‘பொது’ வகைசார்ந்த இடுகைகள்

இல்லவே இல்லை!

பொது :: மறுமொழி ஒன்று »

அரசு அலுவலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்), அவர்கள்தம் திருமணத்தின்போது எவ்வளவு வரதட்சிணை பெற்றார்கள் என்பதை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. விவரம் இதோ.

இதோ அறிவித்துவிட்டேன் - நான் வரதட்சிணை வாங்கவில்லை, வாங்கவேயில்லை!

உண்மையைச் சொல்லப் போனால், யாராவது கொடுக்கத் தயாராயிருந்தால்தானே வாங்குவதற்கு!

ஆமாம், யார் உண்மையை அறிவிப்பார்கள்? ஒருவேளை மனசாட்சி குடையட்டுமே என்று எண்ணினார்கள் போலிருக்கிறது!

சௌதியில் பெண்கள் நிறைய வரதட்சிணை வாங்குவதாக சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு திசைகள் இதழில் படித்த ஞாபகம். அந்த நாட்டில் இதுபோன்ற சட்டம் பெண்களுக்கு மட்டும் என்று இயற்றுவார்கள் போல!

:: (பார்வை 703 முறை) ::

ஆஸ்கார்!

பொது :: Comments Off

சரித்திரம் படைப்போம்

சமாதானம ஒருநாள் நிச்சயம்.

(நன்றி :: ஹிந்து)

வெற்றியா, தோல்வியா?

வெற்றியா, தோல்வியா?

(நன்றி :: தினமலர்)

:: (பார்வை 727 முறை) ::

கட்டங்கள் கஷ்டங்கள்

பொது :: 12 மறுமொழிகள் »

திரைப்படங்களும், ஊடகங்களூம், நாவல்களும் ஏதோ காதல் செய்வதுதான் இளைஞர்களின் வாழ்வின் மிக அத்தியாவசியமான கடமை போன்ற - அன்றாடம் சாப்பாடு சாப்பிட்டு பாத்ரூம் போவது போல் - ஒரு தோற்றத்தை உண்டாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அதைப் பற்றியே துவைத்து எடுத்துக் கொண்டிருக்கின்றன. 45-50 வயது தாத்தாக்களெல்லாம் (டை, விக், பான்கேக் சகிதம்) கல்லூரி இளைஞர் வேஷம் போட்டுக் கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கால இளைஞர்கள் (நகரங்களில் வசிக்கும் படித்தவர்களைக் குறிப்பிடுகிறேன்) அப்படி ஒன்றும் காதல் திருமணம் செய்வதில் அவ்வளவு முனைப்பாய் இருப்பதுபோல் தோன்றவில்லை. இன்றைய நிலையில் எல்லோர் மனமும் தன் எதிர்காலத்தை நிலைப்படுத்தும் வேலையிலேயே வியாபித்து நிற்கின்றது. They have become so career-oriented that they have neither the time nor inclination for indulging in such fancies!

எனக்குப் பழக்கமான ஒரு இளம்பெண்ணை அன்றைய தினம் இஸ்பஹானி சென்டரில் சந்தித்துக் கேட்டேன், "என்ன மத்ஸ், BPO வேலையிலே சேர்ந்தாச்சு; அடுத்தது யாராவது பையன்களை லவ் பண்ணி அதிலே ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. பார்க்க கொஞ்சம் பரவாயில்லாம இருக்கேயே, பசங்க ஒத்தனும் கண்டுக்கல்லையா" அப்படீன்னு கேட்டேன். அதற்கு அவள், "அங்க்ஸ், கல்யாணமெல்லாம் பெரிய responsibility. அதெல்லாம் அப்பா, அம்மா பாத்துக்குவாங்க. எனக்கு லைஃப்ல செட்டில் ஆகணும். MBA பண்ணனும் (சில படிப்பெல்லாம் "படிக்கிறது" கிடையாது - "பண்ணறது" தான்!). கைல கொஞ்சம் காசு சேக்கணும், நல்லா டிரெஸ் பண்ணனும், ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா இருக்கணும். அவ்வளவ்தான்" இப்படிப் போகிறது அவளுடைய சிந்தனைகள்.

சரி. இவர்களின் பெற்றோர்கள் செயல்பாடுதான் என்ன? மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1548 முறை) ::

எந்த நிலம் சொந்தம்!

பொது :: 4 மறுமொழிகள் »

"சன் டிவி"யின் "சிறப்புப் பார்வை" நிகழ்ச்சியில் சொத்து வாங்குவதில் உள்ள பிரச்னைகளையும், ஏமாற்றல் வேலைகளையும், தலைவிரித்தாளும் லஞ்ச லாவண்யங்களையும் அலசினார்கள். ஒருவர், தான் வாங்கியுள்ள இடத்தை இன்னொருவரும் பதிவு செய்துகொண்டு சொந்தம் கொண்டாடிய சோகக் கதையைக் கூறினார். இன்னொருவர், எந்த இடம், சர்வே நம்பர் எதையுமே கவனிக்காமல் பணம் கொடுத்து விட்டு, வாங்கியயுள்ளதாக நம்பிக் கொண்டிருக்கும் இடம் வேறு, பத்திரத்தில் உள்ள இடம் வேறு என்றாகி, அந்த இடம் உண்மையில் வேறொருவருக்குச் சொந்தம் என்ற நிலையில் மோசம் போய் நிற்கின்ற கதையையும் விவரித்தார்கள்.

பெரும்பாலும் பத்திரங்களில் எழுதியிருக்கும் வாசகங்கள் தெளிவாகப் புரியும் விதத்தில் எழுதப் படுவதில்லை. மக்களும் சொத்தின் விவரப் பட்டியல்கூடப் பார்க்காமல் கையொப்பமிடுகின்றனர். பத்திரங்களை பாமரருக்கும் புரியும் விதத்தில் எழுத ஆரம்பித்து, "பணத்தின் நிறம் வெள்ளை" என்று புரட்சி செய்த அலாக்ரிடி (Alacrity Housing Limited) கம்பேனி தாக்குப் பிடிக்க முடியாமல் மூடப்பட்டுவிட்டது. இந்தத்துறையில் அநேகமாக எல்லோருக்கும் பிடித்தமான பாடல், "கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு"! ஸ்டாம்ப் சிலவு குறைவதற்காக வாங்குபவர்கள் மதிப்பைக் குறைப்பதும், Capital Gains Tax மற்றும் பலவகை வரி ஏய்ப்புக்காக விற்பவர்கள் குறைப்பதும் சர்வ சாதாரணம். ஆனால் சமீபத்தில் Guidance value என்று ஒவ்வோர் இடத்திலும் மார்க்கெட் மதிப்பு என்ன என்பதை நிர்ணயம் செய்து அதன்படி பதிவுக் கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் நம் தோழர்கள் ஓட்டைகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பதிவு செய்யும் அலுவலகத்திற்குச் சென்றால் அப்படியே வழுக்கும். அவ்வளவு கிரீஸ்!
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1018 முறை) ::

புள்ளி in-தியன்!

பொது :: 3 மறுமொழிகள் »

இணைய தள அமைப்பு பற்றியும், டொமைன் பெயர் பதிவு, தளத் தாழ்வார வாடகை முதலிய ராக்கெட் அறிவியல் விளக்கங்களையும் எழுதப் போகிறேன் என்று முன்பு பயமுறுத்தியிருந்தேன். "எழுதுங்கள் பார்க்கலாம்" என்று காசி அவர்கள் வழிமொழிந்திருந்தார். விலாவாரியாக எழுதலாம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உடனடியாக இந்த விஷயத்தில் எழுந்திருக்கும் ஒரு சமீபத்திய மாறுதல் பற்றி முதலில் எழுதிவிட்டு பின்னர் ஆழ உழலாம் என்று எண்ணுகிறேன்.

"டாட் காம்" என்பதுதான் டொமைன்களின் ராஜா போன்றது. இணையத்துக்கே "டாட் காம்" என்கிற பெயர் ஒரு generic name போல் ஆகிவிட்டது ( நகல் எடுப்பதற்கு Xerox-பண்ணுவது என்று சொல்வது போல). .com தவிர .net, .org போன்ற மேல்நிலை தளநிலைகள் (Top Level Domains - TLD's) இருந்தாலும் டாட் காம் என்றால் ஒரு தனி மரியாதைதான் என்பதை மறுக்கமுடியாது. அதனால் ஒரு தளப் பெயரைத் தேர்ந்தெடுக்க முயலும்போது, முதலில் அந்தப் பெயர் டாட் காம் கிடைக்கிறதா என்று தேடுவார்கள். நான் கிச்சு inc என்று ஒரு இன்டெர்னெட் வணிகம் சார்ந்த நிறுவனம் தொடங்க ஆசைப் பட்டேனென்றால் முதலில் என் அபிமான டொமைன் பெயர் பதிவாளரின் இணையக் கடைக்குச் சென்று kichu.com கிடைக்குமா என்று தேடுவேன். அதற்காக அங்கு ஒரு தேடுதல் குப்பி இட்டிருப்பார்கள். அந்தப் பெயரை இன்டெர்னெட் முகவரிகளின் பட்டியலில் (domain name registry database) தேடவேண்டும். அந்த நிரலி, நான் தேடும் பெயர் இன்னுமிருக்கிறதா அல்லது வேறு யாரேனும் அதைப் பிடித்து விட்டார்களா என்று சொல்லிவிடும். இந்த விஷயத்தை ரொம்ப simplistic-ஆக சொல்லிவிட்டென். நிறைய நெளிவுசுளிவுகள் உள்ளன. அது போகட்டும். இப்போது எனக்கு வேண்டிய kichu.com - ன்மேல் யாரோ ஒரு புன்ணியவான் ஏற்கனவே துண்டு விரித்து விட்டான் ("ர்"-எதற்கு வம்பு!), அடுத்து என்ன செய்வது? சரி, kichu.net, kichu.org, kichu.info, kichu.cc, kichu.name - இதுபோல் ஏதாவது (ம்ம், ஏதாவது ஒரு கிழவனுக்கு இரெண்டாம் தாரமாவது கொடுக்க வேண்டியதுதான் என்பதுபோல!)கிடைக்குமா என்று முயற்சி செய்வேன்.

இந்த இடத்தில் தான் ஒரு புதிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்திருக்கிறது.உண்மையில் இது ஏற்கனவே இருந்ததுதான். ஆனால் அது ஒரு அரசு இயந்திரத்தின் அங்கமாக, பிரபலமாகாமல் இருந்தது. இப்போது அதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் போணி பன்ணியிருக்கிறார்கள்.

டாட் இன்நான் கதைப்பது ".in" என்னும் இந்தியாவின் நாடு சார்ந்த (Country Code Internet domain name - ccTLD) டொமைன் பெயரைப் பற்றித்தான். இத்தகைய இந்தியப் பெயர்களை முன்பு தொழில்முறை நிறுவனங்களுக்கு மட்டும் National Centre for Software Technology (NCST) என்ற அரசுத்துறை அலுவலகம் பதிவு செய்து வந்தது. அது ஒரு மாதிரி தேக்க நிலையில் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 1-ம் நாள் இதனை பெரிய அளவில் விரிவாக்கத் திட்டமிட்டு எல்லோரும் .in டொமைன்களைப் பதிவு செய்யலாம் என்று அறிவித்தார்கள். இதற்கான அறிவிப்பை கணினியியல் துறைக்கான மைய அரசு அமைச்சர் வெளியிட்டார்.

இந்த டொமைன் பதிவுகளார்களை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்காக தனி நிறுவனம் ஒன்றையும் - National Internet Exchange of India (NIXI) தொடங்கியுள்ளார்கள். சுமார் 25 தனியார் நிறுவனங்களை இந்த டாட் இன் டொமைன் பெயர் பதிவாளர்களாக அங்கீகரித்திருக்கிறார்கள் (Accredited Registrars). இவர்கள் .in டொமைன் பெயர்களை விற்கலாம். உங்கள்பெயர்.in என்பதை இரண்டாம் நிலை டொமைன் என்பார்கள். இதனைத் தவிர மூன்றாம் நிலை டொமைன்களான உங்கள்நிறுவனம்.co.in போன்றவைகளையும் பதிவு செய்யலாம். ஒரு ஆண்டுக்கு இந்தப் பெயர்களுக்கான வாடகை ரூ.700-800 - இரண்டாம் நிலைக்கும், ரூ.400-500 - மூன்றாம் நிலைக்கும் வாங்குகிறார்கள். இந்த விலை பதிவாளர்களிடையே மறுபடும்.அவர்கள் செய்யும் மேலதிக உதவிகள், நுகர்வோர் பிரச்னைகள் தீர்வு முதலிய சேவைகளைச் சேர்த்து விலை நிர்ணயித்திருப்பார்கள்.

இதுபோன்ற பதிவாளர் (.in Domain Registrar) நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வணிகம் செய்ய நீங்கள் விரும்பினால் அதற்கான தகுதிகள், தேவைகள், முதலீடு முதலியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து விபரங்களும் இந்தச் சுட்டியில் கிடைக்கும்.

இதுவரையில் அங்கீகாரம் பெற்ற பதிவு நிறுவனங்களில் Rediff, Sify போன்ற பெரிய தலைகள் இன்னும் சேவை தொடங்கவில்லை. ஏனெனில் தொடக்கத்தில் சில நாட்கள் sunrise period என்று ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தீர்ப்பதற்காக கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறார்கள். பிப்ரவரி 16 க்குள் இது பக்காவாகியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறிது நாட்களுக்குப் பிறகு கன்ஃபர்ம் பன்ணுவார்கள்.

இப்போதைக்கு இந்த வலைப் பக்கத்தில் கண்டுள்ள நிறுவனங்களில் பல பதிவு செய்யத் தொடங்கி விட்டன. நீங்கள் டாட் இன் தளப் பெயர் ஏதேனும் பதிவு செய்ய விரும்பினால் அவற்றில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயங்கள் சில:

  1. DNS nameservers மாற்ற வசதி
  2. இணையம் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி
  3. டொமைனின் முழுக் கட்டுபாடும் உங்கள் கையில்
  4. பெயர் திருட்டுப் போகாமலிருக்கப் பூட்டு(Registrar lock).இதனை உங்கள் விருப்பப்படி இடவோ, நீக்கவோ முடிய வேண்டும்.
  5. பிரச்னையின்றி பெயரின் உரிமையை மாற்றும் வசதி(சிலர் படுத்தி விடுவார்கள்!)

இது தவிர சில பதிவாளர்கள் சிறப்பு சேவைகளையும் இனாமாகச் செய்வார்கள்:

  1. டொமமைன் பெயரை இன்னொரு தளத்துக்கு மாற்றுதல்
  2. மின்னஞசல் முகவரி
  3. டொமைன் குடியிருப்பு (parking)
  4. Free dynamic DNS, free nameservers

டொமைன் பெயர் இலாக்காவில் டெக்னிகல் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இவற்றைத் தொடக்கத்திலிருந்து விளக்க முயற்சி செய்கிறேன், எதிர்வரும் பதிவுகளில்!

டாட் காமை விட்டு வெளியில் வந்து இந்தியாவைச் சார்ந்த வலைத்தளமாக விளங்க "டாட் இன்" ஒரு அடையாளச் சின்னம்!

என்ன சுமார் 800 ரூபாய்தானே, எடுங்கள் துண்டை. போடுங்கள் - ஜெயலட்சுமி டாட் இன், ஜெயேந்திரர் டாட் இன் (He is already "in"!), ரஜனிராம்கி டாட் இன்……….
போட்டுத் தள்ளுங்க!

:: (பார்வை 1076 முறை) ::

இது கொஞ்சம் ஓவர்!

பொது :: Comments Off

இந்தப் படத்தைப் பாருங்கள்!எல்லாமே ஓப்பன்!

நடு ரோடிலெ இப்படியா?

இதில என்னமோ விஷயம் இருக்கு!

:: (பார்வை 799 முறை) ::

தளப்பெயர்கள் ஜாக்கிரதை!

பொது :: 4 மறுமொழிகள் »

எங்கே என் திருநாம்?இன்டெர்னெட் டொமைன் பெயர்களைப் பதிவு செய்யும் முறைகளை மேற்பார்வையிட்டு முறைப்படுத்தும் அமைப்பான ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) தற்போது அதன் சட்டதிட்டங்களில் சில மாறுதல்களைச் செய்திருக்கின்றது. அதன்படி உங்கள் டொமைன் பெயரை ஒரு பதிவாளரிடமிருந்து (Registrar) இன்னொரு ரெஜிஸ்ட்ராருக்கு மாற்றும் முயற்சி எழுந்தபின், 5 நாட்களுக்குள் மறுப்பேதும் கூறவில்லையென்றால் அந்தப் பெயர் இன்னொருவருக்கு (புதிய பதிவாளர் மூலம்) மாற்றப்படும். இதற்கு முன் அந்தப் பெயரின் உரிமையாளர் (Administrative contact as per the registry) ஒப்புதல் கொடுத்தால்தான் மாற்ற முடியும் என்ற நிலை இருந்தது,

இந்த மாற்றல் முயற்சியை யார் வேண்டுமானாலும் கன்னம் வைக்க ஆரம்பிக்கலாம். ஒரு பதிவாளரிடம் சென்று ஒரு கணக்குத் தொடங்கி, அங்கே, "Transfer a domain" என்று இருக்கும் சுட்டியை சொடுக்கினால், (அதற்கான கட்டணம் - குறைந்த பட்சம் ஒரு வருட வாடகை - செலுத்திய பின்) அந்த டொமைனின் தற்போதைய பதிவாளருக்கு ஒரு விண்ணப்பம் போகும். உடனே அவர்கள், அந்தப் பெயரின் உரிமையாளர் கொடுத்துள்ள மின்னஞ்சல் விலாசத்துக்கு ஒரு மடல் அனுப்புவார்கள், "என்ன, மாற்றலாமா?" என்று. புதிய பதிவாளரும் ஒரு அஞ்சல் அனுப்புவார், "நீங்கள் ஒப்புகை கொடுக்கிறீர்களா? அப்படியானால் இங்கே கிளிக்கியுங்கள்" என்று. டொமைன் உரிமையாளர் ஒரு ஒலிம்பிக் சோம்பேரியாக இருந்து, என்றைக்கோ கொட்டாவி விட்டுப்போன அஞ்சல் முகவரியை மாற்றாமல் இருந்தால், இந்த மடல்களைக் காணப்போவதில்லை. அவ்வளவுதான், 5 நாள் மறுப்புக் கெடு முடிந்தவுடன், டொமைன் பெயர் "கோவிந்தா" தான்!

Washington Post நிறுவனம் கூட இதுபோல் தன் பெயர் ஒன்றை இழக்கும் நிலை வந்து, பின் எகிறி ஓடிப் பிடித்தார்கள்.

சரி, இதுபோல் டொமைன் திருநாமங்கள் ஜேப்படியாகாமல் தடுப்பதுதான் எப்படி?

பதிவாளர்களிடம் ஒரு பூட்டு இருக்கும். அதைப் போட்டுவிடச் சொல்லுங்கள் (Registrar Lock). ஆனால், அந்தப் பூட்டின் சாவி உங்கள் கையில் இருக்க வேண்டும். நீங்களாக மாற்ற விரும்பினால் திறக்க ஏதுவாக இருக்கும்.

Domain registration, hosting, control panel, Zone file, CName, A Name, DNS, Name server, MX records, canonical name, dynamic DNS, IP………….. இது போன்ற e-funda சமாசாரங்களைப் பற்றி எழுத ஆசை!

:: (பார்வை 828 முறை) ::

நல்லோர்க்கல்ல இவ்வுலகம்!

பொது :: 2 மறுமொழிகள் »

நல்ல உள்ளம்!எங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் ஒரு தனி மனிதன். ஆம், அவரைச் சுற்றி நின்றவை பல லட்சம் தலைகள். ஆனால் அவர் தன்னந் தனியனாகத்தான் அங்கு நின்றார். கண்களில் கண்ணீர் வெள்ளம். கையில் பிடித்திருந்த ஒலி பெருக்கி மூலம் அந்த இளம் உள்ளங்களை நோக்கி வேண்டுகிறார். "இங்கிருந்து கலைந்து சென்றுவிடுங்கள். நான் உங்களுக்கு எந்தவித உதவியும் செய்ய இயலாத நிலையில் உள்ளேன். நான் வெகு தாமதமாக வந்துள்ளேன். நிலைமை கைவிட்டுப் போய்விட்டது. தயவு செய்து விலகிச் செல்லுங்கள். உடனே செல்லுங்கள். இந்த இளந்தளிர்களின் இரத்தம் சிந்துவதை என்னால் தாங்க இயலாது" என்று இறைஞ்சி நிற்கிறார்.

அதுதான் அந்த மனிதர் வெளி உலகத்தைக் கண்ட கடைசி நாள்.

அந்த நாள்: 1989 மே மாதம் 19-ம் தேதி.

அந்த இடம் : டியனன்மென் சதுக்கம், பெயிஜிங், சீனா.

அந்த உயர்ந்த மனிதர் ஸாவோ சியாங் (Zhao Ziyang). அவர் சார்ந்த அமைப்புக்கு ஒவ்வாத நல்ல மனம் படைத்த அவருடைய ஆன்மா கடைசியாக பிரிந்த நாள் ஜனவரி 17, 2005. ஆனால் அவர் 15 வருடங்கள் முன்னமையே ஒருமுறை இறந்து விட்டார்.

சீன நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் அவர். கட்சி (கம்யூனிசம்) வேறு, ஆட்சி வேறு என்ற கொள்கையை கொணர முயற்சித்தவர். சீனப் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் மலர வழிவகுத்தவர். தன் தந்தையை தன் கட்சி அரசியல்வாதிகளே கொன்றபோதும், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பாக இருந்தவர். சீனத்தின் மக்கட் தொகை மிகுந்த சீசுவான் மாநில ஆளுநராக ஸாவோ பணியாற்றும்போது, மக்களுக்கு அவர்களின் நில உரிமையை வழங்கி உற்பத்தியை 80 சதம் பெருக்கினார். அவர் செய்த சீர்திருத்தத்தின் பயனால் அங்கு பஞ்சம் தீர்ந்தது. அக்காலத்தில் அவரைப் போற்றி "yao chi liang, Zhao Ziyang" (உண்ண உணவு வேண்டுமா, ஸாவோ சியாங்கைக் கேள்!) என்று கோஷமிடுவார்களாம். அந்த அளவுக்கு சீனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார்.

The man!கலாசாரப் புரட்சியெனும் கொடுமைகளுக்குப் பிறகு சீன மக்கள் தனி மனித சுதந்திரத்தை சுவாசிக்க ஆரம்பித்தது இவர் காலத்தில்தான். ஆனால் அவர் அதற்காகக் கொடுத்த விலை மிக அதிகம். பதவி நீக்கம் செய்யப்பட்ட அவர் ஒரு கைதியாக, எந்த தனி மனித உரிமையும் இல்லாமல் 15 வருடங்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டு, விடுதலை பெறாமலேயெ நேற்று காலமானார் (ஜனவரி. 8 அன்றே இறந்து விட்டார் என்கிறார்கள் சிலர்). அவர் செய்த தவறு, அப்பாவி மக்கள்மீது ராணுவத்தை ஏவக் கூடாது என்று கட்சியில் வாதாடியதுதான்! ஒரு உண்மையான ஜனநாயகவாதியின் சோக முடிவு அது. He was a right man at the wrong place and time!

அந்நாட்டின் கம்யூனிசக் கட்சியின் பொதுச் செயலராக அவர் இருந்தபோதுதான் சீனாவின் அடக்கு முறை அரசியல் அத்தியாயம் முடிந்து மக்கள் உண்மையான ஜனநாயகத்தை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த
அடிக்குப் பின் விளைவாக மக்களுக்குக் கிடைத்தது மிகப் பெரிய மரண அடி!

The attack
மனித இரத்தத்தினால் எழுதப்பட்ட சீன சரித்திரத்திலேயே ஜூன் 4 (1989) ஒரு மனத்தை உருக்கும் துக்க நாள். அன்றுதான் அந்த நாட்டின் ராணுவம் தன் ராட்சத டாங்க் படையைக் கொண்டு அப்பாவி இளைஞர்களை பல்லாயிரக் கணக்கில் நசுக்கிக் கொன்று கிழட்டு அரசியல்வாதிகளின் ஆதிக்க வெறியைத் தணித்த நாள். அங்கு மக்கள் எப்படி வேட்டையாடப் பட்டார்கள் என்பதை BBC - யின் வீடியோ படத்தில் பார்க்க இங்கே "கிளிக்கி"யுங்கள்.

பாவம்

The rescue

The unknown Rebel!தனி மனிதனாக இராணுவ டாங்குகளை எதிர்கொள்ளும் இந்த இளைஞனின் தீரத்தையும் பயமின்மையும் காணுங்கள். இந்த இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. இவனுக்கு "டாங்க் மனிதன்" மற்றும் "Unknown Rebel" என்ற பட்டப் பெயர்கள் உள்ளன. இவனை சீன ராணுவம் கொன்றுவிட்டது என்கிறார்கள்; இல்லை இல்லை, எங்கோ பதுங்கியிருக்கிறான் என்கிறார்கள் - இது போன்ற பல கதைகள் உலவுகின்றன. ஆனால் மனிதனுக்கு சுதந்திர தாகம் மட்டும் வந்துவிட்டால், எத்தகைய மனத்திட்பம் கொண்டவனாக ஆகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. அவன் ராட்சத டாங்கு களை எப்படித் தடுக்க முயலுகிறான் என்பதை CNN-ன் குறும்படத்தைக் காண இங்கு கிளிக் செய்யுங்கள். அவன் நின்று கொண்டிருந்த சாலையின் பெயர் "Great Avenue of Everlasting Peace". What an irony! ஆனால் சீனாவில் இந்த டாங்க் மனிதனைப் பற்றி மக்கள் யாரும் கருத்துரைக்கவோ எழுதவோ முயலுவதில்லை. ஏனெனில் அங்கு அரசு இயந்திரத்தின் அடக்கு முறைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.

டெங்குஅப்பாவி மக்களின்மேல் இந்த அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது யார் தெரியுமா? மாவோவுக்குப் பின் சீனாவின் விடிவெள்ளியாகக் கருதப்பட்ட டெங் சியாவோ பிங் (Deng Xiaoping) மற்றும் அவர் சீடர் லீ பெங். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த லீபெங், சீன மக்களால் மிகவும் விரும்பப் பட்டவரும் தன்னைவிட மக்கள் மத்தியில் புகழ் பெருகிறார் என்பதற்காக அவருடைய புற்று நோய்க்கு மருத்துவம் செய்வதற்கு மாவோவால் அனுமதிக்கப் படாமல் இறந்துபோனவருமான சூ என் லாயின் வளர்ப்பு மகன்.. இந்த சூ யென் லாய் தான் ஜவஹர்லால் நேரு காலத்தில் இந்தியாவுக்கு வந்தவர். "பஞ்ச சீலம்", "ஹிந்தி-சீனி-பாய் பாய்" போன்ற வாசகங்கள் சிலருக்கு நினைவிருக்கலாம். ஆனால் அதன்பின் எல்லாவற்றிற்கும் "பெப்பே" என்று நம்மீது படையெடுத்து, நேஃபா மற்றும் அக்சாய் சின் பகுதியில் பெரிய நிலப் பரப்பை சீனா தன்வசப்படுத்தியது இன்னொரு சரித்திரம்.

இந்த அடக்கு முறைக்குப் பின் ஸாவோ பதவி நீக்கம் செய்யப் பட்டு சிறையிடப் பட்டார். ஆனால் இறந்த பின்னும் அவர் இன்றைய சீனத்தின் அதிகார வர்க்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் இவருக்கு முன்னால் சீர்திருத்தம் செய்ய முற்பட்ட தலைவர் ஹ்யூ யாவொ பெங் இறந்த பின் அவர் நினைவாக மக்கள் கூடியபோது வெடித்ததுதான் டியனன்மென் புரட்சி. அதற்கு முன் சூ யென் லாய் இறந்த போதும் இது போன்ற கிளர்ச்சி எழுந்தது.

இந்த உலகத்தில் நல்லவர்கள் கையில் எந்த அதிகாரமும் நிலைக்காது என்பதற்கு இன்னொரு உதாரணம் ஸாவோ சியாங்!

:: (பார்வை 803 முறை) ::

சங்கீதமும், வித்வான்களும்!

பொது :: மறுமொழி ஒன்று »

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று என்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆனால் சங்கீதம் என்பது வேறு அனுபவம்; சங்கீதக் காரர்களை அருகில் காண்பது வேறு அனுபவம். ஒரு கை விரல்களைக் கொண்டு எண்ணக் கூடிய வெகு சிலரைத் தவிர மீதியுள்ள வித்வான்களைக் காதால் மட்டும் கேட்டு விட்டு ஓடிப்போனால் உங்களுக்கு நல்லது! அவர்களுடன் நெருக்கமே கூடாது. சபா செயலர்கள் எப்படி நெருங்காமலிருக்க முடியும் என்று கேட்கலாம். அவர்கள் நிலை வேறு. அந்த இரு சாராரும் ஒரு மாதிரி symbiotic existance உள்ளவர்கள். இருவர்களும் ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்துக் கொண்டு "தடுக்கும் கோலமுமாக" இருப்பார்கள். மேலும் அந்த இரு சாராரும் ஒரு மொத்த அமைப்பின் complementary-ஆக, ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பதால் ஒரு வணிகம் சார்ந்த உறவு கொண்டு ஒழுகும் கட்டாயத்தில் இருப்பவர்கள். இவர்களை விட்டு விட்டு நம்மைப் போல் சாதாரணர்களைப் பற்றிப் பார்ப்போம்! மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 851 முறை) ::

கோகில கான இசை வாணி

பொது :: மறுமொழி ஒன்று »

சிறு வயதில் ரேடியோதான் எனக்கு நெருங்கிய துணை. எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் - முதலில் Texla பிறகு Bush - இரவு நேரங்களில் கர்னாடக சங்கீதம் தான் குத்தகை - அதிலும் மூக்கு வித்வான்கள்தான் நீ இழு, நான் இழு என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள், நீர் வற்றிக் கொண்டிருக்கும் குட்டையின் சேற்றில் படுத்து சொர்க்கத்தை அநுபவிக்கும் எருமை மாட்டின் "கொய்ங்" போல! இந்த சங்கீதக் காரர்களுக்கு அநாவசியமாக வாய் வேறு எதற்கு - மூக்கு ஒன்றே போதுமே என்று நான் பல முறை என்ணியிருக்கிறேன்.எம்.எஸ் என் அம்மாவிடம் "இப்படி இழுத்து இழுத்து பாடுவதுதான் சங்கீதமா? ஏன், இனிமையாகப் பாடக் கூடாது என்று ஏதாவது இலக்கணக் கட்டாயமா?" என்று கேட்கும்போதெல்லாம், "டேய், எம். எஸ்-ஸைக் கேட்டுப்பார்டா. அது தாண்டா சங்கீதம்" என்று பதில் சொல்லுவார். அப்போதிலிருந்தே அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் போல் நானும் எம்.எஸ் பாடல்களைக் கேட்டு அந்த இசையின்பத்தை அநுபவித்து வருகிறேன்.

சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகப் பிரும்ம ஆராதனைக்குச் சென்றிருந்தேன். வழக்கத்தை விட தாங்க முடியாத கூட்டம். காலையிலிருந்தே கையில் சாப்பாடு, தண்ணீருடன் கொட்டகைக் குள்ளேயே பல பெண்மணிகள் உட்கார்ந்திருந்தனர். நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடிக் கொண்டே வந்தது. ஆம், அன்று ஒரு சிறப்பான நாள். பல வருடங்கள் இடைவெளிக்குப் பின் அன்று தான் எம்.எஸ் அவர்கள் ஆராதனையில் பாட இருந்தார்கள்! மேடையை நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம். நானும் எனக்குத் தெரிந்த தலைகள் மூலம் கிட்டத்தில் போக முற்பட்டேன். பலிக்கவில்லை. முன்னமையே முயற்சி செய்து அங்குள்ள நிர்வாகிகள் யாரையாவது சிபாரிசு பிடித்திருக்கலாமே என்று
தோன்றியது. சரி. இப்போது என்ன செய்வது? கடைசியில் அமர்ந்து கேட்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது மேடையின் அருகில் அமர்ந்து எம்.எஸ் கச்சேரியை கேட்க வேண்டும் என்கிற வெறி. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 805 முறை) ::

 

6-ல் இது-5« முதல்...«23456»

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in