‘பொது’ வகைசார்ந்த இடுகைகள்

சூப்பர்மேன்!

பொது :: 4 மறுமொழிகள் »

முன்பு கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது மர்லின் மன்றோ உட்பட பல நூற்றுக்கணக்கான பெண்கள் அவருடன் உறவு வைத்திருந்ததாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் சொன்னார், இவை எல்லாமே உண்மையாக இருந்திருந்தால் கென்னடிக்கு ஒரு காப்பி கோப்பையைத் தூக்கக் கூட சக்தி மிஞ்சியிருந்திருக்காது என்று! (அதனால்தான் மோனிகாவோட நிறுத்திக்கிட்டாரோ அவருடைய மானசீக சிஷ்யர் கிலிண்டன்?)

ஆனால் கென்னடிபோல் ஒரு romantic ஆசாமியாக இல்லாவிட்டாலும் இப்போது போலீசார்களாலும் , பத்திரிக்கை மற்றும் ஊடகங்களாலும் பல பெண்களுடன் பலவிதத்தொடர்புகள் வைத்திருந்ததாக ஜயேந்திரர் சித்தரிக்கப் படுகிறார்! இந்தப் பெண்கள் பல ஊர்கள் மற்றும் பின்னணியிலிருந்து, பலவித சைஸ், ஷேப்புக்களில் வந்து பேட்டி தருகிறார்கள். வற்றாத ஊற்றாக தொடர் குற்றச்சாட்டுக்கள் பெருகிய வன்ணம் இருக்கின்றன. முதலில் ஸ்ரீரங்கம் உஷா, பின் அனுராதா, இப்போது ஜூ.வி அடுக்கும் பெயர்களான விஜயா, வனஜா, சரோஜா, மைதிலி, ஜெய லட்சுமி (இது வேறொருவராம்!! இன்று எஸ்.எம்.எஸ்ஸில் வந்த கொஞ்சம் "விழுப்பு" ஜோக்:-
'What is the difference between Jeyendirar and Jeyalakshmi?'
'Jeyendirar is in police custody. But police is in Jayalakshmi's custody!) இப்படிப் பல பெயர்கள் சுடச்சுட பரிமாறப்படுகின்றன.

ஜெயேந்திரரை அவற்றில் முடிச்சுப் போட்டு சில மஞ்சள் பத்திரிக்கைகள் தம் விற்பனையைப் பெருக்குவதற்காக அடிக்கும் கூத்தைப் பார்த்தால் கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து காஞ்சீபுரம் சம்பந்தப்பட்ட எல்லா சாவுகள் (கொசு, தவளை, கரப்பான் பூச்சி, மரவட்டை உட்பட) மற்றும் பெண்கள் சம்பந்தப் பட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர்தான் காரணம் என்பார்கள் போலிருக்கிறது!

ஆனால் இவை ஓவராகப் போகும்போது மக்களுக்கும் ஒரு சலிப்பு உண்டாகி ஜெயேந்திரரை செத்த பாம்பை அடிப்பதுபோல் செய்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுவது நிச்சயம்.

சரி. இந்த episode-ஐ வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்:- மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1003 முறை) ::

நிரந்தர அதிசயம்!

பொது :: 7 மறுமொழிகள் »

நான் அடிக்கடி பார்த்து அதிசயிக்கும் படங்களில் இதுவும் ஒன்று!

வெற்றி கொண்டான் இந்த சுட்டிப் பயல்!

அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே

== திருமூலர்

ஆயிரம் விந்துக்கள் அடிச்சு மோதினாலும் அவற்றுள் ஒன்றுக்கே சினையைத் துளைத்து உட்புகும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது! ஆஹா, அடுத்த நொடியில் தொடங்கிடுதே ஒரு உயிர்ப் பயணம்!.

ஒன்று இரண்டாகி
பின் அது எண்ணிலடங்காப்
பாதி பாதியாய்ப்
பிளந்து பிரிந்து
மரபணுப் (gene) பதிவுகளில் தேடி
பெற்றோரையும் மற்றெல்லா
முன்னோரையும் பிரதியெடுத்து
ஆரம்பமாகுதடா ஒரு
அதிசய விஞ்ஞானம்!!

Is there anything more bizarre and spectacular than this piece of engineering!!

:: (பார்வை 743 முறை) ::

எனக்குப் போட்டி!

பொது :: 3 மறுமொழிகள் »

புரிந்தால் சரி!

மாயவரம் (மயிலாடுதுறை) to வைத்தீஸ்வரன் கோயில் சாலையில் கண்டது!

:: (பார்வை 960 முறை) ::

மக்கள்மெய் தீண்டல்

பொது :: மறுமொழி ஒன்று »

தினமலர் எதிர்ப்பு இயக்கம் ஒன்று வலைப்பூக்களில் மும்முரமாக நடக்கிறது. அதனால் அதில் முனைப்பாக உள்ளவர்கள் தினமலரை ஒருவரி விடாமல் வாசித்து, விமரிசனம் கூடிய வசை பாடலை வலையேற்றிக் கொண்டிருப்பது வாடிக்கை. ஆனால் அதே தினமலரில் சில நல் முத்துக்களும் காணக்கிடைக்கின்றன என்பதனை அந்த முற்போக்காளர்கள் ஒத்துக் கொள்வார்களோ என்னவோ!

அவ்வகையில் தற்போது தினமலரில் வெளிவந்துள்ள ஒரு சிறப்பான, சமூகப் ப்ரக்ஞையுள்ள கட்டுரையைப் படித்தேன். இன்றைய நிலையில் மிக்க அவசியமான ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பல அறிவுரைகளை ஸ்வர்ணா அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதன் சுட்டி இதோ:-
"பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்"

சரி, தினமலர் கட்டுரையைப் படித்து விட்டீர்களா?
இனிமேல் என்னுடைய கருத்துக்கள்:-

இப்போதெல்லாம் இன்டெர்னெட் சாட்டிங், செல் போன், ஈமெயில் இது போன்ற ஊடுருவிகள் குழந்தைகளின் மனத்தைக் கெடுக்கின்றன. முன்பின் தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க விஷயங்களைக் கூட மணிக்கணக்காக சாட் பண்ணுகிறார்கள். இதனால் தெளிவான சிந்தனை உள்ளவர்களின் மனங்கள் கூட சலனப்பட்டு விடுகின்றன. எதையும் ஒரு தடவை முயன்று பார்த்தாலென்ன, அதில் என்ன தவறு, என்பது போன்ற எதிமறை உந்துதல்கள் எழுகின்றன. Children tend to rebel against their parents to fall in line with their peers. ஆனால் அந்த வயதில் அவர்களுக்குத் தவறான வழிகாட்டிகள் அமைந்து விட்டால் அவ்வளவுதான் - அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்தம் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்கள் வாழ்வும் பெருமளவில் பாதிக்கப்படும்.

பெண் குழந்தைகள் மட்டும்தான் என்பதில்லை, ஆண் குழந்தைகளுக்குக் கூட மேற்கூறிய "ஸ்வர்ணா கார்னர்" அறிவுரைகள் பொருந்தும். ஏனென்றால் உலகில் பலவித வக்ரங்கள் பெருகிக் கிடக்கின்றன!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய இன்னும் சில முக்கிய வழிமுறைகள்:- மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 3431 முறை) ::

வேலை வேண்டுமா? விழியைத் திறந்து வைத்துக்கொள்!

பொது :: மறுமொழி ஒன்று »

தந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது "கட்டுக்கட" மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற விளம்பரத்தை பொது இடத்தில் வைத்தது.
புரிந்தவர் சென்றனர், வென்றனர்! Electronic Arts

:: (பார்வை 649 முறை) ::

 

6-ல் இது-6« முதல்...«23456

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in