YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஜெயா டிவி.
குறிச்சொற்கள்: இந்தியா, இந்திரா கந்தி, India, indira gandhi, indira khan
YouTube - வீடியோவைக் காணுங்கள்
நன்றி: ஜெயா டிவி.
குறிச்சொற்கள்: இந்தியா, இந்திரா கந்தி, India, indira gandhi, indira khanசமீபத்தில் செய்தித்தாள்களில் கண்ட செய்திகள்:
இந்திய நாட்டு ஆண்களே, பெண்களருகே செல்லவோ, அமரவோ நேரும் போதும், திருமணம் செய்து கொள்ள எண்ணும் போதும் மிகக் கவனமாக யோசித்து தற்காப்புடன் செயலாற்றுங்கள். வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்கள் எல்லாமே ஒருதலைப் பட்சமாக, ஆண்களுக்கு எதிராக இருக்கின்றன. ஒரு பெண் சொன்னால் போதும், நீங்கள் உடனே குற்றவாளி ஆகிவிடுவீர்கள். செய்தித் தாள்களும் ஊடகங்களும் பெண்கள் தரப்பு கூற்றுக்களைத்தான் பறை சாற்றுவர்கள். ஆண் என்றால் தவறு செய்பவன், பெண்கள் சொல்வதெல்லம் உண்மை என்பது இந்த சமுதாயத்தின் மற்றும் சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடு.
அலுவலுகத்தில்கூட பெண்களிடம் பேசும்போது தக்க சாட்சியங்களுடன் கவனமாக சொல்லடக்கத்துடன் பேசுங்கள். உடலசைவிலும் கவனமாக இருங்கள் - ஆபாச சைகை செய்தார் என்று சொல்லக்கூடும்.
கவனமாக இருங்கள். காலம் கெட்டுக் கிடக்கிறது.
குறிச்சொற்கள்: 498a, ஆண்கள், சமூகம், பெண்கள், India, men, society, victims, womenஅடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters).
என்ன, ஜாலியா பொழுது போச்சா!
குறிச்சொற்கள்: பொழுது போக்கு, games, time wastersஎன் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு!
"ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க", இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து ரூபாய்க்கு என்ன பேசமுடியும் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஐயத்தைப் போக்க கடைக்காரரிடமே "பத்து ரூபாய்க்கு எவ்வளவுங்க டாக் டைம்" என்று கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.
சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்கள் எல்லோரும் கலைந்து சென்றபின் அவர் மெதுவாக, "பத்துரூபாய்க்கு ஐந்து ரூபாய்தான் டாக் டைம்" என்று எனக்கு அறிவூட்டினார். அடுத்து நான் கேட்க நினைத்த வினாவுக்கு அவர் விடையாகச் சொன்னது இது:
" இதுங்க சும்மா 'மிஸ்ஸீடு கால்' தான சார் கொடுக்குதுங்க" என்றார்!
அது சரி. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் எப்போது பார்த்தாலும் காதிலிருக்கும் கம்மலோடு சேர்த்து கைப்பேசியையும் ஒட்டிக்கொண்டு, "கெக்கே கெக்கே" என்று சிரித்துப் பேசியவண்ணம்தானே இருக்கிறார்கள். அது எப்படி - என்று யோசித்தேன். பிறகு எனக்குப் பழக்கமான ஒரு பெண்ணிடமே இதைப்பற்றிக் கேட்டேன். "இது கூடத்தெரியாதா உங்களுக்கு அங்க்ஸ்? நாங்க மிஸ்டு கால் கொடுப்போம். சில பைத்தியக்காரப் பசங்க தன் கைக்காசு செலவு பண்ணி எங்க கிட்ட கடலை வறுப்பானுங்க" என்றாள்!
எஸ்.எம்.எஸ்ஸுக்கு அடுத்தபடி இந்த மிஸ்டு கால்கள்தான் செல்ஃபோனின் அதிகபட்ச பயன்பாடு என்பது எனக்குத் தெரியவந்தது அப்போதுதான். "நீ அந்த ஸ்டாப்பிங்ல எறங்கியதும் ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" - இது சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் உரையாடல்.
ஸெல் ஃபோனைக் கண்டுபிடித்தவர்களும், அதன் பயன்பாட்டு சேவை நடத்துவோரும் மிஸ்டு கால்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா!
உங்களுக்குத் தெரிந்த வேறு மிஸ்டுகால் பயன்பாடுகளைப் பற்றி எனக்கும் தெரிவியுங்களேன். பில் ரொம்ப ஆகுது!!
வாருங்கள் சாமியாடலாம்!
YouTube - வீடியோவைக் காணுங்கள் Muruga!
ஆண்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் போலவும், பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கடைசியில் சாதித்துவிடுகிறார்கள். ஆண்களின் சூரத்தனமெல்லாம் சும்மா பந்தாவோடு சரி. "Last laugh" குறிப்பிடப்படும் கடைசி வெற்றி பெண்கள் கையில்தான். இந்த உண்மை சரித்திர நிகழ்வுகள் முதல் அன்றாட நடப்புகள் வரை மீண்டும் மீண்டும் பலவிதங்களீல் நிருபிக்கப்படுன்றது.
சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தன் திருமணத்தன்று ஓடிப்போய் தன் பழைய காதலனைக் கைப்பிடித்திருக்கிறார். ஆனால் திருமண மண்டபத்தில் இவளுக்காக பட்டுப் புடவை, தாலி, மோதிரம் போன்றவற்றிற்கு ஏராளமாக செலவழித்து விட்டு, தாலியும் கையுமாக பேஸ்தடித்துக்கொண்டு நிற்கிறான் மணமகன்!
கடைசியில் அவன் காவல்துறையில் புகார் கொடுத்தபிறகு பெண்வீட்டார் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய இன்றைய தினமலர் செய்தி இதோ:-
ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு "ரௌத்ரம் பழகி"யிருக்கிறார்!!
சரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் "ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்" பற்றித் தெரிய வேண்டுமா?
அவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்!
அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்)
யார்தான் எவரைப் பற்றித்தான் கருத்து வெளியிடுவது என்பது வகை தொகையில்லாமல் போய்விட்டது!
கருத்து மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை, ஒரு உன்னத மனிதனைப் பற்றி கருத்தாழம் ஏதுமில்லாமல், "ஓ" போடுவதற்கு கைவசம் சில பக்கங்கள் கிடைத்துள்ளன என்பதற்காக மிக மோசமாக விமரிசிப்பது ஒரு நகைப்புக்கிடமான செயல்!
ஆனந்த விகடனில் சிறிது காலமாக திரு. ஞானி அவர்கள் சில பக்கங்களை நிரந்தரக் குத்தகையாக எடுத்திருக்கிறார். ஏதோ பெண்களின் மாதவிடாய் எப்படி வருகிறது போன்ற அந்தரங்க சமாசாரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் - அதுவும் "இதுவரை எங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாமலே இருந்து விட்டதே! நீங்களல்லவா எங்கள் ஞான"க் கண்ணைத் திறந்து விட்டீர்கள்" என்று வரும் ரசிகர் மன்ற மடல்களை தனிப் பெட்டியாக வெளியிட்டு மார்தாட்டுதல் வேறு!
சரி, அந்த இருட்டு சமாசாரங்களையே எழுதிவிட்டுப் போகட்டும். மக்களின் "அஞ்ஞான" இருளைப் போக்க அவராலான கைங்கர்யம் என்று பக்கங்களைப் புரட்டி விட்டுச் செல்லலாம். ஆனால், இவர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி அரைகுறை ஞானத்துடன் தாக்கியிருப்பதைப் பார்த்தால், இவர் உடலின் "கீழ் மட்ட"ப் பகுதிகளைப் பற்றிப் படிப்பதை விடுத்து, மேல் மாடியை அதற்கான நிபுணர்களைக் கொண்டு சிறிது தீவிர வட்டகைத்தல் மிக அவசியம் எனத் தோன்றுகிறது!!
சரி, இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:-
மிகுதியையும் வாசிக்க »
சமீபத்திய மறுமொழிகள்