும் உண்மைகள்
2008-03-13 வியாழனன்று மயிலை பாரதீய வித்யாபவன் அரங்கில் "விஜில்" அமைப்பு நிகழ்த்தும் கூட்டமொன்றில் சுப்பிரமணியம் சாமியும், இராதாகிருஷ்ணனும் பேசுவார்கள் என்று செய்திதாளில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு, மழை பெய்தாலும் ப்ரவாயில்லை என்று அவ்வரங்கிற்குச் சென்றேன். முதல் உந்துதல் சுவாமியின் பேச்சை நேரில் கேட்கலாமென்றுதான். ஏனென்றால் அவரை நான் இதுவரை நேரில் கண்டதில்லை; தொலைக்காட்சியில்தான். அவர் ஒரு காமெடியான அரசியல்வாதி, சுவாரசியம் மிக்கவர். எனதான் சொல்கிறார் பார்ப்போமென்னும் ஆர்வம்.

அரங்கின் வாயிலில் அமைப்பாளர் திருமதி. இராதாராஜன் எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார். ஆங்கேயிருந்தோரிடமிருந்து அறிந்து கொண்ட செய்தி, கடைசி நிமிஷத்தில் சுவாமியும், இரதாகிருஷ்ணனும் வரமறுத்துவிட்டார்களென்பதுதான். பாவம், அரசியல்வாதிகளுக்கு பலவித சோலிகள் இருக்கும். நம்மூரில் அரசியல் என்பது நேர்க்கோட்டு சிந்தனை வயப்பட்டதன்று. இணைவு, பிரிவு, பின் பிணைவு இப்படி பன்னோக்குப் பார்வையில் போய்க் கொண்டிருக்கும். சிறுவர்கள் கையில் வைத்து உருட்டிப் பார்க்கும் "கலைடாஸ்கோப்"பில் எப்படி விதவிதமாக வண்ணக் கோலங்கள் மாறிவருகிறதோ அதுபோல்தான் அரசியல் வியூகங்களும்!

முக்கிய பேச்சாளர்கள் வரவில்லையே, என்ன செய்யலம் என்று அமைப்பாளர்கள் யோசித்திருக்கும் வேளையில் வந்திருந்தோர் அனைவரும் அந்த அரசியல்வாதிகள் இருவரும் இல்லாமலேயே கூட்டத்தை நடத்துங்கள் என்று ஒருமித்துக் கேட்டுக் கொண்டதால் கூட்டம் தொடங்கியது.

திருமதி ராதா ராஜன் லலித் கலா அகாடமியில் அவுரங்கஜீப் பற்றிய படக் கண்காட்சியில் நிகழ்ந்த அராஜகங்களைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். அவர் கூறியவற்றில் என் நினைவிலிருப்பவை:-

உதவிக் கமிஷனர் முரளி சட்டத்திற்குப் புறம்பாக மூன்று பெண்களை இரவில் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த நிகழ்வும், வலுக்கட்டாயமான கண்காட்சி முடுதலும், படங்களை உடைத்ததும்  மேன்மை தங்கிய ஆற்காடு நவாப் அங்கு வந்து சென்றபின்தான் நடந்திருக்கின்றன.

உதவிக் கமிஷனர் திரு. முரளி முன்பு கோவையில் நடந்த கலவரங்களின்போது அங்கு பணியாற்றியவர். அவருக்குத் தொடர்ந்து தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்துவருகிறது.

காவல் ஆணையருக்கும், டிஜிபிக்கும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக முரளி இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறார் என்பது ஆணையரிடம் நான் பேசியதிலிருந்து தெரியவந்தது.

ஆற்காட்டு நவாபுக்கு ஒவ்வொரு ஆண்டும் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பூரணகும்ப மரியாதை அளித்துவருகிறார்கள். அந்த நேரத்திலெல்லாம் தவறாமல் "எங்கள் முன்னோர்கள்தான் இந்தக் கோயிலின் தெப்பக்குளத்திற்கு நிலத்தை வழங்கனார்கள்" என்று பெருமையடித்துக் கொள்கிறார். நான் கேட்கிறேன், "இந்த நிலத்தை உங்கள் முன்னோருக்கு கொடுத்தது யார்? இது எங்கள் பூமியில்லையா?" இது ஏன் நம் மக்களுக்குப் புரியவில்லை?

இந்த ஆற்காடு நவாப் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார், பழைய சரித்திர நிகழ்வுகளைப் பற்றிப் பேசக்கூடாது என்றும் அதனால் மத நல்லிணக்கம் கெட்டுவிடும் என்றும். அவரும் நானும் முன்பு ஒரு முறை ஒரு அமேரிக்க தூதுக்குழுவுடன் நேர்காணலில் பங்கெடுக்கும்போது, "நான் பாப்ரி மஸ்ஜித்தை பற்றிப் பேசுவேன்" என்று மேஜையில் அடித்து ஓங்கிப் பேசினார். அவருக்கு பாப்ரி மஸ்ஜித்தைப் பற்றிப் பேச உரிமையுண்டென்றால் அவுரங்கஸீபைப் பற்றியும் பேச எனக்கும் அதே உரிமை உண்டு.

மன்னர் மானியங்களும், பட்டங்களும் அனைத்து முன்னாள் மன்னர்களுக்கும் நிறுத்தப்பட்ட போதிலும், இவருக்கு மட்டும் இன்னமும் நவாப், இளவரசர் போன்ற பட்டங்களைத் தரிக்க ஏன் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.

ஜம்மு கஷ்மீருக்கு என்று தனி அரசியமைப்புச் சட்டம் (constitution) இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்து ஜம்முவில் குடியேறினவர்கள் இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலில் ஓட்டளிக்க இயலுகிறது. ஆனால் அவர்கள் ஜம்மு கஷ்மீர் மாநிலப் பிரஜகளாக ஆக முடியாது. அங்கு தேர்தல்களில் பங்களிக்க இயலாது.

இதற்கெல்லாம் மேலாக ஒரு வேடிக்கையான விஷயம், ஜம்மு கஷ்மீர் மாநிலம் தன் அரசியலமைப்பில் "மதச் சார்பின்மை" (secularism) என்பதையே அங்கீகரிக்கவில்லை!

காந்தி, "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் துவங்கியபோது அவரை சில வெளிநாடு நிருபர்கள் பேட்டி கண்டார்கள். அப்போது அவர், "இந்தியாவில் இந்து பெரும்பான்மை அரசு அமையாதவாறு நானும் என்னைச் சார்ந்தவர்களும் பார்த்துக் கொள்வோம். மேலும் இந்துக்கள் பெரும்பான்மை பெற இயலாதவாறு ஒரு கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்துவோம். முஸ்லீம் லீக் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் இந்துக்களின் பிரதிநிதியாக ஒருபோதும் இருக்காது" என்றார். அதே நடைமுறையைத்தான் நேருவும் கடைப்பிடித்து இந்துக்களை இன்றிருக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டனர்.

இந்துத்துவம் என்பது இந்த பூமி சார்ந்தது. இந்த நாட்டுக்ககே உரியது. இந்திய இறையாண்மை, தேசப்பற்று, நம் இந்திய மண், எல்லை, சமூகம் இந்த எல்லா பரிமாணங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது (Indian nationhood, polity, statehood, dharma, culture, ethos et al). இதில் எதனையும் தனியாகப் பிரித்து நோக்கக் கூடாது.

அவருடைய பேச்சு, அவருடைய ஆளுமை, அவருடைய துணிவு இவையெல்லாம் காணும்போது இவர் தலைமையேற்று ஒரு சாதாரண இந்துவுக்கும் தன் மதத்தின்மேல் ஒரு மதிப்பு, பிணைப்பு, ஆர்வம், ஒரு குழு மனப்பான்மை ஆகியவைகளைத் தோற்றுவிக்க இயலுமானால் நம் பாரத தேசத்தின் எதிர்காலம் பொற்காலமாய்த் திகழும் என்பதில் ஐயமில்லை.

நியூஸ் டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் சிறப்பாக உணர்ச்சி ததும்பப் பேசினார்.

பின்னர் ஆடியன்ஸிலிருந்து ஓரு ஆர்.எஸ்.எஸ் சேவக் மிக ஆணித்தரமாக இந்து ஓட்டு வங்கியை கட்டுக் கோப்பாக அமைக்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றிப் பேசினார். பின்பு அவுரங்கஜீப் கண்காட்சியில் தொண்டராகப் பணியாறிய ஒரு பெண்மணி அங்கு நிகழ்ந்த வற்றை எடுத்துரைத்தார்.

முதலில் ஆங்கிலத்தில் உரைகள் தொடங்கினாலும் பிறகு தமிழில் தொடர்ந்தன.

கூட்டம் தொடங்கும்போது சுமார் 60 நபர்கள். முடியும் தருவாயில் 80-90 பேர் இருந்தனர். அதில் பாதி இளைஞர்கள். கடைசிவரை யாரும் எழுந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சபையிலிருந்த பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். முடிவில் என் எதிர் வரிசையில் இருந்த பெண்மணி தேசிய கீதத்தைப் பாடவில்லை என்று என் அருகிலிருந்த இளைஞர் சண்டைக்குப் போய்விட்டார். அவர் மனதிற்குள் பாடியிருப்பார் என்று நான் சமாதானம் செய்யவேண்டியிருந்தது.

சுட்டிகள்:-

அவுரங்கஜீப் கண்காட்சி நிகழ்வுகள்:-

ஃபாக்ட் அமைப்பு செய்தி

அவ்ட்லுக் செய்தி

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

சுழியம் வலைப் பதிவில் படங்களுடன் செய்தி

சுந்தரம் அவர்களின் கருத்துக்கள்

அருணகிரியின் திண்ணைக் கட்டுரை

எம்.எம்.தண்டபாணி தேசிகர்
எம்.எம். தண்டபாணி தேசிகர்(1908 - 1972)

பரம்பரை பரம்பரையாக வந்த ஓதுவார்கள் குடும்பத்தில் பிறந்த முருகையா தேசிகர் குமாரர் முத்தையா தேசிகரின் மகன் தண்டபாணி தேசிகர். கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடம் 4 ஆண்டுகள் பயின்று இசைஆர்வம் மற்றும் புலமையயை வளர்த்துக் கொண்டவர். 'பட்டினத்தார்' தேசிகர் நடித்து 1935-ல் வந்த திரைப்படம். பின் ஜெமினி தயாரித்த 'நந்தனார்' படத்திலும் இவர் பாடி நடித்துள்ளார். திருமழிசை ஆழ்வார் (1948), 'முதல் தேதி' (1955) படங்களிலும் தேசிகரின் குரல் ஒலித்தது.

தண்டபாணி தேசிகர் தனது வெண்கலக் குரலில், "ஜகஜனனீ ", "என் அப்பன் அல்லவோ…", "தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்", "வழிமறித்து நிற்குதே", "காண வேண்டாமா" முதலான பாடல்களை பாடி நடித்து ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர்.

தேஷ் ராகத்திலமைந்த இந்தப் பாடலை (பாரதிதாசன் இயற்றியது) தேசிகரின் இழையும் குரலில் செவி மடுக்கும் எவருடைய உள்ளமும் உருகிடாதோ!:-

"துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்கு

இன்பம் சேர்க்க மாட்டாயா? - நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் தீர்க்க மாட்டாயா? - கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?"

அண்ணாமலை பல்கலைக் கழக்கத்தின் இசைததுறைத் தலைவராகவும் தேசிகரவர்கள் பணியாற்றியுள்ளார். பல கீர்த்தனைகாளையும் அவர் புனைந்துள்ளர்.

தென்றல் இணைய இதழில் "ஆதி" அவர்கள் எழுதியுள்ள தேசிகரின் வாழ்க்கை வரலாற்றில் கண்டவை:-

சுருதி சுத்தமான வெண்கல சாரீரம், நெடில் - குறில் போன்ற சொற்களின் தன்மைகளை நன்குணர்ந்து பாடும் இயல்பு, சாகித்தியத்தின் பொருள் உணர்ந்து உணர்ச்சிபூர்வமாகப் பாடும் தன்மை, சாதாரண தமிழ் மக்களும் தமது மொழியில் கேட்டுணர்ந்து அனுபவிக்கும் பாடல்களைப் பாடும் திறன் போன்றவை தேசிகரின் தனித்தன்மைகள். தேசிகரின் இசைக்கு தமிழகமெங்கும் வரவேற்பும் உற்சாகமும் பரவலாகவே இருந்தது.

ஒரு சிலருடைய ஏகபோக உரிமை அல்ல இசை. மாறாக சாதாரண மக்கள் தமது மொழியில் சிந்தனையில் தமது வாழ்வியல் புலங்களுடன் இரண்டறக் கலந்த இசை கோலமாக அனுபவிக்க இனங்காண 'இசை விருந்து' இருக்க வேண்டும். இதற்கான 'இயக்கம்' வெகுண்டெழுந்து செயற்படுவதற்குக் கூட தேசிகரின் இசை நிகழ்வுகள் சாதகமாக அமைந்தன. தமிழர்களிடையே தமிழிசையின் பரவலுக்கும் ஊக்கியாக இருந்து செயற் பட்டவர்.

சிதம்பரத்தில் நிகழ்ந்த தமிழிசை மகாநாட்டின்போது அண்ணமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு மண்டபத்தில் நடந்த தண்டபாணி தேசிகரின் கச்சேரியைப் பற்றி பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதியது [1]:-

… இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீ தண்டபாணி தேசிகர்; பிறகு ஸ்ரீ தியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழிசையில் எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகியது. கம்பிரமான சாரீராம்; ஒலிக் கருவி இல்லாமலேயே மண்டபம் முழுதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகானுபவம் ததும்பிற்று.

ஸாகித்யத்தின் சிறப்பைப் பூரணமாக உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்லவேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை; ராக விஸ்தாரங்களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நேடுகப் பாடிக்கொண்டே போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம், ஒரு விருத்தம் - இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாகப் பாடிவந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுததாசர் கீர்த்தனங்கள் சாகித்யத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாக இருந்தன. கரகரப்ரியாவில் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்ற தேவாரத்தைப் பாடியபோது, எல்லோருடைய உள்ளமும் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்தபோது, "ஏன் முடிக்கிறார்?" என்று தோன்றியது.

"நந்தனார்" மற்றும் "திருமழிசை ஆழ்வார்" திரைப்படங்களில் தேசிகரின் பாடல்களைக் கேட்க இங்கே செல்லுங்கள்:-

மியூசிக் இந்தியா தளம்

சினி ஃபோக்ஸ் தளத்தில்

ராகா வலைத்தளம்

[1] "சங்கீத யோகம்" - தமிழ்ப் பாடல் இயக்கம் பற்றி்ய கல்கியின் கட்டுரைத் தொகுப்பு - தமிழ்ப் பண்ணை: 1947; வானதி: 1998.

மிஸ்டு கால்!
என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு!

"ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க", இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து ரூபாய்க்கு என்ன பேசமுடியும் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஐயத்தைப் போக்க கடைக்காரரிடமே "பத்து ரூபாய்க்கு எவ்வளவுங்க டாக் டைம்" என்று கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்கள் எல்லோரும் கலைந்து சென்றபின் அவர் மெதுவாக, "பத்துரூபாய்க்கு ஐந்து ரூபாய்தான் டாக் டைம்" என்று எனக்கு அறிவூட்டினார். அடுத்து நான் கேட்க நினைத்த வினாவுக்கு அவர் விடையாகச் சொன்னது இது:

" இதுங்க சும்மா 'மிஸ்ஸீடு கால்' தான சார் கொடுக்குதுங்க" என்றார்!

அது சரி. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் எப்போது பார்த்தாலும் காதிலிருக்கும் கம்மலோடு சேர்த்து கைப்பேசியையும் ஒட்டிக்கொண்டு, "கெக்கே கெக்கே" என்று சிரித்துப் பேசியவண்ணம்தானே இருக்கிறார்கள். அது எப்படி - என்று யோசித்தேன். பிறகு எனக்குப் பழக்கமான ஒரு பெண்ணிடமே இதைப்பற்றிக் கேட்டேன். "இது கூடத்தெரியாதா உங்களுக்கு அங்க்ஸ்? நாங்க மிஸ்டு கால் கொடுப்போம். சில பைத்தியக்காரப் பசங்க தன் கைக்காசு செலவு பண்ணி எங்க கிட்ட கடலை வறுப்பானுங்க" என்றாள்!

எஸ்.எம்.எஸ்ஸுக்கு அடுத்தபடி இந்த மிஸ்டு கால்கள்தான் செல்ஃபோனின் அதிகபட்ச பயன்பாடு என்பது எனக்குத் தெரியவந்தது அப்போதுதான். "நீ அந்த ஸ்டாப்பிங்ல எறங்கியதும் ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" - இது சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் உரையாடல்.

ஸெல் ஃபோனைக் கண்டுபிடித்தவர்களும், அதன் பயன்பாட்டு சேவை நடத்துவோரும் மிஸ்டு கால்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா!

உங்களுக்குத் தெரிந்த வேறு மிஸ்டுகால் பயன்பாடுகளைப் பற்றி எனக்கும் தெரிவியுங்களேன். பில் ரொம்ப ஆகுது!!

இலவச மென்பொருள் சொல்லாடற் குழப்பங்கள்!
கணிப்பொறி ஏண்றாலே விண்டோஸ் என்னும் நிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். "லைனக்ஸ்"/"லினக்ஸ்" என்னும் இயங்குதளத்தின் (Operating System) பயன்பாடு  தற்போது மிக வேகமாக வளர்ந்து வருவது பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் அந்தக் களத்தில் சென்று சிறிது எட்டி நோக்கினால் நாம் மனதை குழப்பத்திலாழ்த்தும் வகையில் பலதரப்பட்ட சொல்லாடல்கள் கையாளப்படுகின்றன. உதாரணமாக:

இலவச மென்பொருள் (Free Software)

தனியுரிமை மென்பொருள் (Proprietary Software)

மூடிய மூல மென்பொருள் (Closed Source Software)

மூடிய ஆணைமூல மென்பொருள் (Closed Source Code)

திறந்த மூல மென்பொருள் (Open Source Software)

திறந்த ஆணைமூல மென்பொருள் (Open Source code)

கட்டற்ற மென்பொருள் (Software without any control- Totally free)

கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள் (FOSS - Free and Open Source Software)

மேற்சொன்னவை அனைத்தும் மிகுந்த தத்துவ, கோட்பாட்டு சார்ந்த பொருளுடையவைகளாகவும், அவற்றைக் கையாளும்போது ஏதேனும் தவறான சொல்லாட்சியை அமைக்க நேர்ந்தால் அது பலர் மனங்களில் பெருங்குழப்பம் விளைவிக்கும் தாக்கம் கொண்டவையாகவும் அமைவது ஒரு நிதர்சனமான உண்மை. இத்தகைய சொற்பயன்பாடு குறித்த தெளிவான விளக்கங்களை தமிழ்க் கணினி அமைப்பில் பெருந்தொண்டாற்றிவரும் திரு. மு.மயூரனின் பதிவில் வாசித்து இதுகுறித்த தங்கள் புரிதல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அவர், "GNU/Linux - சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!" என்னும் தூக்கிவாரிப்போடும் தடாலடி தலைப்புடன் பல விளக்கங்களை அளித்திருக்கிறார்.

இதைப் படித்தபின்னும் என்ன, தலை சுற்றுகிறதா? முதலில் அப்படித்தான் இருக்கும். இங்கேயே சற்று கைநனைத்து, சிறிது பங்களியுங்கள். நாளடைவில் நீங்களே இத்தகைய பரிபாஷையில் வல்லுனராகிவிடுவீர்கள்! ஆனால் இதனைத் தாண்டி அடுத்த திறக்கில் லைசன்ஸ், GPL, CC, Linus Torvalds vs Richard Stallman - இதுபோன்ற சிக்கல்களில் சிக்கி அல்லுசில்லாகி சுருண்டு மடங்கினால் நான் ஜவாப்தாரியல்ல!