‘என்ன நடக்குது இங்கே’ வகைசார்ந்த இடுகைகள்

எங்கே அவர்கள்?

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

நம் நாட்டில் National Institute of Oceanography மற்றும் Indian Space Research Organisation எல்லாம் உள்ளன. இவைகளின் சேவைகளை பத்திரிக்கைகள் விவரமாக பறை சாற்றியுள்ளன.

தனக்குத் தானே பட்டங்கள் அள்ளித் தந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை.

ஆமாம், கருப்பு சிறப்பாடையுடன் நடைப் பயணம் வந்தாரே, அவர் தன் படையுடன் கடலூருக்கும், நாகைக்கும், கன்னியா குமரிக்கும் சென்று அங்கு ஒன்றுமேயின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு சேவை செய்வாரா?

எல்லோரையும் தேர்தலின்போது காணலாம்!

Vote bank politics is the poor man's burden!

:: (பார்வை 928 முறை) ::

ட்சூனாமி என்கிற கோர அரக்கன்!

என்ன நடக்குது இங்கே :: Comments Off

அவர்களுக்கு
கடல்தான் அன்னை.
கடல்தான் வாழ்வு
கடல்தான் வயிற்றை நிரப்பும்
அட்சய பாத்திரம்
ஆனால்
அந்தக் கடலே
கணக்கற்றோருக்குக்
காலனானான் நேற்று.

"ட்சூனாமீ" என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்!

ட்சூனாமீஜப்பானிய மொழியில் எழுதினால் நெற்றியில் தரிக்கும் நாமம் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த பிரளய காலத்துப் பேய், கபந்தன் போல் கடற்கரையோரத்தில் கண்டவரையெல்லாம் கவர்ந்து கபளீகரம் செய்து விட்டது.

இதோ காண்கிறீர்களே அதுதான் இரு கீற்று ஜப்பானிய மொழி ட்சூனாமீ. "ட்சூ" (துறைமுகம்), "னாமீ" (அலை). அதாவது கடற்கரையையும் துறைமுகங்களையும் தாக்கும் ராட்சஸ அலைகள் எனப் பெயர் கொள்ளலாம்.

இவை ஒன்றன்பின் ஒன்றாக மலைபோல் எழக்கூடிய பேரலைகள். கடலடித் தரையின் கீழ் நிகழும் நில அதிர்வுகள், பொங்கி யெழும் எரிமலைகள், நடுக்கங்கள் தவிர, பூமியில் தாக்கும் எரி விண்மீன்கள் மற்றும் வான் கற்கள் இவைகளாலும் இந்த ட்சூனாமி என்கிற பொங்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கி உயிருக்கும், பொருளுக்கும் பெருத்த சேதத்தை உலகமெங்கும் பற்பல கால கட்டங்களில் விளைவித்து வருகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

http://www.pbs.org/ என்ற வலைத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் Flash Animations-களை இங்கு காணலாம். இவற்றை நீங்கள் உங்கள் உலாவியில் (browser) காணவேண்டுமானால் Shockwave Flash Plug-in என்கிற உள்ளீட்டு நிரலி தேவைப்படும். சாதாரணமாக எல்லா உலாவிகளிலும் இது உள்ளடக்கம் என்றாலும், தேவைப் பட்டால் இந்த வலை உரலுக்குச் சென்று அந்த குட்டி சொவ்வறையைப் பெற்று அதனை அதன் செய்முறைப்படி உலாவியினுள் இட்டடபின் அந்தக் குறும்படங்களைக் காணலாம்.

ஆழ்கடலின் அடியிலமைந்த நிலமங்கையின் பாதங்கள் (oceanic plates or tectonic plates), கண்டங்களின் எல்லைகளின்பால் அமைந்த பாளங்களினூடே சொறுகிக் கொள்வதால் (slip under continental plates), ஒருவித "தப்புப் பாளங்கள்" (faults) ஏற்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆழ்கடல் நிலத்தின் ஒரு பகுதி மேலெழும்பி, அதன் மேலுள்ள நீர்ப்பகுதியையும் திடீரென்று தூக்கி எம்பச் செய்கிறது. கடலின் நிகழும் "ட்சூனாமீ" என்கிற இந்த பௌதிக மாறுபாடு முதலில் சாதுவாகத் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் மணிக்கு 800 கி.மீ வரை வேகம் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பரப்பில் பாய்ந்து சென்று கரை கண்ட இடமெல்லாம் தாக்கிச் செல்கிறது. இந்த சைத்தானுக்கு கரைகளைக் காண்டால் வெறி பிடித்துவிடும். கடலின்பால் லேசாக எழும்பிப் பயனம் செய்யும் ட்சுனாமீ கரையைக்கண்டால் 30-40 மீட்டர்கள் உயரம் வரை எட்டி கரையை ஒரு நீராலான மலைபோல் தாக்குகிறது. இதிலிருந்து தப்புவது மிகக் கடினம். சென்னையைத் தாக்கிய ட்சூனாமீ சுமார் 10-15 அடி உயரம் வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கடற்கரையோரங்களில் அமைந்த நிலப் பகுதிதான் (ridge) இந்தத் தாக்குதலைத் தாங்கி, ஊருக்குள் அலை அடிக்காமல் காக்க வேண்டும். ஆனால் ஊரே கரையின் மேல் இருந்தால்?

அதுதானே இங்கு நிகழ்ந்தது!

சரி, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?

:: (பார்வை 788 முறை) ::

எல்லாம் அவன் செயல்!

என்ன நடக்குது இங்கே :: Comments Off

சென்ற சில ஆண்டுகளில் காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புறங்களில் மாண்டு போன எல்லா ஆடு, மாடு, நாய், பூனை, கொசு, மூட்டைப் பூச்சி, மரவட்டை எல்லாவற்றிற்கும் யார் காரணம் என்பது தெரிந்து விட்டதாமே!

அடேங்கப்பா, ஒரே கல்லில் இவ்வளவு மாங்காயா!

கின்னஸ் காரர்கள் என்னப்பா செய்கிறார்கள்!

நிஜமாகவே அவர் சூபர்மேன் தான்யா!

ஆமாம், சமீபத்தில் உங்களுக்கு ஏதாவது அடி கிடி பட்டதா?

:: (பார்வை 844 முறை) ::

மென்பொருள் உலகம் - 3

என்ன நடக்குது இங்கே :: Comments Off

பல பில்லியன் டாலர்களைக் கொட்டி உலகிலுள்ள எல்லா பெரிய தொலைபேசி நிறுவனங்களும் சீனாவில் கொண்டுபோய் உற்பத்தித் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு தொலை தொடர்பு சாதனங்களின் விற்பனை எவ்வளவு தெரியுமா? 1.5 டிரில்லியன் (1500 பில்லியன்) டாலர். அதில் ஆசியா-பஸிபிக் பகுதியின் பங்கு 112 பில்லியன். ஆனால், இந்த பிசினஸில் இந்தியாவின் பங்கு ஏதொ ஓரத்தில் ஒரு விள்ளல்தான்! ஏனெனில் சொல்லிக்கொள்ளும்படியாக இந்தியா தொலைபேசி சாதனங்கள் உற்பத்தி செய்வதில்லை. செல்போன்கள்கூட இறக்குமதிதான்.

அதற்காக நீங்கள் மனம் தளர வேண்டாம். தொலை தொடர்பு என்பது தொலைபேசி, எக்ஸ்சேன்ஞ் போன்ற வன்பொருட்கள்தான் (hardware) என்ற நிலை மாறி, மென்பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இன்டெர்னெட், தொலை தொடர்பு, கணிப்பொறி, மொபைல் போன் இவை எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படும் நாள் நெருங்கி விட்டது. "True convergence" என்கிற "நிர்வாணா" நிலையை சீக்கிரமே அடையப்போகிறோம். அப்போது ஒரே ஒரு சின்ன கையகல எலெக்ட்ரானிக் கருவியை வைத்துக் கொண்டு மேற்கூறிய அனைத்து சித்து வேலைகளையும் விரல் நுணியால் இயக்கும் காலம் இதோ ஓரிரு ஆண்டுகளில் வந்துவிடும். அப்போது மென்பொருள் தான் ஆதிகம் செலுத்தும். ஐ.பி எனப்படும் Internet Protocol (பெரிய மனிதர்கள் கொடுக்கும் ஐ.பி என்பது வேறு ஒன்று!) மூலம் தொலை தொடர்பு முழுவதும் செயல்படும். (இப்போது IP telephony-யின் செயல்பாடு ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருக்கிறது. இதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்).

இந்த சூழ்நிலையில் தொலை தொடர்பில் வன்பொருளின் ஆதிக்கம் 30%-க்கும் கீழே இருக்கும். மென்பொருள்தான் மீதி 70%-ஐ கைக் கொள்ளும். மென்பொருள் என்றால் அங்கு ஆளப்பிறந்தவர்கள் இந்தியர்கள்தானே! நட்டு, போல்ட்டு உற்பத்தியை எங்கு வேண்டுமானால் வைத்துக் கொள்ளட்டும். மென்பொருள் பின்னுவதில் வல்லுனர்கள் நாம்தானே! Drivers, Firmware என்பது போன்ற மென்பொருள் பொதிகள் பல தொடர்ந்து தேவைப்படும்.

மொத்தத்தில் உற்பத்தி என்றாலே மென்பொருள்தான் என்கிற நிலை ஏற்படும் நாள் தொலைவில் இல்லை என்று நினைக்கிறேன். ஏதொ ஒரு செயலுக்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு கருவியை மென்பொருள் மூலம் வேறு பல செயல்களை (சிறிதும் தொடர்பில்லாமலிருந்தும் கூட) செய்யும்படியாக இயக்க முடியும்! பிறகென்ன, மென்பொருள் கம்பெனிகள் பெருகும்; நேரு ஸ்டேடியம் போன்ற இடங்களில் தான் "மேளா" நடத்தி வேலைக்கு ஆளெடுப்பார்கள். அவர்களுக்கு சம்பளமாக மாதா மாதம் ஒரு பெருத்த பொற்கிழியைக் கொடுப்பார்கள். அவர்கள் ஐஸ்கிறீம், அதன்மேல் காபி என்று ஏதாவது சாப்பிட்டுக்கொண்டேயிருந்து, சதா டிரெஸ்ஸும், ஷூவும் வாங்கிக் கொண்டு பல பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்குவார்கள். "ஷாதீ-டாட்-காம்" போன்ற வலைத் தளங்கள் இன்னும் பல ஏற்பட்டு அவை அவர்களுக்குத் தகுந்த துணைகளைத் தேடித்தரும் சேவையைச் செய்யும்!

:: (பார்வை 836 முறை) ::

காஞ்சி மட விவகாரம்

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

எனக்கு எந்த மடத்தின் மீதிலோ சாமியார்கள் மீதோ ஈடுபாடு கிடையாது. ஆனால் ஜயேந்திரர் கைது விஷயமாக இது வரை கிடைத்த செய்திகளைப் பார்க்கும்போது, அவரைச் சுட்டிக்காட்டும் தடயங்கள் எல்லாம் too good to be true என்ற வகையில் தான் இருக்கின்றன..

முதலில், கொசு அளவு மூளை உள்ள ஒருவன் கூட காண்டிராக்ட் கொலைகாரர்களுக்கு பேங்க்கிலிருந்து பணம் எடுத்து , அந்த பாங்க் சீலுடன் கொடுப்பானா. அது தவிர கொலையாளிகளுடன் தன்னுடைய செல் போனில் பேசுவானா. மேலும் உலகமறிந்த எதிரியை இவ்வளவு obvious - ஆக ஒழித்துக் கட்ட முற்படுவானா என்பதெல்லாம் பெரிய கேள்விக்குறிகள். ஜயேந்திரரை இவ்வளவு தூரம் அடிப்படை அறிவில்லாதவராக என் மனதில் சித்தரிக்க இயலவில்லை.

இந்த ரீதியில் சிந்தனை செய்தால் இது மொத்தமே ஒரு frame-up மாதிரிதான் தென்படுகிறது. மேலும் இந்த விஷயம் வெகு நாட்களாக புகைந்து கொண்டிருக்கிறது. மடத்தில் விசாரணைகள் நடந்து கொண்டிருருந்தன. ஆனால் இது பற்றி ஜயேந்திரர் ஏன் ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்காமலிருந்தார் என்பதும் தெரியவில்லை.

ஜெயேந்திரர் மத மாற்றத்திற்கு மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார். கோவில்களின் சொத்துக்களை சரியாக நிர்வாகம் செய்ய முற்பட்டார். தலித் மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்டு தொண்டு செய்ய ஆரம்பித்தார். இந்து மதத்தின் முக்கிய பிரதிநிதியாக அடையாளம் காணப்பட்டார். மிகவும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். இதையெல்லாம் இப்போது யாரும் மறக்கக்கூடாது.

கொலையுண்ட சங்கர ராமன் மடத்தை விட்டு வெளிவந்த பின்னும் அவ்வளவு வேகத்துடன் மடத்துக்கு எதிரியாக செயல்பட்டதற்கு என்ன காரணம்?

கேள்விகள், கேள்விகள்!

"என்னமோ நடக்குது, மர்மமா யிருக்குது"!

:: (பார்வை 1070 முறை) ::

இன்னொரு (ஆன்மீக) அம்மா!

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

நாட்டில் இதுவரை தோன்றியுள்ள "அம்மா"க்கள் படுத்தல்களே தாங்க முடியவில்லை! விதவிதமான அம்மாக்கள் - அம்மாக்கு பூசாரியாக இருந்தவர் தானே அம்மா என்று பரிணாம வளர்ச்சி பெற்றவர், "அம்மா பகவான்", ஜில்லெல்லாமுடி அம்மா, அமிர்தானந்த அம்மா - இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்!

இப்போது லேடஸ்டாக சேர இருப்பது "முத்துலட்சுமி அம்மா"!

ஆம், அரசியலா, ஆன்மீகமா என்ற குழப்பத்தின் முடிவில் தமிழ் மர(ற)க் காவலன் வீரப்பன்(ர்) மனைவி தேர்ந்தெடுத்திருப்பது "ஆன்மீகம்"தான்! முதலில் அரசியலில் ஈடுபட்டு அரசியாகப் போகிறேன் என்று குரல் கொடுத்தார். அப்புறம் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ஆன்மீகம்தான் மிகச் சிறந்தது, நம் நாட்டில் வளம் கொழிக்கும் துறை அதுதான் என்று முடிவு செய்துவிட்டார். முதற்கட்டமாக "பிரஜாபீட ப்ரஹ்ம குமாரி"களுடன் சேர்ந்து மலைச் சாரலில் போய் தவம் செய்யப் போகிறார். பிறகு வேரொரு பெயரில் முழு "அம்மா"வாக அவதாரமெடுத்து வந்து பக்தர்களூக்கு அருள் பாலிக்கப் போகிறார். வீரப்பன் சரித்திரத்தில் தன் அருள்வாக்கினால் கண்டு பிடித்தவற்றையெல்லாம் சேர்த்து என்னவெல்லாம் படையலிடப் போகிறார்களோ தெரியவில்லை.

முடி அலங்கார நிலையத்தில் கிடைத்த நெற்றிக்கண் பழுப்பு இதழில் வீரப்பன் மனைவியின் உதவியுடன்தான் அவனைப் பித்தார்கள் என்று (அத்துடன் ஒரு கில்மா உபகதையுடன்) படித்தேன். இதுபோல் வீரப்பன் வேட்டை பற்றிய பல சுவாரஸ்ஸியமான கதைகளைத் தொகுத்து இணையத்தில் யாராவது வெளியிடலாமே : சு.ரா - வே.சா; ர.ஸீ - ஜெ.மோ சம்வாதங்களைவிட இது பல மடங்கு விறுவிறுப்புடன் இருக்கும். "எரிஞ்ச கட்சி - எரியாத கட்சி" லாவணி போல, "வீரப்பன் சுட்டானா, சுடப்பட்டானா", "பிடித்துச் சுட்டார்களா, சுட்டுப் பிடித்தார்களா" இப்படி ஊருக்கு ஊர் பட்டி மன்றம் வைக்கலாம் - லியோனி, பாப்பையா போன்றவர்கள் புகுந்து விளையாடலாம்.

இப்படி வீரப்பன் விவகாரமே ஒரு குடிசைத் தொழிலாகி பல பேருக்கு வேலை கிடைக்கும். ஆகா, இருந்தும் கொடுத்தான் வீரப்பன், செத்தும் கொடுத்தான் வீரப்பன் என்று வில்லுப்பாட்டு படிக்கலாம்.

நான் இப்பவே வரப்போகும் அம்மாவுக்கு சிஷ்ய கோடியாக கையில் அப்ளிகேஷனுடன் தயாராகிவிட்டேன்!

:: (பார்வை 694 முறை) ::

அவமான "கியூ"

என்ன நடக்குது இங்கே :: மறுமொழி ஒன்று »

ஐயகோ, இதென்ன அநியாயம்!

வரிசையில் நிற்கச் சொல்லிவிட்டார்களாமே! அதுவும் முன்னாள் பிரதமரை! நாட்டில் ஜனநாயகம் செத்துவிட்டதா? "கியூ" முறையெல்லாம் ஓட்டுப்போட மட்டும் உரிமையுள்ள பொது ஜனத்துக்கு மட்டும்தானே. மாஜி பிரதமர் போன்ற வி.ஐ.பி-க்களுக்கு ஏது வரிசை? பூர்ண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைத்து அனைத்துச் சட்டங்களையும் ஒதுக்கி அவர்களுக்கு வேண்டுவன செய்வதுதானே அலுவலர்கள் கடமை?

வாகா எல்லையில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களை சுங்க இலாக்கா அதிகாரிகள் வரிசையில் வரும்படி கூறிவிட்டார்களாம். என்ன அவமானம்!

அதுமட்டுமா, 25 நிமிடங்கள் கழித்து அவருடைய இருக்கைக்கு வந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள் என்று எப்படி சொல்லப்போச்சு. அடடா, பெருத்த அவமானம்!!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அலுவல் பார்க்கும் அதிகாரிகள் எவ்விதமான சூழ்நிலையில் வேலை பார்க்கிறார்கள், அவர்களுடைய pressure situation என்ன, சிறிதுகூட தவறு நேராமல் "கம்பிமேல் நடப்பது" போன்று (cliché be excused!) பணியாற்றவேண்டிய நிலை. இவ்வளவுதூரம் கடைமையுணர்ச்சியுடன் இருக்கின்றார்களே என்று பாராட்ட வேண்டியவர், "அவமானம், அவமானம்" என்று குதிக்கிறாரே, இது என்ன demo-crazy!

ஆமாம், இவர் பிரதமராக இருக்கும்போதுதானே பிரதமரின் கார் வரக்கூடிய வழியில் "வாக்கிங்" போனார் என்று ஒரு அப்பாவி மனிதனை செக்யூரிட்டி ஆட்கள் பிரட்டி, பிரட்டி அடித்தார்கள்?

:: (பார்வை 718 முறை) ::

அகடம் விகடம்

என்ன நடக்குது இங்கே :: Comments Off

எஸ்.வி.வி-யின் "உல்லாஸ வேளை"யில் "சங்கீதப் புளுகு" பற்றி எழுதி யிருப்பார்.
கிரிக்கெட் ப்ந்தையோ மட்டையையொ வாழ்க்கையில் ஒரு முறை பார்க்காதவர்கள்கூட "ஸ்ட்ரைட் ட்ரைவ்", "கவர் ட்ரைவ்" என்று பந்தா காண்பிபார்கள். அதுபோல ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனால் தலையை உருட்டி "தப்புத்"தாளம் போட்டு, தான் கர்னாடக சங்கீதத்தில் பெரிய நிபுணன் போல பீலா உடுபவர்கள் அநேகம். நீங்கள் கேட்கும் பாட்டின் இராகம் தரியவில்லையென்றால் பக்கத்தில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பவரிடம் (பெரும்பாலும் அவர்கள்தான் கொஞ்சம் ஞானஸ்தராக இருப்பார்கள்) "இது என்ன" ராகம்" என்று கேட்டால் எதோ இந்த ஒரு ராகம்தான் இவருக்குத் தெரியாது போலிருக்கிறது என்று நினைத்துக்க்கொள்ள சான்ஸ் இருக்கிறது. ஆனால் நீங்கள் கல்யாணி, சங்கராபரணம், காம்போதி போன்ற ராகங்கள் பாடும்போது இந்தக் கேள்விஅயைக் கேட்டால் சுத்த "ஞான சூனியம்" என்று சந்தேகமில்லாமல் தெஇர்ந்துவிடும். என் நண்பரொருவர் ஒரு ட்ரிக் வைத்திருக்கிரார். திடீரென்று, "இது பேகடாவா, தர்பாரா" என்று கேட்பார். பக்கத்தில் இருப்பவர், "ரெண்டுமில்லை, கீரவாணி" என்றால், "ஒஹோ, அதான் கொஞ்சம் சாயல் அடிக்கிறதே-ன்னு பாத்தேன்" என்பார். இதனால் அவர் இது "ஃபிலிம்" கம்பெனி என்று நினைத்துக் கொண்டாலும், பக்கத்தில் இருக்கும் மக்கள், ஆஹா இவ்வளவு ராகம் பெயரெல்லாம் தெஇர்ந்திருக்கிறாரெ" ந்ன்று நினைக்கலாமல்லவா. இப்படி சிலபேர்.

:: (பார்வை 743 முறை) ::

கம்பூட்டர் பாபா!

என்ன நடக்குது இங்கே :: 2 மறுமொழிகள் »

நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்குமே தவிர சாமியார்ப் பஞ்சத்துக்கு சான்ஸே இல்லே. மழித்தவர், நீட்டியவர், சிலிர்த்தவர், ஜில்பா, குட்டித் தொப்பை, செல்லத்தொப்பை, பானைத் தொப்பை என்று பல size and shape களில் சாமியார்கள் நிறைந்த புண்ணிய பூமி நம்முடையது! இவர்களின் கியாதியைப் பற்றி டிவியில் தினந்தோரும் அவர்களின் பக்த கோடிகள் புராணங்களை அடுக்குகிறார்கள். கையை ஆட்டினால் விபூதி, கக்கினால் கிடைப்பது மோதிரம், லிங்கம் முதலிய வஸ்துக்கள். எல்லாம் "ஜாதுகர்" பார்ட்டிகள்! ரிமோட்டிலேயே ஆபரேஷனெல்லாம் கூட செய்து விடுகிறார்கள் இந்த confidence tricksters!

இவர்களெல்லாம் காலத்துக்கேற்றபடி மாறவேண்டும். எவ்வளவு நாட்கள்தான் கக்கிக் கொண்டிருப்பார்கள்! இந்த ஸைபர் யுகத்தில் தோன்றியுள்ள புதுவகைப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டாமா?

நார்ட்டன், அவன் முப்பாட்டன் எல்லோருக்கும் பெப்பே என்று நம் கம்ப்யூட்டர்களுக்குத் தண்ணி காட்டும் வைரஸ் மற்றும் அவைகளின் ஒன்று விட்ட சகோதரி(!)களான trojan, worm, spyware, macros போன்ற ஸைபர் கிருமிகளை அழிக்க இந்த "மன்மத ராசா" சாமியார்கள் தங்கள் ஆன்மீக வலிமையைத் திருப்பி விட்டால் ஐ.டி உலகமே செவ்வாடை, பச்சை ஆடை, மஞ்சள் ஆடை பூண்டு (அல்லது ஆடையில்லாமல்) இவர்களுக்கு காவடி எடுக்கத் தயாராயிருப்பார்களே!

இந்த கம்பூட்டர் பாபாக்கள் "பூ.." என்று ஊதியோ, டான்ஸ் ஆடியோ, கொஞ்ச வயசுப் பாப்பாக்களுடன் வந்து கும்மி அடித்தோ, நான்தான் அம்மா, நான்தான் அம்மா பகவான் என்று டிவியில் போஸ் கொடுத்தோ அல்லது எதோனும் ஒரு வகையில் பஜனை(!) செய்தோ இந்த வைரஸ் அழிப்பு யாகம் தொடங்கலாம். வைரஸ்களுடன் சேர்த்து லைனக்ஸ் உட்பட்ட எல்லா திறந்த நிரல் மென்பொருட்களையும் அழிப்பதாக இருந்தால் இந்த வேள்வி அட்டகாசங்களின் முழுச் சிலவையும் தான் ஸ்பான்ஸோர் செய்வதாக "ரோக்கா கதவு"க்கார பெருங்கிழார் முன்வர வாய்ப்புள்ளது!

அனைத்து சாமியார்களுக்கும் இது ஒரு சவால்!

:: (பார்வை 851 முறை) ::

மென்பொருள் உலகம் - 2

என்ன நடக்குது இங்கே :: 4 மறுமொழிகள் »

இப்போது எல்லோரையும் ஏன் இப்படி சீனா மோகம் பிடித்து ஆட்டுகிறது!
அமெரிக்காவோ இன்றைக்கு "U.S of A, Made in China" என்று மாறிவிட்டது. Macy's, Wal-Mart, B.J's, Costco, K-Mart, Sears போன்ற ஸ்டோர்களில் எங்கு சென்றாலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் சீனாவில் செய்தவைதான். கூடிய சீக்கிரத்தில் முழு உலகத்துக்கும் உற்பத்தி மையமாக சீனா ஆகக்கூடிய நிலை உருவாகலாம். இதற்குக் காரணம் இன்றைய சீனா கம்யூனிஸத்தையும் முதலாளித்துவத்தையும் கலந்து ஒரு cocktail செய்து, மக்களை அடக்கி ஒரு கட்டுக்குள் வைக்க கம்யூனிஸத்தையும், பன்னாட்டு முதலீடுகளை வரவேற்க கேபிடலிஸத்தையும் உபயோகித்து, இருமுகம் கொண்ட அமைப்பாக விளங்குவதுதான். இன்னும் சிலர் ஒரு cynical view-வைக் கொண்டிருக்கிறார்கள் - சீனாவில் பொருள் உற்பத்தியெல்லாம் பெரும்பாலும் சிறைகளில் செய்யப்படுவதால் உழைப்பூதியச் சிலவுகள் almost a zilch என்று! இந்தியாவிலும் சிறுகச்சிறுக சீனாவின் தயாரிப்புக்கள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. Thomson (டின்-டின் ரசிகர்களுக்கு: இது Thomson without "P"!) TV நிறுவனத்தை ஒரு சீனக் கம்பெனி வாங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்திய மென்பொருள் நிறுவனங்களும் சீனாவில் போய் தங்கள் மையங்களைத் துவங்க போட்டி போட்டுக்கொண்டு செல்கிறார்கள். மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 829 முறை) ::

 

5-ல் இது-4«12345»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in