‘என்ன நடக்குது இங்கே’ வகைசார்ந்த இடுகைகள்
நிறைய பேர் நம் கிரிக்கெட் டீமுக்கு வேறுவேறு வேலைகளைக் கொடுத்து கௌரவித்துவிட்டார்கள்.
நாமும் எதாவது புதிதாக படம் காட்டலாமே என்று எண்ணிய வேளையில் கிடைத்தது இது:
அந்தப் படத்தை இப்போது காணோம்!
அதனாலென்ன! கொஞ்சம் பொறுங்கள். வேறு கிரிக்கெட் பற்றி ஜோக் படங்கள் கிட்டாமலா போய்விடும்!
மீண்டும் வருக!
நம் கண்ணிலும் கருத்திலும் அடிக்கடி தென்படாத விஷயங்கள் சரியான தருணத்தில் நினைவுக்கு வராமல் போய்விடும். ஆகையால்தான் எல்லோரும் நன்கறிந்த ஹார்லிக்ஸ் முதலானவற்றை மீண்டும் மீண்டும் உரக்க விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுபோல, நம் வாழ்வின் அடிப்படையான பல பொருட்களில்கூட அலட்சியமாக இருக்கிறோம்.
இத்தகைய எண்ணப்போக்குக்கு எடுத்துக்காட்டாக நாம் உயிர் வாழ்வதற்கு மிக அத்தியாவசியத் தேவையான பிராணவாயுவை எடுத்துக் கொள்வோம். பல நேரங்களில் இது தேவையென்பதையே பலர் கருத்தில் கொள்வதில்லை. இல்லாவிட்டால் எல்லாக் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடிக்கொண்டு புகை பிடிப்பார்களா?
எனக்கு ஒரு மேலதிகாரி இருந்தார். அவருடைய அறையில் இருபிரிவு குளிர்சாதன அமைப்பு பொருத்தப் பட்டிருந்தது. ஆகையால் வெளிக்காற்று உட்புக வாய்ப்பேயில்லை - கதவைத் திறக்கும் நேரம் தவிர. அவர் சிகரெட் கம்பெனிகளை அதிக லாபம் ஈட்ட வைப்பதே தன் வாழ்வின் முழுமுதல் குறிக்கோளாகக் கொண்டவர். அவர் விடும் "குப் குப்"கள் அறையைச் சுற்றி சுற்றி வந்து, உடன் அமர்ந்திருப்பவர்களின் மூச்சுக்காற்றில் கலந்து அவர்களை தவிர்க்க இயலாத (துணைவினை) புகையிழுப்பாளர்களாக ஆக்கிவிடும். ஒருமுறை அவருடன் ஒரு உரையாடலுக்காக சென்றிருந்த போது, அவரிடம், புகை பிடிப்பதை நிறுத்தும்வரை அவருடைய அறைக்குள் வர முடியாது என்று தீர்மானமாக சொல்லவேண்டி வந்தது. "நான் உள்ளிழுக்கும் காற்றை மாசுபடுத்தும் உரிமை உங்களுக்கில்லை" என்பதை உறுதியாக அவர் மனதிலாழ்த்தியபின் தான் அந்தப் அப்பழக்கத்தை நிறுத்தினார்.
ஒருமுறை மைசூரிலிருந்து சத்தியமங்கலத்திற்கு பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. மிகுதியையும் வாசிக்க »
தமிழ்நாடு அரசின் தேர்தல் துறை வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதனை இந்தப் பக்கத்தில் கண்டு, உங்கள் பெயர் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளலாம். உங்கள் பெயர், தொகுதி இவற்றை இட்டு தேடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தீநரியில் தமிழ் எழுத்துறுக்கள் பதிவது சிறிது கடினமாக இருக்கிறது. I.E-ஐ பாவிப்பது நல்லது.
உங்கள் பெயர் விட்டுப் போயிருந்தால் நேரடியாக இணையத்திலேயே பதிவு செய்ய இலகுவாக ஒரு விண்ணப்பப் படிவமும் உள்ளது.
அப்பாடி. என் பெயர் இருக்கிறது! ஆனால் வாக்குச் சாவடிக்குச் சென்று "கைமேல் வை மை" எனும்போது கையை விரித்துவிட்டார்களென்றால்? ஆரவாரமில்லாமல் அகத்துக்கு மீண்டு, அட்டணங்கால் போட்டு அமர்வதைத் தவிர வேறுவழி?
இது ஒரு அவசரப் பதிவு.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்த தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள் பக்கமும் நான் செல்லவில்லை - தமிழ்மணம், தமிழோவியம் உட்பட. வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று கொண்டிருப்பதால். என் பெட்டிக்கடையும் மூடித்தான் கிடக்கிறது.
இந்நிலையில் இன்றுகாலை என் நண்பர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் - என் பெயரில் பலருடைய பதிவுகளில் நிறைய பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன என்றும் அவை என்னால்தான் எழுதப்பட்டன என்று பல அன்பர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றும். நான் இன்னும் அவற்றை வாசிக்கவில்லை. இந்த சிற்றூரிலிருக்கும் கணினி மையத்தில் தமிழ் பார்க்க வசதியில்லை. அவை எவ்வளவு மோசமாக எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரியவில்லை.
"தமிழா" மூலம் சுற்றி வளைத்து இதனை எழுதுகிறேன்.
இதனால் சகலவிதமான வலைப்பதிவாளர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்:
1. சமீபத்தில் முகமூடி, அருண், குழலி மற்றும் பலருடைய வலைப்பூக்களில் "எஸ்கே", "SK" போன்ற பெயர்களில் இடப்பட்டுள்ள எந்த பின்னூட்டமும் நான் எழுதியதல்ல.
2. நான் வலைப் பதிவுகளில் கருத்து எழுதி ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. அதற்கு முன்புகூட ஏதோ ஓறிரு முறைகள்தான் எழுதியுள்ளேன். ஆனால் என் பெயரில், என் முழு விலாசத்துடன், வலை உரலுடன் தான் எழுதுவேன்.
3. இப்போது "எஸ்கே" என்ற பெயரில் எழுதும் நபர் அந்த பெயரில் எழுதும் இன்னொருவராக இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே என் பெயரை கெட்ட எண்ணத்துடன் பயன்படுத்தும் மன நோயாளியாக இருக்கலாம்.
4. ஆனால் நான் அவனி(ரி)ல்லை.
5. இன்னும் ஒரு வாரம் சென்றபின் எல்லாவற்றையும் படித்துவிட்டு மேற்கொண்டு மறுப்புரைகள் தேவையெனில் எழுதுகிறேன்.
என் கவலையெல்லாம் ஒன்றுதான்.
இந்த தமிழ் வலைப்பதிவு சான்ற உலகத்தில் பல நல்ல உள்ளங்களை இணையம் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த நட்பை நான் மிகவும் போற்றுகிறேன். அவர்கள் இத்தகைய பின்னூட்டங்களைப் படித்துவிட்டு என்மேன் தப்பயிப்பிராயங்கள் கொள்ளாமலிருக்க வேண்டுமே என்பதுதான்.
நன்றி.
எஸ்.கே (கிச்சு)
வேறு ஏதோ எழுதத் துவங்கிய போதில் வந்து தாக்கிய செய்தி, டில்லியில் மக்கள் பெருமளவில் குழுமியுள்ள மூன்று முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு. இது வரை ஒரு மருத்துவ மனையிலேயே 37 சடலங்கள் கிடப்பதாக என்.டி.டிவி கூறுகிறது. மிகவும் சாத்வீகமான, அமைதியான குண்டுகள். அதில் இறந்தால் நேரே சொர்க்கம்தான் என்றுகூட சொல்லி, குண்டு வைத்தவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இங்கு இருக்கலாம். நம் தலையெழுத்து இது.
பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர் யூஸஃப் யோஹண்ணா ஒரு கிறிஸ்தவராம் (சில தினங்கள் முன்வரை). அவர் சமீபத்தில் முஸ்லிமாக மதம் மாறினார். முன்னாள் அணித்தலைவர் சயீத் அன்வர்தான் அதற்குக் காரணமாக இருந்தார் என்று யூஸஃப்பின் தாயார் புகார் கூறியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வாசித்தேன். அதன் சுட்டி இதோ.
இது தொடர்புடைய இன்னொரு சர்ச்சை பற்றி இங்கே படிக்கலாம்.
யூஸஃப் யோஹண்ணா மதம் மாறியது ஒரு பெரிய செய்தி அல்ல. இத்தனைநாள் தாக்குப் பிடித்ததே பெரிது. அதிருக்கட்டும். சில மாதங்களுக்குமுன் அவருடைய சொகுசு கார் ஒன்று (பல லட்சங்கள் மதிப்புள்ளது) லாஹூர் நகரின் முக்கிய வீதியில் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் யூஸஃப் புகார் ஏதும் கொடுக்கவில்லை. "ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது. எல்லாம் சரி" என்று மழுப்பிவிட்டாராம். ஏதோ "பாதாள லோகம்" தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்கிறது இந்தத் தளம்.
மேல்விவரம் இங்கும் வாசிக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கலாம், அஸாருத்தீன், சங்கீதா பிஜ்லானி, கங்குலி, நக்மா…………………….
சரி, உங்களுக்கு ஒரு கேள்வி:-
ஏன் ஒரு சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை?
ப்ளாக்கர்.காம் அளிக்கும் இலவச செவையின் உதவியாலும், முகுந்த் அவர்களின் "எ-கலப்பை" மென்பொருள் மற்றும் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு ஆகியவற்றின் உபயத்தாலும், நம் தோழர்கள் வலைப்பதிவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காசியின் உதவியால் அவையெல்லாம் தமிழ்மணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. ப்ளாக்ஸ்பாட்டில் உள்ளிட்டவுடன், எவ்வித நிபுணத்துவத்தின் தேவையுமில்லாமல் ஒருங்குறித் தமிழ் எழுத்துருவில் வலைப்பதிவாளர்களின் ஆக்கங்கள் "பட்டனைத் தட்டிவிட்டால் தட்டிலே ரெண்டு இட்டிலி விழுவது போல்" தெரிவதால், தமிழ் வலைப்பதிவுகள் நிறைய முளைக்க ஆரம்பித்து விட்டன. என்ணிக்கை கூடுமளவுக்கு தரம் கூடியிருக்கிறதா என்னும் ஆராய்ச்சியை நுகர்வோர் கண்ணோட்டத்திற்கே விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். சுரேஷ் கண்ணன் கூறியிருப்பதுபோல் சிலர் இந்த சேவையை தம் outlet-ஆகவும், வேறு சிலர் toilet-ஆகவும் பாவித்து வருகிறார்கள என்பது சிந்தனை செய்ய வேண்டிய கருத்து! மிகுதியையும் வாசிக்க »
ஒரு வளையல் என்னை இந்தப் பாடு படுத்தப்போகிறதென்று என்னிடம் எந்த ஜோஸியரும் கூறவேயில்லை. ஹிந்துவில் வரும் சூரிய முறை ராசிபலனோ, சந்திரமுறை ராசி பலனோ சிறிதும் கோடி காட்டவில்லை.
நடந்தது இதுதான். சென்ற வாரம் புது டில்லிக்குச் செல்ல "தமிழ்நாட்"டில் ஏறி அமர்ந்தேன். எதிர்ப்் படுக்கை காலியாக இருந்தது. நாக்பூர் கோட்டா என்றார்கள். வண்டி கிளம்பும்போது ஒரு பெண்மணி (இருபதின் ஒரமோ, முப்பதின் துவக்கமோ என்ற தோற்றம்) ஏறி அமர்ந்தார். அவருடன் பிரயாணம் செய்யும் பேறு பெற்றமைக்காக எங்களை நோக்கி ஒரு "பளீர்" சிரிப்பை சிந்தினார் (அந்தத் தருணத்தில் ஒரிரண்டு பிராயம் கம்மியாயிற்று). அவர் செய்த சேட்டைகளை என் கையிலிருந்த புத்தகத்தின் மேல் விளிம்பிணூடே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
("சீ, இதென்ன கெட்ட பழக்கம்." — "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. 'ரசித்தேன்'னு சொன்னவுடனே ஏதோ தப்பர்த்தம் பண்ணீட்டீங்க போல. அவிங்க பொட்டியை மூடினாங்க, தொறந்தாங்க. மறுபடி, மறுபடி. இடையிடையே செல்லிடைப் பேச்சு. ஒரே சங்கதியை மீண்டும் மீண்டும்." — "அப்படி என்னதான் பேசினாங்க?" — "யாருக்குத் தெரியும். அத்தனையும் தெலுங்கு")
சீட்டுப் பரிசோதகரிடம் அந்தப் பெண்மணி "சீட்டு" கேட்டார். நடைமேடை அனுமதியுடன்தான் வண்டி ஏறியிருந்தார் என்பது தெரிந்தது. அவர் சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு ரூ. 1200 என்றார். "சரக்"கென்று ரூபாய் நோட்டுகளை உருவிக் கொடுத்தார் அந்த பணக்காரக் குடும்பத்துப்் பெண். உடம்பு பூரா மஞ்சள் உலோகக் கஜானாதான்!
லேசாக பேச்சுக் கொடுக்கலாம் என்று எண்ணிய நான் எதை வைத்து ஐஸை உடைப்பது என்று கணக்குப் பண்ணிக் கொண்டிருந்த வேளையில், "மீரு விஜயவாடாவா" என்று கேட்டுக் கொண்டே இன்னொரு பயணி மீதமிருந்த படுக்கைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து "மாக்கு மாக்குனு" மாட்லாடிக்கொண்டிருந்ததால், அரவத்தில் இடைச் செருகலாமென்ற என் முயற்சி வீண். "சரி, அதனாலென்ன, அப்படி ஒன்றும் அழகில் சேர்த்தியில்லை. கல்லூரி நாட்கள் போலிருந்தால் 45 மார்க்தான் போட்டிருப்பேன்." அதற்குள் பணியாளர்கள் படுக்கையை விரித்து வைத்தார்கள். நானும் பி.ஜி.வுட் ஹௌஸை விரித்தேன்
காலையில் எழுந்து பார்த்தால் மிகுதியையும் வாசிக்க »




![Validate my RSS feed [Valid RSS]](/wp-images/valid-rss.png)
சமீபத்திய மறுமொழிகள்