‘பொது’ வகைசார்ந்த இடுகைகள்

கடைகழி மகளிர்

பொது :: Comments Off

திரு. ஞானியார் ரசிகவ் அவர்களின் "இரட்டை முதுகலைப் பட்டதாரிகளை"ப் பற்றிய இந்தப் பதிவைப் படித்தவுடன் என்னுடைய அனுபவங்களையும் பதிக்கலாமென்று எண்ணினேன்.

முன்பெல்லாம் திருச்சி கோட்டை இரெயில்வே நிலயத்திற்குப் போகும் வழி மிக இருட்டாயிருக்கும். இரு பக்கமும் புதராக வேறு இருக்கும் (இப்போது முழுதுமாக உருமாறிவிட்டது). பொழுது சாய்ந்தபிறகு யார் அந்தப் பக்கம் போனாலும் அங்கு அலைந்து கொண்டிருக்கும் "அழகிகள்" கையைப் பிடித்து இழுத்து விடுவார்கள். இதனால் விளக்கு வைத்தபிறகு அந்தப் பக்கம் போவதை பெரும்பாலும் எல்லோரும் தவிர்ப்பார்கள் - வாடிக்கையாளர்களைத் தவிர.

ஒரு முறை என் ரூம்மேட்டை ஜங்ஷன் சென்று ரயிலேற்றிவிட்டு அவனுடன் கோட்டை வரை வந்து, பின் அங்கு இறங்கி டாடா காட்டிவிட்டு வெளிவந்தேன். இரவு சுமார் 10 மணியிருக்கும். ஸ்டேஷனிலிருந்து மெயின் ரோடு வரையிலான பாதையை வேகவேகமாகக் கடக்க முற்பட்டேன். இருட்டில் முகம் தெரியாத பூதங்கள் இரண்டு என்னை வழிமறித்தன. "டேய், என்னடா ஓடர? இதோ பார், அந்த ஐயா எப்படி எங்களோட வர்ரார் பாரு. நீயும் வாடா. காசை அப்பறம் கொடு. வாடா" என்றபடி கையைப் பிடுத்து வலிக்கத் தொடங்கினார். எனக்கு நடுங்க ஆரம்பித்தது. கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். "ஓடராம் பாருடா, டேய், ஒனக்கு சாமானம் இல்லே?" இப்படிக் கூப்பாடு போட ஆரம்பித்தனர். தெப்பக்குளக்கரையில்தான் என் ஓட்டம் நின்றது. அதற்குள் வியர்த்து விட்டது. அப்பா, அன்றைக்கு எனக்கு இரத்தக் காட்டேரியெல்லாம் கனவில் வந்தன.

நான் வசித்த ஆண்டார் தெரு முனையும், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதியும் இதுபோன்ற பரத்தமை வணிகத்திற்குப் பேர்பெற்றது. அப்போதெல்லாம் இவ்வளவு கடைகளோ, பர்மா பஜாரோ கிடையாது. அங்கு வசித்தவர்கள் இந்தக் கரைச்சலை ஒழித்து, அந்த ஏரியாவுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைப்பதற்காக ஒன்றுகூடி திரு. ஐயன் பெருமாள் கோனார் தலைமையில் ஒரு குழு அமைத்து சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பிறகு இது குறைந்தது. வெகு நாட்கள் அங்கிருந்த ஒரு தெரு முக்கில் "விபசார வீடுகளுக்கு வருபவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப்படும்" என்ற போர்டைப் பார்த்திருக்கிறேன். அதுபோல் சின்னக் கடைத்தெரு பகுதியையும் குறிப்பிடுவார்கள். அங்கெல்லாம் ஒரு முறை சென்று என்னதான் செய்கிறார்கள் என்று (ஒரு பூராயத்திற்காக) பார்க்கவேண்டுமென்று ஆசை. ஆனால் போதுமான தைரியமில்லை. நல்ல பிள்ளையாகவே வளர்ந்ததுதான் காரணமோ என்னமோ!

அந்தக் காலத்தில் விராலிமலை போகிறேன் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அதேபோல் சென்னையில் கோடம்பாக்கம் போகிறேன் என்றாலும் அதுதான் பொருள்.

ஒரு நள்ளிரவில் மதுரையில் ஸ்டேஷனில் இறங்கி விடுதியை நோக்கி டவுன் ஹால் ரோடு வழியாகச் செல்லும்போது ஒருவன் என் கூடவே மரியாதையாக நடந்து வந்து, "சார், என்ன சார் வேகமா போறீய்ங்க. இப்பவே பாதிராவு ஆச்சில்ல, இனி போய் என்ன செய்ய? என் கூட வாங்க. இந்த மணி தொழில்ல சுத்தமில்ல. மத்த பயலுகள்ளாம் சும்மா 16 வயசு, 18 வயசுன்னு பொய் சொல்லிட்டுத் திரியுவாங்க. இந்த மணிகிட்ட அதெல்லாம் கிடையாது. கியாரெண்டியா 25-க்கு தாண்டாது. அயன் சரக்கு. உங்களை மாதிரி பெரிய அதிகாரிகளுக்கின்ன கொணாந்தது. வாங்க, ரூம்பெல்லாம் போட்டு வைச்சிருக்கான் இந்த மணி" என்று கேன்வாஸ் பண்ண ஆரம்பித்தார். அப்பெல்லாம் நான் தெளிஞ்சுட்டேன், பயந்தெல்லாம் ஓடல்ல. "அப்பா மணி, இப்ப ரொம்ப டயர்டா இருக்கு. ரூமுக்கு போய் தூங்கணும். நாளைக்கு பார்க்கலாம்" என்றேன். அவர் கொஞ்சமும் மனம் கோணாமல் "நாளைக்கு இந்த முக்கில வந்து 'மணீ'ன்னு ஒரு குரல் கொடுங்க. ஓடி வந்துடுவமில்ல". என்றார். இன்னும் எனக்கு மணியின் சேவையைப் பெறும் பாக்கியம் கிட்டவில்லை!

சில நாட்களுக்குமுன் என் மனைவி வெளிநாடு சென்றிருந்தபோது என் நண்பரொருவர் ஒரு செல்பேசி எண்ணைக் கொடுத்து, ஒரு பெயரையும் கூறி, "வார முடிவில் இந்த எண்ணுக்கு டயல் செய்து, 'ஒரு நதி கடலைத் தேடுகிறது' என்று (ஆங்கிலத்தில்) சொல். பிறகு அவளே பேசுவாள். உனக்கு கம்பெனி கொடுப்பாள். கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்" என்றான். எனக்கு ஒரே த்ரில் (திகிலும் கூட). அதையே யோசித்தவண்ணம் படுத்தேன். லேசில் தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து பேப்பரைப் புரட்டினால், தன்னைக் காதலிக்கவில்லை யென்பதற்காக ஒரு நல்ல பெண்ணின் கைப்பேசி என்ணை, இதுபோல் "கால்கேர்ல்" நம்பர் என்று பலரிடம் கொடுத்து, அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான் என்று ஒரு செய்தி வந்திருந்தது. அவ்வளவுதான்! அந்த என்ணை நாளது வரையில் அழைக்கவில்லை என்றாலும் அந்த எண் என் டயரியில் இன்னமும் இருக்கிறது என்னவோ உண்மை! ;)

ஆனால் எனக்கென்னவோ இந்த விலைமாதர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் நிச்சயமாக ஒரு தேடுதலினாலோ, திமிரினாலோ இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டர்கள். அவர்கள் அந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றே நினைக்கிறேன். பேங்காக்கில் இதுபோல் "ஜில்பாஞ்சி" எல்லாம் நிறைய இருக்குமாம். தெரிந்தவர்கள் விளக்கலாம்! :)

:: (பார்வை 1032 முறை) ::

டேபிள் கிளீன்!

பொது :: Comments Off

பி.ஜி.வுட் ஹவுஸின் கதைகளில வரும் சீமான்களின் வீட்டு ஊழியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நிறைய சர்ச்சைகள் எழும். அவர்களுக்குள் ஒரு ஏணிப்படி போன்ற அமைப்பு (pecking order) இருக்கும். இது தெரியாமல் எஜமானர்கள் அவர்களிடம் காட்டும் அணுகுமுறை அவர்களுக்கு எற்புடையதாக அமையவில்லையெனில் சில சிக்கல்கள் தோன்றும். அதன் விளவுகளை அவர் மிக்க நகைச்சுவையுடன் வர்ணிப்பார். "வேலட்" என்று அழைக்கப்படும் "கனவானின் தனிப்பட்ட கனவான்" (இதில் இரண்டாவது "கனவான்" எனும் சொல் "உதவியாளர்" என்ற பொருளைக் கொள்ளும். என்றாலும் வுட் ஹவுஸ் "Gentleman's personal Gentleman" என்றே அழைக்கிறார். இது அவருடைய சிறப்பான சொல்லாட்சி), தவிர சமையல் மற்றும் சில சில்லுண்டி வேலைகளைச் செய்யும் "பட்லர்" (அந்தக் காலத்தில் வெள்ளைக்கார சீமாட்டிகளிடம் அடிமையாக இருந்தபோது, நம் ஆட்கள் பந்தாவுடன் பேசிய "பட்லர் இங்கிலிபீஸ்" நினைவுக்கு வருகிறதா!), மற்றும் தோட்டக்காரர்கள், வாட்ச்மேன் - இப்படி வெவ்வேறு படிநிலைகளில் பல பணியாளர்கள் இருந்தனர்.

இதுபோல் நம்மூரில் உள்ள சாப்பாடு ஹோட்டல்களிலும் காபி கிளப்புகளிலும் பணியாற்றும் சிப்பந்திகளுக்கிடையேயிலும் ஏற்றதாழ்வு இருக்கிறது. நான் குறிப்பிடுவது என்போன்றவர்கள் செல்லும் சாதாரண கஃபேக்களைப் பற்றித்தான் - கார்ப்பொரேட் (விண்மீன்கள் மின்னும்) ஹோட்டல்களைப்பற்றியல்ல. (அதற்காக நான் "பெத்த" ஓட்டல்களுக்கு சென்றதேயில்லை என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். முழுமையான "ஓஸி"யில் எத்தனை முறை சென்றிருக்கிறேன்! இப்பவும் அழைப்பு பலரிடமிருந்து வருகிறது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். காரணத்தை என் முந்தைய பதிவில் காணலாம்.)

முதலாளி என்று ஒருவர் இருப்பார். சிறிய கடைகளில் அவரே கல்லாவில் இருப்பார். அவர் பல தொழில் செய்பவராகவோ அல்லது பல இடங்களில் கடை வைத்து ஆங்காங்கு சென்று காசை அள்ளி சாக்கில் நிரப்பிக் கொண்டு, பிறகு சி.வீ 1, சி.வீ 2, சி.வீ 3 என்று ரவுண்டு வருவதற்கே நேரம் போதாமல் தவிப்பவராகவோ (இடையிடையே மாமியார் வீட்டில் வேறு வாசம்) இருந்தால், கல்லாவில் தன் மனைவியின் (நம்பர் என்ன? - இங்குதான் சிக்கல்) உறவினரையோ அல்லது வைப்பாட்டியின் (இங்கு பிரச்னையே கிடையாது) உறவினரையோ அமர்ந்தியிருப்பார். அபூர்வமாக அம்மணிகளே நேரடியாக வீற்றிருந்து காசு வாங்கிப் போடுவதும் உண்டு.

ஒரு நள்ளிரவில் ஹோசூரிலிருந்து சென்னை செல்ல வேறுவகை ஊர்திகள் கிடைக்காததால் ஒரு லாரியில் ஏறிப் பயணம் செய்ய நேரிட்டது. அப்போது கிருஷ்ணகிரி அருகில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வண்டியை நிறுத்தி, இட்லி, புரோட்டா என்று ஓட்டுநர் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தபோது பார்த்தால், அங்கு நெருக்கியடிக்கும் லாரிக்காரர்கள் கூட்டம். காரணம், கல்லாவில் ஒரு பெண். நெடிய தோற்றம். மலர்ச்சியான முகம். "வழித்து விட்டாற்போன்ற" அழகு, மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 572 முறை) ::

சுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல்

பொது :: 11 மறுமொழிகள் »

வெண் பொங்கல்சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் "ப்ரேக்ஃபாஸ்ட்" என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் ஸ்டேஷனில் வண்டி ஏறித்தான் பொன்மலை செல்லவேண்டும். இரவு சாப்பாடு "மாயவரம் லாட்ஜ்" அல்லது "ஆர்.டி.ஸி"யில்.

அந்த ஆனந்தா லாட்ஜில் ரெகுலராக சாப்பிடுபவர்களுக்கு "பில்" கொடுப்பது கிடையாது. சாப்பிட்ட பிறகு "கல்லா"வில் இருக்கும் கணக்கு நோட்டில் நம் பக்கத்தை எடுத்து நாமாக எவ்வளவு அணாவுக்கு சாப்பிட்டோம் என்று கணக்கு போட்டு எழுதிவைக்க வேண்டியதுதான். அடுத்த மாத ஆரம்பத்தில் கூட்டுப் புல்ளி போட்டு கணக்கை நேர் பண்ணவேண்டும். அநேகமாக யாரும் ஏமாற்றுவது கிடையாது. இப்படி நம்பிக்கையிலேயேதான் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனந்தா லாட்ஜில் டிஃபன் மிக ருசியாக இருக்கும். ஒருநாள் காலையில் "கமகம"வென்று நெய்ப்பொங்கல். நல்ல பசி வேறு எனக்கு. ஒரு "பிடி" பிடித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு "புஸ்தி" மீசைக்காரப் பெரியவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 702 முறை) ::

இந்திய தேசிய வலைவாசல்!

பொது :: 3 மறுமொழிகள் »

National Portal of India

இன்று இந்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த வலைத்தளம் (Portal) இன்று வெளிவந்திருக்கிறது.

http://india.gov.in/

நல்ல முயற்சி. சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நல்ல வேகமும் கூட. ஒரே தளத்தில் அனைத்து அரசுத் துறைகளைப்பற்றிய விவரங்களும் கிடைக்கப்பெறுவது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இப்போது சில சுட்டிகள் தொங்குகின்றன. நாளடைவில் சரியாகிவிடும் என்று நம்பலாம். எல்லா மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால் இந்த வசதியை அனைத்து அரசு சார்ந்த பணிகளுக்கும், செய்திகள் பெறுவதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

NIC - யின் முயற்சி பாராட்டுதற்குறியது!

:: (பார்வை 787 முறை) ::

புத்தகப் பரண்

புத்தகப் பரண், பொது :: மறுமொழி இனிமேல்தான் »

சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்!) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். இது பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தை கீவளூரில் புத்தகக் கடை வைத்திருந்தபோதிலிருந்து தொடர்ந்து வரும் பழக்கம் (சுற்றுவட்டாரத்திலிருக்கும் பல ஊர்களுக்கு புத்தகக்கடையாக எங்களுடையது ஒன்றுதான் இருந்தது. நிகரலாபம் குறைவு என்பதால் பலர் இந்தத் தொழிலில் அப்போது ஈடுபடுவதில்லை). காகிதம், அச்சு மை, வார்ணிஷ் எல்லாம் சேர்ந்து அளிக்கும் ஒருவித வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிறகு முதல் பக்கத்தில் பெயர், தேதி, ஊர் முதலியவற்றை குறிப்பது (Metadata of ownership). மிகவும் பிடித்த ஆசிரியருடையதாயிருந்தால் "பொக்கிஷம்" என்றெல்லாம் எழுதி வைப்பேன்!

சரி. பிறகு? படிப்பதில்லையா? அங்குதான் ஒரு சைத்தான் வந்து தன் விஷமத்தை காண்பிக்கும். ஒரு பிரட்டல் பிரட்டிவிட்டு, "நம்முடைய புக்குதானே, எங்கே ஓடிப்போகப் போகுது; சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம்" என்று சோஃபா, படுக்கை, கணிப்பான் உறைவிடம், (கழிப்பான் தனியிடத்தில் கூட சில சமயங்களில் :)), நாற்காலி (எங்கள் கிராமத்தில் புதிதாக ஒரு நாற்காலி செய்து வந்த போது, முத்லில் அதில் வீற்றிருக்கும் பாக்கியம் செய்த வஸ்து ஒரு தவிட்டு மூட்டை - ஆனால் நான் முன்னேறிவிட்டேன். இப்பொதெல்லாம் அதன்மேல் புத்தகம், நோட்டு, குறுந்தகடு, பஜ்ஜி வைத்த தட்டு, காப்பி கோப்பை இவைதான் வீற்றிருக்கின்றன) என்று "கராத்தே" போல் அல்லாடிக் கொண்டிருக்கும்.

புத்தகங்களின் அடுத்த நிலை "பரலோகம்"தான்! அதாவது "பரண் லோகம்". "லாஃப்ட்"கள் எதற்கு இருக்கின்றன? சிறிது நாட்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு அந்துருண்டை சகிதம் புதுக் கருக்குக் குறையாமல் மேலேறிவிடும். இப்படி அடுக்கி வைத்து அப்படியே நினைவிலிருந்து அகற்றியவைகள் அநேகம். உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு எம்பலில் கைக்கெட்டுமாறு வைக்கப்பட்டிருந்தால்தான் புத்தகங்கள் படிக்கப்படும். ஏழுகடல், ஏழு ஏணி தாண்டி எடுக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அவை "எழுத்தாணிப்பூச்சி'க்குத்தான் எடுப்புச் சாப்பாடாகும். அன்பர் ஹரி கிருஷ்ணன் அப்படித்தான் ஒருமுழ தூரத்தில் தன் பாரதி பற்றிய நூல்களையும் தொல்காப்பியத்தையும் "ரேக்"கியிருக்கிறார். ஏதேனும் கேள்வி கேளுங்கள். மூன்று நிமிடங்கள்தான் அவருடைய பதில்பெறும் நேரம் (SATA வண்தகடு வேகத்தில் செயல்படுவார்).

சில நாட்களுக்குமுன் இணையத்தில் சிலர் ஒரு படர்ச்சி இழையைத் (meme) தொடங்கினார்கள். "மீம்" என்றழைக்கப்படும் இந்தச் சொல் பலர் கையில் மாட்டிக்கொண்டு மிம்மி, கும்மி என்று வெம்மிக் கொண்டிருந்தது சில காலம். மெறியம் வெப்ஸ்டர் அகராதியிலிருந்து இந்த சொல்லின் சரியான உச்சரித்தல் அறியவேண்டின் இந்த சுட்டியை சிமிட்டினால் கேட்கலாம்! அந்த இழை ஓடிக்கொண்டிருக்கும்போது சில பாசாங்குசர்கள் புத்தகக்கடைப் பட்டியலில் கண்ட அனைத்து நூல்களையும் படித்துவிட்டதாக மளிகைக் கடை "ரோக்கா" போல அட்டவணையிட்டு "மெத்தப் படித்தவர்களாகி" அகமகிழ்ந்தனர் (உண்மையிலேயே தான் படித்த புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்து கொண்டவர்களை நான் பழிக்கவில்லை).

ஐயோ பாவம் ஆண்பால்சரி. நான் ஏதாவது படித்தேனா இல்லையா? அவசரப்படாதீர்கள். இப்போது கிடைத்துள்ள நீண்ட வாரமுற்றில் எத்தையாவது வாசித்துவிடவேண்டுமென்ற உறுதியுடன் நான் எடுத்துக் கொண்ட புத்தகம் வெறும் 160 பக்கங்களைக் கொண்ட நோஞ்சான். ஏனெனில் இப்போதுதான் டேவ் பேர்ரி எழுதிய ஆண்மகர்களின் அதீத குண விசேஷங்களைப் பற்றிய புத்தகத்தைப் படித்து சிரித்து, பின் ஒரு பதிவும் போட்டு முடித்துள்ளேன்.

அப்படி நான் படித்துக் கிழித்த தமிழ்ப் புத்தகம்தான் என்ன? நாளைவரை பொறுங்கள். இப்போது சுடச்சுட "மோர்க்கூழு" அழைக்கிறது!

குறிச்சொற்கள்: , ,
:: (பார்வை 811 முறை) ::

நாட்டுப்பற்று - இன்றைய தேவை

பொது :: 3 மறுமொழிகள் »

சர்தார் வல்லப்பாய் படெல் - இரும்பு மனிதர் இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் சிற்பி, இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் 130-வது பிறந்த நாள். ஒரு தலை சிறந்த நிர்வாகி, நாட்டுப்பற்றே மூச்சாக வாழ்ந்த விவசாயி - அவருடைய தொண்டினை இன்று நினைவு கூர்வோம். நம் பாரத நாட்டின் ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் பேணிக் காக்கவும் உறுதி பூணுவோம்.

படேல் அவர்களைப் பற்றி மேலும் அறிய விக்கிபீடியாவை அணுகுங்கள். (ஆங்கிலத்தில்)

மேலும் அவர் ஏன் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆகமுடியவில்லை, அதில் காந்தியின் பங்கு என்ன போன்ற விவரமறிய இங்கே சொடுக்குங்கள். (இதுவும் ஆங்கிலத்தில்)

படேல், the Boss!

படேல் 1947-01-27 தேதியிட்ட Time பத்திரிக்கையின் முகப்பை அலங்கரித்திரிக்கிறார். அவரைப் பற்றி "The Boss" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

:: (பார்வை 877 முறை) ::

ராஜகீயம்!

பொது :: 7 மறுமொழிகள் »

கதலிவனம்இன்று மனைவிக்கு பிறந்த நாள். மகள் சென்னைஆன்லைன்.காம் மூலமாக அனுப்பியுள்ள மலர்க்கொத்து வந்து சேரவில்லை. ஞாயிற்றுக்கிழமை டெலிவரி கிடையாதாம்.

சரி ஏதாவது புதிதாக செய்வோம் என்று தேடியதில், ஒரு இயற்கை உணவகத்திற்கு சென்றாலென்ன என்று தோன்றியது. நுங்கம்பாக்கத்தில் எங்கும் நிறைந்திருக்கும் "குடிசை", "முக்கு" கடைகளில் கிடைக்கும் ("சார், உங்களுக்காக சிறப்பு சலுகை. இரெண்டு வாங்கினால் ஒரு குட்டியூண்டு வெக்கி இலவசம்") "சப்புச்சரவு" வரட்டி போன்ற பன்ரொட்டிமேல் சீஸால் மெழுகி "பீட்ஸா" என்றழைக்கப்படும் வஸ்து வேட்பாளராக வராமலிருந்தால் சரி என்று நிம்மதியாக இருந்தேன். தவிர "சுத்த சைவ" ஓட்டல்களின் அசுத்தங்களையும், ஐந்து, ஆறு தாரகைகள கொண்ட உணவகங்களில் ஆழுறை நிலையில் (deep freeze) வைக்கப்பட்டு சூடேற்றப்பட்ட உயிரில்லாத "பொஃப்fபே" (வயிற்றுக்கு "பெப்பே") சாப்பாட்டையும் அனவரதமும் உள்ளே தள்ளிச் சலித்த எனக்கு, இயற்கை உணவு ஒரு மாறுதலாக இருக்குமே என்று தோன்றியது. முன்பெல்லாம் இயற்கை உணவு என்று சொன்னால் எங்கோ படித்த "People who eat natural food will die of natural causes" என்ற வாசகத்தை ஒப்பித்துவிட்டு அந்த தத்துவத்தையே கிண்டல் செய்துகொண்டிருப்பேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பெட்டர் ஹாஃப் "பிட்டர் ஹாஃப்" ஆவதற்கு முன் "சரி"யென்றேன்.

சரி, சுருங்கச் சொல்வதானால் கேரளத்தைச் சேர்ந்த "ச்சோலையில்" நிறுவனத்தாரின் "சஞ்சீவனம்" நடத்தும் "கதலிவனம்" என்னும் முழுமையான இயற்கை உணவு நிலையத்திற்கு புறப்பட்டேன். இதற்காக காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் சாப்பிட்டு பக்குவமான பசியைத் தயார் நிலையில் வைத்திருந்தேன்.
மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1082 முறை) ::

கூகிள் அளிக்கும் மலர்ச் செண்டு

பொது :: 2 மறுமொழிகள் »

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google's aggregator service).

இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே அணிவகுத்து நிற்கும் அனைத்துச் செய்திகளும்!

இதோ என் தமிழ்மணம்:- (தட்டினால் விரியும் படம் கண்டு, பின் அம்பின் துணையுடன் திரும்புக!)

கூகிள் திரட்டி

:: (பார்வை 991 முறை) ::

பறப்பு, பரபரப்பு

பொது :: Comments Off

ஏனிந்த அவசர வாழ்க்கை? ஏன் இவ்வளவு பரபரப்பு?
நினைத்ததை நினைத்த நேரத்தில் நிதானமாக நிகழ்த்தினால் என்ன?
நாம் ஏன் ஒரு மணிகாட்டும் கருவியின் அடிமையாக இருக்கவேண்டும்?

"அடுத்த வீட்டுப் பெண்"ணில் வரும் "எதெது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கணுமோ, அதது அப்ப அப்போ அப்படி அப்படிதானே நடக்கும்" என்கிற வசனம் என் மனத்துக்கு மிக்க இசைவானது! (யார் அந்த நடிகர் - பக்கிரிசாமியா?)

வாழ்வில் அவசரமே கூடாது என்கிற இந்த எண்ண அலையை பிறிதொரு தொடர்பில் என் ஆங்கில வலையின்பால் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் கோனேரிராஜபுரம் சுப்புணி. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 900 முறை) ::

திண்ணை.காம்

பொது :: 2 மறுமொழிகள் »

கணிதமேதை வீட்டுத் திண்ணைஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது. மிகுதியையும் வாசிக்க »

:: (பார்வை 1067 முறை) ::

 

6-ல் இது-3«12345»...கடைசி »

WP Theme & Icons by N.Design Studio
Entries RSS Comments RSS Log in