செப் 27
இன்று இந்தியாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கணினி மென்பொருள்தான். "எல்லா மார்க்கங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன, எல்லா நதிகளும் ஒரே கடலில் கலப்பது போல" என்கிற cliché (இந்தக் கூற்றை எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை - நீ வேண்டுமானால் என்னுடன் சேர்; அப்போதுதான் நாம் இருவர் வணங்கும் கடவுளும் ஒருவரே எனக்கொள்ளலாம் - என்பது சிலர் வாதம்!) போல எந்தப் படிப்பு படித்தாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்திலோ அல்லது மென்பொருளைக் கையாண்டு வேறுபல சேவைகள் செய்யும் நிறுவனத்திலோ வேலைக்கு சேருவதுதான் எல்லோருடைய குறிக்கோளும். அப்பத்தான் நாலு காசு பார்க்க முடியும், திருமண மார்க்கெட்டிலும் மதிப்பிருக்கும். இதுதான் இன்றைய நிலை. பெரிய நிறுவனங்கள், ஒருசில பெயர் பெற்ற கல்லூரிகளுக்கே சென்று மெகானிகலோ, எலெக்ட்ரிகலோ, பாறாங்கல்லோ (அல்லது டி.வியில் வரும் "இந்த நிகய்ச்சியை அலிப்பவர்கல்"லோ!) யாராயிருந்தாலும் வலைபோட்டு வாரி எடுத்து (troll) சேர்த்துக்கொள்கிறார்கள்.
இந்தத்துறையில் பெருமளவில் வேலை பார்ப்பவர்கள் (மருத்துவர்களுக்கு ஸ்டெதெஸ்கோப் போல இவர்களுக்கு அடையாள அட்டைகள் - இரண்டுமே கழுத்தில்தான் தொங்கும்!) கூட்டம் நிறைந்திருப்பது பெங்களூரில்தான். அமெரிக்காவிலிருந்து outsourcing செய்யவேண்டும் என்று நினைத்தவுடன் அவர்கள் மனதில் முதலில் தோன்றும் இலக்கு பெங்களூரே. இந்தியாவின் பல மானிலங்களிலிருந்தும் இங்கு வந்து e-குப்பை கொட்டுகிறார்கள்! மேலும் அமேரிக்காவில் நித்திய கண்டமாக எப்போது pink slip கொடுப்பார்கள் என்ற பயத்தில் தூக்கத்தை இழப்பதைவிட அங்கிருந்து ஓடும் வேலைகளை இங்கு வந்து பிடித்துவிடலாம் என்று நாடு திரும்பும் techies கள் வீடு தேடுவதும் பெங்களூரில்தான்! இதனால் ஏற்பட்ட விளைவுகள் சில:- மிகுதியையும் வாசிக்க »
:: (பார்வை 775 முறை) ::
செப் 24
"விண்டோஸ்" இயங்குதளத்தை உருவாக்கும் "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனம் இப்போது ஒரு புதிய குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறது.
இதைப்பற்றி இங்கே பேசியாக வேண்டிய கட்டாயம்? ஏனென்றால் நீங்கள் எல்லொரும் கணினி வழியாகத்தானே இதை வாசிக்கிறீர்கள்!
மைக்ரோஸாஃப்ட் கம்பேனியின் நடைமுறைகளைக் கவனித்து வரும் எவருக்கும் அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்களோ என்ற பயம் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் இதோ ஒரு புதிய கொடூரம்!
ஜன்னல் இயங்கு தளத்துடன் கைகோத்தபடி உங்கள் கணினியுள் குடியேரும் "இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர்" என்ற உலாவி (browser) ஒரு குறைப்பிரசவம்! அதில் உள்ள சல்லடைக்கண் போன்ற ஓட்டைகளை எண்ண உங்கள் வாழ்நாள் போதாது. வழியில் போகிற வருகிற விஷக் கோப்புக்களையெல்லாம் உங்கள் கணினியுள் அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரை தொங்கலில் விட்டுவிடும். ஆனால் வலை மேய்வோரில் 95 சதம் பேர் அந்த உலாவியில் சவாரி செய்வதால் மென் பொருள் பாதுகாப்புத் துறையில் வணிகம் செய்யும் பலர் கணிசமான லாபம் ஈட்ட இது ஒரு காரணமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் நானும் சமர்த்து என்று காண்பிக்க "சேவைப் பொதி", "பாதுகாப்பு அறண்" என்று கொடுத்துக் கொண்டு வருகிறது.
:: (பார்வை 1464 முறை) ::
ஆக 27
விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
உங்கள் வரவு நல்வரவாகுக!
தமிழில் வலைவீசுகிறேன் பேர்வழி என்று என்னென்னவொ ஜித்து வேலையெல்லாம் செய்துதான் பார்க்கிறேன். முதல்ல "ந்யூக்கிளியஸ்"-ல போட்டேன். ஆனா, அதில என்னமோ RSS ஓடை திறக்கல்ல. காசி அவர்கள் கூட மடல் அனுப்பியிருந்தார்.
இதுக்கு இடையில தவறுதலா blog-ஓட database-ஐ "தொப்பு"னு "drop" பண்ணிட்டேன். அதனால முன்னாடி எழுதினது, பின்னூட்டம் எல்லாம் போயே போச்!! 
சரி, இது ஒரு சவால். பார்த்தூடலாம் ஒரு கை அப்படீன்னு, லேட்டஸ்ட் BLOG:CMS try பண்ணினேன்.
ம்ஹூங்! அதைத் தமிழாக்கணும்னா ஒரு கிலோ பீம புஷ்டி அல்வா, ஒரு லிட்டர் A 1 ஜிகிர்தண்டா இதெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும் போல இருந்தது. அதனால இதெல்லாம் நமக்கு சரிப்படாதுன்னு, இப்பொ b2எவல்யூஷன் - ல எம்பிக் குதிச்சிருக்கேன். "get text", ".po" - இதுமாதிரி டெக்கினிகல் மேட்டரிலெல்லாம் இறங்கி (கினா. சங்கர் கூட இதைப்பத்தி பேசினார்.) , தமிழ்ல மொழிபெயர்க்க ஆரம்பிச்சு முழங்கை வரையில கிரீஸை பூசிக்கிட்டேன்!
சீக்கிரம் மீண்டு வந்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு!
அடிக்கடி வாங்க, என்ன!
:: (பார்வை 679 முறை) ::
சமீபத்திய மறுமொழிகள்