உள்ளங்கை » புத்தகப் பரண்

நங்கை மடவன்னம்
அந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, தெய்வ ரம்பையோ என எவரும் ஐயுற்றுக் கலங்கி உருகும்படி, மக அற்புதமான சிருஷ்டியாய் அமைந்திருந்த அந்த வடிவழகியின் சிரத்தில் நீண்டு கருத்து அடர்ந்து மினுமினுப்பாய் காணப்பட்ட அளகபாரம் கண்கொள்ளாத எழிலாய் விளங்கியது. அவளது முகார விந்தத்தைக் காணும்போது எல்லாம், கபடமற்ற மாடப் புறாவின் முகமே எவர் மனத்திலும் நினைவுக்கு வரும். அந்த முக மண்டலத்தில் இருந்து ஜ்வலித்த அற்புதமான காந்த சக்தி எந்த இடத்தில் ஒளிய வைக்கப்பட்டிருந்தது என்பது அவளைப் படைத்த பிரம்மாவுக்குக் கூட தெரியுமோ, தெரியாதோ என்று நாம் நிச்சயம் ஐயுறலாம்.

அந்த மடவன்னம் அவளது தாயின் கர்ப்பத்தில் ஒளிந்திருந்த காலத்தில் எந்தத் தெய்வம் கூடவே மறைந்திருந்து அளவுகளை எடுத்து வசீகர சக்திகளை அமைத்து, அத்தகைய அற்புத உருவைச் சிருஷ்டித்து உதவியதோ, எதற்காக அந்தத் தெய்வம் மறைந்திருந்து அப்படி அரும்பாடு பட்டதோ என்று எவரும் கருதி பிரமித்து மயக்கும்படி அந்த மாதரசியின் வடிவம் அமைந்திருந்தது. வில் போல வளைந்து அடர்த்தியான புருவ ஜதையும், காதளவோடிய கலகக் கண்களும், அமிர்தம் கசிந்த குங்கும நிற இதழ்களும், முகத்தைப் பழித்த பற்களும், மார்பில் கம்பீரமாய் விம்மி நிமிர்ந்து குவவி நின்ற சக்கரவாள மிதுனமும், சரிந்து குறுகிய துடி இடையும், கான்போர் உயிரைக் குடித்த தொடை, பின் தட்டு ஆகியவற்றின் சாமுத்திரிகா லட்சண அமைப்பும், புஷ்ப இதழின் மிருத்தன்மையையும், தந்தக் குச்சிகளின் தோற்றத்தையும் கொண்டிருந்த கை விரல்களும், ஒன்றுகூடி சதா காலமும் கோடிக்கணக்கில் மன்மத பாணங்களை எய்தபடி இருந்தன. ஆதலால் அந்த இன்பவல்லியைக் காணும்போது பஞ்சேந்திரியங்களும் ஒரே நொடியில் கலங்கிக் கலகலத்து நெக்குவிட்டுப் போமென்று திண்ணமாய்க் கூறலாம்.

எப்படி இருக்கிறது வர்ணனை!

இதுதான் வடுவூர் துரைசாமி ஐயங்கார் பாணி! நாவலின் பெயர் ”பன்னியூர் படாடோப சர்மா”. வெளியீடு: ஜெனரல் பப்ளிஷர்ஸ் (அல்லயன்ஸ்), 244 (பழசு), இராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004.

இந்தக் கதையில் உலாவரும் சில பாத்திரங்கள் இவை:

சவுடாலப்பர்

பரகமன சதாத்யான ருத்ராக்‌ஷ பூனையார் (பரிசுத்த பாப்பையா)

கண்ட பேரண்ட சண்டப் பிரசண்ட வெண்ணைவெட்டி வீரசிங்கம் சர்தார் பகதூர்

இவர் பயன்படுத்தியுள்ள ஒரு விநோதமான சொல் – ”சாம்பாக்கன(ல்)” அதன் பொருள் ”Champagne” என்கிறார் இவர்!

ஆம், புகழ்பெற்ற “திகம்பர சாமியார்” பாத்திரத்தைப் படைத்த வடுவூரார்தான். தமிழில் பொழுதுபோக்கு நாவல் எழுதுவதில் அனைவருக்கும் அவர்தான் முன்னோடி.

வடுவூராரின் நடை மற்றும் விலாவாரியான விவரணங்கள் சாண்டில்யனின் வர்ணனைகளுக்கு அண்ணனாக இருக்கும். ஒருவேளை சாண்டில்யனுக்கே இவருடைய தாக்கம் இருந்தது போலும். சாண்டில்யன் எழுதியுள்ள “செண்பகத் தோட்டம்” என்னும் நகைச்சுவை சமூக நாவலின் பாத்திரப்படைப்பு, உரையாடல் போன்றவை கிட்டத்தட்ட வடுவூரார் பாணியிலேயெ இருப்பதைக் காணமுடிகிறது.

வடுவூராரின் நாவல்களில் பல ஆஷாடபூதிகளையும், கபட சன்னியாசிகளையும், காமாந்தகாரர்களையும், அகடவிகட சவுடால் டாபர் மாமாக்களையும், மயக்கு சுந்தரிகளையும் மற்றும் பல்போய், சொல்போய், “சொய்ங்” என்று தொய்ந்துபோன நிலையிலும் டம்பத்தில் சிறிதும் குறைவில்லாத வெட்டி வீராப்பு பேசும் டுபாக்கூர்களையும் நீங்கள் சந்திக்கலாம். அவருடைய பாத்திரப் படைப்பும் மனித சுபாவத்தை தெளிவாக சித்தரிக்கும் யுக்திகளும் பிரமிக்க வைக்கக் கூடியவை; 1925 வாக்கில் தமிழ்நாட்டின் அன்றாட நடப்புக்களை நம் கண்முன்னால் கொணர்ந்து நிறுத்தக்கூடியவை. அவருடைய “மேனகா” என்னும் படைப்பு திரைப்படமாக வெளிவந்து சக்கைபோடு போட்டது.

வடுவூரார் வாழ்க்கையை ரசித்து அனுபவித்தவர். அந்தக் காலத்து பி.ஏ. அவரைப் பற்றிய ஒரு வர்ணனை:-

“நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்துவரை பொத்தான் போட்ட கோட்டு, அங்கவஸ்திரம், பஞ்ச கச்சம், தலையில் குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் திருமண், வாய் நிறைய வெற்றிலை (பெரிய வாய்), புகையிலை. தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார், இளமையோடிருக்க! மொத்தத்தில் கைநிறைய சம்பாதித்த கவலையில்லாத உல்லாச மனிதர்.”

இவரைப் பற்றி விமரிசகர் க.நா.சு முத்தாய்ப்பாக எழுதியுள்ள வரிகள் இவை:-

“சேலம் பட்டுக்கரை வேஷ்டியும், காதில் பால் வீசும் வைரக் கடுக்கனும், நெற்றியில் ஒரு சிவப்பு ஸ்ரீசூர்ணக் கோடுமாகவும் நான் பார்த்த வடுவூர் துரைசாமி ஐயங்காரை இன்றுகூட நினைவு கூர முடிகிறது. தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை; புரிந்துகொள்ளப்ப்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.”

சென்னை திருவெல்லிகேணி பெரிய தெருவில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் கோயிலுக்கு அருகில் இருந்த (இப்போது இடம் மாறி விட்டது) சரவணா லெண்டிங் லைப்ரெரியிலிருந்து பெற்று வடுவூராரின் அனைத்து நாவல்களையுமே படித்து முடித்து விட்டேன் – எல்லாம் குண்டு குண்டு தலையணைகள். தற்போது அல்லயன்ஸ் பிரசுரம் கொணர்ந்திருக்கும் பதிப்புக்களை வாங்கிச் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு!

இவரைக் குறிப்பிட்டு நான் முன்பு எழுதிய இடுகை: "செவலையும் திகம்பர சாமியாரும்"

பொஸ்தகக் கண்காட்சி – 2009
இந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம்.

அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி டைப்பில் கூட!

ஓலைச்சுவடி என்றும் ஒரு புத்தகம் நிறைய விற்றுக் கொண்டிருந்தது – ”தளியோலா” என்னும் மலையாளப் புத்தகத்தின் தமிழாக்கம்.

சே கவேராவும் நிறைய கண்ணில் பட்டார். அவரைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள் கூட அந்த மீமில் ஆட்பட்டிருந்தனர்!

நான் நேரம் (சில இடங்களில் பணமும்) செலவிட்ட ஸ்டால்கள்:

ரிசர்வ் வங்கி

பி.எஸ்.என்.எல்

கீதா பிரஸ்

தினமணி

சென்னை பல்கலைக் கழகம்

விஜயபாரதம்

நிவேதிதா பதிப்பகம்

Asian Educational Services (அபிதான சிந்தாமணி)

இன்னும் சில…

பளிரென்று கண்ணைப் பறிக்கும் விதமாக நூல்களை வடிவமைத்து அளிப்பவர்கள் (நான் பார்த்தவரை):

கிழக்கு (வரம்…etc)

ஆனந்த விகடன்

உயிர்மை

இராமகிருஷ்ண மடம்

மற்றபடி ஒரே மாதிரி ஸ்டால்கள். ஒரே மாதிரி புத்தகங்கள்.

மூன்று மணி நேரத்திற்குமேல் சுற்றிவிட்டு ஒன் பாத்ரூம் போகலாமென்றால் கண்காட்சிக்கு வெளியே வந்து காடு மலை வனாந்திரமெல்லாம் கடந்து செல்ல வேண்டியிருந்தது. நல்ல வேளை அப்போது மழை பெய்யவில்லை.

நான் சென்றது திங்கட்கிழமையாதலால் ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் கேண்டீனில் நல்ல கூட்டம் (குட்டி இட்லி, பானி பூரி, ஃப்ரெஞ்ச் ஃபிரை, தோசை, போளி, ஃபிரைடு ரைஸ்…). கால் அசந்து உட்காரலாமென்றால் நாற்காலி ஏதும் காலி இல்லை. ஆள் இல்லாத இருக்கைகளில் கூட பைகளைப் போட்டு இடம் பிடித்துவிட்டு டோக்கன் வாங்கச் சென்றிருந்தனர் ஆண்கள்; பெண்கள் அனைவரும் இருக்கை நிறைந்து அமர்ந்திருந்தனர்!

புதிய தமிழ் ஒன்றை கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் அறிஞர் ஒருவர் அளிக்கும் சொற்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். அவைகளின் பொருள் புரிந்து எனக்குச் சொன்னால் உங்களுக்கென்று மலிவு விலையில் 5 ரூபாய்க்கு புத்தகக் கண்காட்சி நுழைவுச் சீட்டு ஒன்று கிடைக்கும்.

பொத்தக வியந்தை

தளி

படி

வாழ்வரை

இப்போது காட்சிகள் இரண்டு:

சந்தை பற்றிய விவரங்களும் சொல்வளமும் செறிந்த இன்னொரு கட்டுரை இங்கே. (சேதுபதி அருணாசலம் எழுதியது)

குதிரைக் கொம்பு
ஒரு விநோதக் கதை

ஆக்கியோர்: மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் (1935)

ரீவணன்

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.

கேளீர், ரீவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.

இதைக்கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-

இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.

அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷ்மணனையும் ராஜ்யத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷ்மணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.

அப்படியே ராமலக்ஷ்மணரைப் படித்துத் தாம்பினாலே கட்டிச் சூர்ப்பநகையின் சன்னிதியிலே கொண்டு சேர்த்தனர். அவள் அவ்விருவரையும் கட்டவிழ்த்து விடும்படி செய்து பலவிதமான கடூர வார்த்தைகள் சொல்லி பயமுறுத்திய பிறகு ராஜபுத்திரராகவும், இளம்பிள்ளைகளாகவும் இருந்தபடியால் இதுவரை செய்த துஷ்ட காரியங்களையெல்லாம் க்ஷமிப்பதாகவும், இனிமேல் இவ்வித காரியங்கள் செய்தால் கடுந்தண்டனை கிடைக்கும்மென்றும் சொல்லி நானாவிதமான புத்தி புகட்டிய பின்பு, அவர்களை சிறிது காலம் அரண்மனையிலிருந்து விருந்துண்டு போகும்படி செய்தாள். அப்போது சீதை சூர்ப்பநகையிடம் தனியாக வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கையில், ராமன் தன்னை வலிமையாலே தூக்கிக் கொண்டு வந்தானென்றும், தனக்கு மறுபடியும் மிதிலைக்குப் போய்த் தனது பிதாவுடன் இருக்கப் பிரியம் என்றும் சொன்னாள். இதைக் கேட்டு சூர்ப்பநகை மனமிரங்கி, சீதையை இலங்கைக்கு அனுப்பி, அங்கிருந்து மிதிலை கொண்டு சேர்க்கும்படி ராவணனுக்குச் சொல்லியனுப்பினாள். ராவணனுடைய அரண்மனைக்கு வந்து சேர்ந்தவுடனே அவளை மிதிலைக்கு அனுப்ப நல்ல நாள் பார்த்தார்கள். அந்த வருஷம் முழுவதும் நல்ல நாள் அகப்படவில்லை. மறு வருஷமும் நல்ல நாள் கிடைக்கவில்லை. ஆகையால் சீதையை இரண்டு வருஷம் தனது அரண்மனையிலேயே தங்கிவிட்டுப் போகும்படி ராவணன் ஆக்கினை செய்தான்.

தண்டகாரண்யத்தில் ராமன் சூர்ப்பநகையிடம் சீதை எங்கே? என்று கேட்டான். மிதிலைக்கு அனுப்பி விட்டதாகச் சூர்ப்பநகை சொன்னாள். எப்படி நீ இந்த காரியம் செய்யலாம்? என்று கோபித்து லக்ஷ்மணன் சூர்ப்பநகையை நிந்திக்கலானான். அப்போது சூர்ப்பநகை தன் இடுப்பில் பழங்கள் அறுத்துத் தின்னுவதற்காகச் சொருகி வைத்துக் கொண்டிருந்த கத்தியைக் கொண்டு லக்ஷ்மணனுடைய இரண்டு காதுகளையும், கால் கட்டை விரல்களையும் நறுக்கி விட்டாள். இவளுடைய வீரச் செய்கையைக் கண்டு ராமன் இவள் மேல் மோகங் கொண்டு, "அடே! சீதையைத்தான் மிதிலைக்குகனுப்பி விட்டாய். என்னை நீ விவாகங் செய்து கொள்ளு" என்றான். இதைக் கேட்டவுடனே சூர்ப்பநகை கன்னமிரண்டும் சிவந்து போகும்படி வெட்கப்பட்டு "நீ அழகான பிள்ளைதான். உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். ஆனால் அண்ணா கோபித்துக் கொள்வார். இனிமேல் நீ இங்கிருக்கலாகாது. இருந்தால் அபவாதத்துக்கு இடமுண்டாகும்" என்றாள்.

அப்போது ராமன் "சீதையை எப்போது மிதிலைக்கு அனுப்பினாய்? யாருடன் அனுப்பினாய்? அவள் இப்போது எவ்வளவு தூரம் போயிருப்பாள்?" என்று கேட்டான்.

அதற்கு சூர்ப்பநகை, "இனிமேல் சீதையின் நினைப்பை விட்டு விடு. அவளை இலங்கைக்கு அண்ணன் ராவணனிடத்தில் அனுப்பியிருக்கிறேன். அவள் அவளை மிதிலைக்கு அனுப்பினாலும் அனுப்பக்கூடும். எது வேண்டுமானாலும் செய்யக் கூடும். மூன்றுலகத்திற்கும் அவன் அரசன். சீதையை மறந்து விடு" என்றாள்.

இகைக் கேட்டு ராமன் அங்கிருந்து வெளியேறி எப்படியேனும் சீதையை ராவணனிடமிருந்து மீட்க வேண்டுமென்று நினைத்துக் கிஷ்கிந்தா நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அந்த கிஷ்கிந்தா நகரத்தில் அப்போது சுக்கிரீவன் என்ற ராஜா அரசு செலுத்தினான். இவனுக்கு முன் இவனுடைய தமையனாகிய வாலி ஆண்டான். வாலிக்கும் ராவணனுக்கும் மிகுந்த சினேகம. இரண்டு பேருமே ஒரே வகுப்பில் கணக்கு வாசித்தார்கள். மூன்று உலகத்திலும் கப்பம் வாங்கின ராவணன் கிஷ்கிந்தா பட்டிணத்துக்கு வாலி யாதொரு கப்பமும் செலுத்த வேண்டியதில்லையென்று சொல்லிவிட்டான். இந்த வாலி தூங்கிக் கொண்டிருக்கையில் தம்பி சுக்கிரீவன் இவன் கழுத்தை மண்வெட்டியால் வெட்டியெறிந்துவிட்டு அவன் மனைவியாகிய தாரையை வலிமையால் மணந்துகொண்டு அனுமான் எள்ற மந்திரியின் தந்திரத்தால் ராஜ்யத்தை வசப்படுத்திக் கொண்டான். இதைக் கேட்டு ராவணன் மகாகோபத்துடன் சுக்கிரீவனுக்கு பின்வருமாறு ஓலை யெழுதியனுப்பினான்.

"கிஷ்கிந்தையின் சுக்கிரீவனுக்கு இலங்கேசனாகிய ராவணன் எழுதிக் கொண்டது. நமது சிநேகிதனைக் கொன்றாய். உனது அண்ணனைக் கொன்றாய். அரசைத் திருடினாய். இந்த ஓலையைக் கண்டவுடன் தாரையை இலங்கையிலுள்ள கன்யா ஸ்திரீ மடத்துக்கு அனுப்ப வேண்டும். ராஜ்யத்தை வாலி மகன் அங்கதனிடம் கொடுக்க வேண்டும். நீ ஸந்நியாஸம் பெற்றுக் கொண்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும். இந்த உத்தரவுக்கு கீழப்படாத விஷயத்தில் உன்மீது படையெடுத்து வருவோம்."

உத்தரவு கண்டவுடன் சுக்கிரீவன் பயந்துபோய் அனுமானை நோக்கி ""என்ன செய்வோம்?" என்று கேட்டான். அனுமான் சொன்ன யோசனை என்னவென்றால்:-

"வாலியிடம் பிடித்துக் கொண்ட தாரையையும் பதினேழு வயதுக்குட்பட்ட வேறு பதினேழரைக் கோடிப் பெண்களையும் ராவணனுக்கு அடிமையாக அனுப்ப வேண்டும். ராவணனாலே ஆதரித்துப் போற்றப்படும் வைதிக ரிஷிகளின் யாகச் செலவுக்காக நாற்பது கோடி ஐம்பது லட்சத்து முப்பத்து நாலாயிரத்து இருநூற்று நாற்பது ஆடுமாடுகளும், தோற்பைகளில் ஒவ்வொரு பை நாலாயிரம் படிக் கொள்ளக் கூடிய நானூறு கோடிப் பைகள் நிறைய சோமரஸம் என்ற சாறும் அனுப்பி அலனைச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். இளவரசுப்பட்டம் அங்கதனுக்குச் சூட்டுவதாகவும், வருஷந்தோறும் நாலாயிரம் கோடிப் பொன் கப்பம் கட்டுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இத்தனையும் செய்தால் பிழைப்போம்" என்று அனுமான் சொன்னான்.

சுக்கிரீவன் அப்படியே பெண்களும் ஆடுமாடுகளும், சாறும், முதல் வருஷத்துக் கப்பத் தொகையும் சேகரம் பண்ணி அத்துடன் ஓலையெழுதி தூதர் வசம் கொடுத்தனுப்பினான். தூதர்கள் ஆடுமாடுகளையும் சாற்றையும், ராவணன் அரண்மனையிலே சேர்த்தார்கள். அடிமைப் பெண்களையும் பணத்தையும் முனிவரிடம் கொடுத்தார்கள். ஓலையை ராவணனிடம் கொடுத்தனர். போகிற வழியில் தூதர்கள் தோற்பையிலுள்ள சாற்றைக் குடித்துக் கொண்டு போனபடியால் தாறுமாறாக வேலை செய்தார்கள்.

ராவணன் தனது நண்பர்களுடன் ஆடுமாடுகளையெவ்வாம் அப்போதே கொன்று திள்று அந்த சாற்றையும் குடித்து முடித்தவுடனே ஓலையைப் பிரித்து வாசித்துப் பார்த்தான். அடிமைப் பெண்களும் பணமும் ஏன் தன்வசம் வந்து சேரவில்லையென்று விசாரணை செய்தான். முனிவர்களின் மடங்களில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் அந்த பணங்களையெல்லாம் யாகத்திலே தக்ஷிணையாக்கியெடுத்துக் கொண்டபடியால் இனிமேல் திருப்பிக் கொடுப்பது சாஸ்திர விரோதமென்று சொல்லுவதாகவும், அடிமைப் பெண்கள் பெரும்பாலும் ஓடிப்போய்விட்டதாகவும் செய்தி கிடைத்தது. தூதர்களையெல்லாம் உடனே கொல்லச் சொல்லிவிட்டு அந்த க்ஷணமே சுக்கிரீவன் மேல் படையெடுத்துச் செல்லும்படி சேனாதிபதியிடம் ஆக்கினை செய்தான்.

அப்படியே நல்லதென்று சொல்லி சேனாதிபதி போய்ப் படைகளைச் சேகரித்தான். இந்தச் செய்திகளெல்லாம் வேவுகாரர் மூலமாக கிஷ்கிந்தைக்குப் போய் எட்டிவிட்டது. உடனே அனுமான் சொற்படி சுக்கிரீவன் தனது படைகளைச் சேர்த்தான். ராவணன் படைகள் தயாரன பிறகும், அதை நல்ல லக்னம் பார்த்து அனுப்ப வேண்டுமென்று காத்துக் கொண்டிருந்தான். இதற்குள்ளே அனுமான் தன்னுடைய ஜாதி ஒரு விதமான லேசான குரங்கு ஜாதியாகையால் விரைவாகக் குரங்கு படைகளைத் திரட்டிக் கொண்டு இலங்கையை நோக்கிப் புறப்பட்டான். இவனுடைய சேனையிலே ராம லக்ஷ்மணரும் போய்ச் சேர்ந்தனர். இந்தச் சேனையிலே நாற்பத்தொன்பது கோடியே தொண்ணுற்று நாலு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூற்றைம்பத்தாறு காலாளும், அதற்கிரட்டிக் குதிரைப் படையும், அதில் நான்கு மடங்கு தேரும், அதில் எழுபது மடங்கு யானைகளும் வந்தன.

இவர்கள் இலங்கைக்கு வருமுன்னாகவே ராவணன் சேனையிலிருந்து ஒரு பகுதி இவர்களை எதித்துக் கொன்று முடித்து விட்டன. ராம லக்ஷ்மணர் மாத்திரம் சில சேனைப் பகுதிகளை வைத்துக் கொண்டு ரகசியமாக இலங்கைக்குள்ளே வந்து நுழைந்து விட்டார்கள். இந்தச் செய்தி ராவணன் செவியிலே பட்டது. உடனே ராவணன் "ஹா, ஹா, ஹா, நமது நகரத்திற்குள் மனிதர் சேனையை கொண்டு வருவதா! இதென்ன வேடிக்கை! ஹா, ஹா, ஹா!" எனறு பேரிரைச்சல் போட்டான். அந்த ஒலியைக் கேட்டு ஆதிசேஷன் செவிடனாய் விட்டான். சூரிய மண்டலம் தரைமேலே விழுந்தது. பிறகு ராவணன் ராமனுடைய சேனைகளை அழித்து, அவனையும் தம்பியையும் பிடித்துக் கொண்டு வரும்படி செய்து, இராஜகுமாரர் என்ற இரக்கத்தினால் கொல்லாமல் விட்டு, அவ்விருவரையும் தனது வேலையாட்களிடம் ஒப்புவித்து ஜனகன் வசம் சேர்க்கும்படி அனுப்பினான். பிறகு சீதையும் மிதிலைக்குப் போய்ச் சேர்ந்தாள்.

மறுபடி, ஜனகன் கிருபை கொண்டு அந்த ராமனுக்கே சீதையை விவாகம் செய்து கொடுத்துவிட்டான். அப்பால் ராம லக்ஷ்மணர் அயோதிக்குப் போய்ப் பரதனுக்குப் பணிந்து நடந்தார்கள். இதுதான் நிஜமான ராமாயணக் கதை என்று வக்ரமுகசாஸ்திரி ரீவண நாயக்கன் சபையிலே கதை சொன்னான்.

குதிரைக் கொம்பு

அப்போது ரீவணன், "சாஸ்திரியாரே குதிரைக்கு ஏன் கொம்பில்லை என்று கேட்டால் இன்னும் அதற்கு மறுமொழி வரவில்லையே?" என்று கேட்டான்.

வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்,

"ராமன் படையெடுத்து வந்த செய்தி கேட்டு, ராவணன் "ஹா, ஹா, ஹா" என்று கூச்சலிட்டபோது, சத்தம் பொறுக்கமாட்டாமல் சூரிய மண்டலம் கீழே விழுந்ததென்று சொன்னேனன்றோ? அப்போது சூரியனுடைய குதிரையேழுக்கும் கொம்பு முறிந்து போய்விட்டது. சூரியன் வந்து ராவணனுடைய பாதத்தில் விழுந்து, என் குதிரைகள் சாகாவரமுடையன. இவற்றை போல் வேகம் வேறு கிடையாது. இவற்றுக்குக் கொம்பு முறிந்து போய்விட்டது. இனி உலகத்தாரெல்லாம் என்னை நகைப்பார்கள். என்ன செய்வேன்" என்று அழுதுமுறையிட்டான். ராவணன் அநத சூரியனிடம் கிருபை கொண்டு, பிரம்ம தேவனிடம், "இனிமேல் ஒரு குதிரைக்கும் கொம்பில்லாதபடி படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சூரியனுடைய குதிரைகளை யாரும் நகைக்க இடமிராது" என்று சொன்னான். அது முதலாக இன்றுவரை குதிரைக்குக் கொம்பில்லாமல் பிரம்ம தேவன் படைத்துக் கொண்டு வருகிறான்.

இவ்விதமாக வக்ரமுக சாஸ்திரி சொல்லியதைக் கேட்டு ரீவண நாயக்கன் மகிழ்ச்சி கொண்டு மேற்படி சாஸ்திரிக்கு அக்ஷரத்துக்கு லக்ஷம் பொன்னாக அவர் சொல்லிய கதை முழுவதிலும் எழுத்தெண்ணி பரிசு கொடுத்தான்.

("சுதேச மித்திரன்" தொகுப்பிலிருந்து பெறப்பட்டது)

அபிதான கோசம்
சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில் முக்கியமானது "அபிதான கோசம்" என்னும் அற்புதமான கலைச்சொல் தமிழகராதி. இது முதன் முதலில் 1902-ல் பதிப்பிக்கப்பட்டது. நம் கலாசாரத்தின் அடையாளங்களாக விளங்கும் இது போன்ற தொன்மையான பொக்கிஷங்களை, அவற்றின் மூல உருவை மாற்றாமல் மீள்பதிப்பு செய்து வெளியிடும் உன்னத சேவையை செவ்வனே செய்து வருகின்றனர், "Asian Educational Services" நிறுவனத்தினர்.

அபிதான கோசததின் விவரத் தொகுப்பு:-

இது

யாழ்ப்பாணத்து மானிப்பாய்

ஆ. முத்துதம்பிபிள்ளையால்

செய்து,

இலங்கை இராஜ்மந்திர சபை

அங்கத்தவருளொருவராய் விளங்கிய பிரபு சிகாமணி

ஸ்ரீமான். பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய

வித்தியாபிமான ஞாபகச்சின்னமாகச் சமர்ப்பித்துப்

பிரகடனஞ் செய்யப்பட்டது.

இந்நூலை ஆக்கியோரான முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம், நாவலர் தோட்டம் முகவரியிட்டு எழுதியுள்ள முகவுரை இவ்வாறு தொடங்குகிறது:-

பூவுலகத்திலேயுள்ள பாஷைகளுள்ளே வடமொழியும், தென்மொழியும் மிகப்பழமையும், இலக்கண வரம்பும், நூற்பெருக்கமும், அதிப்புராதன இதிகாசங்களும், ஞானநூன் மலிவும், நாகரிகவளமுமுடைய பாஷைகளென்பது ஆய்ந்தோர் துணிபாம். இருபாஷையாளரும் வைதிக சமயிகளேயாதலின் வேதபுராணேதிகாசங்களும் தரும நூல்களும், ஏனைய சாஸ்திரங்களும் இருவருக்கும் பொது நூல்களேயாம். ஒரு நூலிலே ஒருவர்பெயர் கேட்கப்படும்பொழுது அவர் யாரென்றலும், எக்காலத்தவரென்றலும், யாதுசெய்தாரென்றலுமாகிய இன்னோரன்ன வினாக்கள் உதித்தல் வித்தியார்த்திகள் கண்ணும், வித்தியாவிநோதர்கள் கண்ணும் இயல்பேயாம்.

ஆதலின், வேதாகம புராணேதிகாசங்களிற் கூறப்பட்ட தெய்வங்கள், தேவர்கள், இருஷிகள், முனிவர்கள், அசுரர், யக்ஷர், கந்தருவர், கிந்நரர், அவதர புருஷர், பக்தர், அரசர், புலவர், வள்ளல்கள், வித்துவான்கள் முதலியோர் சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரம், நதி, தடாகம், விருக்ஷ முதலியவற்றின் வரலாறுகளும், தமிழ்நாட்டுப் பண்டைகாலத்து அரசர், புலவர், வள்ளல்கள் முதலியோர் சரித்திரமும், நூல்களின் வரலாறுகளும், வைதிக சாஸ்திரக் கொள்கைகளும் ஆராய்ந்துணர்தல் தமிழ் கற்போருக்கும், தமிழ்க் கலாவிநோதர்க்கும் இன்றியமையாதனவாம்…

இந்நூலை வாசிக்கையில் ஒரு உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவருகிறது. இடைக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்தியத்தை நியாயப்படுத்துமுகமாக நம் மக்களை "ஆரியர், திராவிடர்" என்று இனப்பிரிவினை செய்து,  அந்த விஷவித்தை அவர்களுடைய கைக்குக்கூலிகள் அப்பாவி மக்கள் மனத்தில் விதைத்து அதை நீர்விட்டு வளர்த்த காலத்திற்கு முன்னர் தமிழும், சமஸ்கிருதமும் ஒருசேரப் பின்னிப் பிணைந்து அனைவராலும் கற்றுணரப்பெற்ற பொற்காலமாக அந்நாட்கள் விளங்கியிருந்திருக்கின்றன.

யாழ்வாழ் தமிழறிஞரின் நடையைக் காண்கையில் இருமொழிகளும் எவ்வாறு வெறுப்புணர்வின்றி சமநிலையில் மக்களால் கையாளப்பெற்றிருந்தது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

இனவாத இருளிலிருந்து விலகி சத்திய ஒளியை நோக்கி ஏறுநடை போடுவோம். தமிழ்கூறும் நல்லுலகிலுள்ளோர் அனைவரும் நம் பாரதத்தின் தொன்மையான பாரம்பரியத்தை பேணிக் காப்போம்!

புத்தகப் பரண்
சென்ற புத்தகக் கண்காட்சியில் நான் (நானும்!) சில புத்தகங்கள், குட்டி நூல்கள் வாங்கினேன் (நாள் காட்டிகள், விளமபர நோட்டீஸ்கள், விலைப் பட்டியல்கள் தவிர..). புத்தகங்களைக் கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் நான் செய்யும் முதல் வேலை, ஒரு முறை அவற்றை முகர்ந்து பார்ப்பதுதான். இது பல ஆண்டுகளுக்குமுன் என் தந்தை கீவளூரில் புத்தகக் கடை வைத்திருந்தபோதிலிருந்து தொடர்ந்து வரும் பழக்கம் (சுற்றுவட்டாரத்திலிருக்கும் பல ஊர்களுக்கு புத்தகக்கடையாக எங்களுடையது ஒன்றுதான் இருந்தது. நிகரலாபம் குறைவு என்பதால் பலர் இந்தத் தொழிலில் அப்போது ஈடுபடுவதில்லை). காகிதம், அச்சு மை, வார்ணிஷ் எல்லாம் சேர்ந்து அளிக்கும் ஒருவித வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிறகு முதல் பக்கத்தில் பெயர், தேதி, ஊர் முதலியவற்றை குறிப்பது (Metadata of ownership). மிகவும் பிடித்த ஆசிரியருடையதாயிருந்தால் "பொக்கிஷம்" என்றெல்லாம் எழுதி வைப்பேன்!

சரி. பிறகு? படிப்பதில்லையா? அங்குதான் ஒரு சைத்தான் வந்து தன் விஷமத்தை காண்பிக்கும். ஒரு பிரட்டல் பிரட்டிவிட்டு, "நம்முடைய புக்குதானே, எங்கே ஓடிப்போகப் போகுது; சாவகாசமாகப் படித்துக்கொள்ளலாம்" என்று சோஃபா, படுக்கை, கணிப்பான் உறைவிடம், (கழிப்பான் தனியிடத்தில் கூட சில சமயங்களில்  ), நாற்காலி (எங்கள் கிராமத்தில் புதிதாக ஒரு நாற்காலி செய்து வந்த போது, முத்லில் அதில் வீற்றிருக்கும் பாக்கியம் செய்த வஸ்து ஒரு தவிட்டு மூட்டை – ஆனால் நான் முன்னேறிவிட்டேன். இப்பொதெல்லாம் அதன்மேல் புத்தகம், நோட்டு, குறுந்தகடு, பஜ்ஜி வைத்த தட்டு, காப்பி கோப்பை இவைதான் வீற்றிருக்கின்றன) என்று "கராத்தே" போல் அல்லாடிக் கொண்டிருக்கும்.

புத்தகங்களின் அடுத்த நிலை "பரலோகம்"தான்! அதாவது "பரண் லோகம்". "லாஃப்ட்"கள் எதற்கு இருக்கின்றன? சிறிது நாட்கள் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டு, பிறகு அந்துருண்டை சகிதம் புதுக் கருக்குக் குறையாமல் மேலேறிவிடும். இப்படி அடுக்கி வைத்து  அப்படியே நினைவிலிருந்து அகற்றியவைகள் அநேகம். உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு எம்பலில் கைக்கெட்டுமாறு வைக்கப்பட்டிருந்தால்தான் புத்தகங்கள் படிக்கப்படும். ஏழுகடல், ஏழு ஏணி தாண்டி எடுக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அவை "எழுத்தாணிப்பூச்சி'க்குத்தான் எடுப்புச் சாப்பாடாகும். அன்பர் ஹரி கிருஷ்ணன் அப்படித்தான் ஒருமுழ தூரத்தில் தன் பாரதி பற்றிய நூல்களையும் தொல்காப்பியத்தையும் "ரேக்"கியிருக்கிறார்.  ஏதேனும் கேள்வி கேளுங்கள். மூன்று நிமிடங்கள்தான் அவருடைய பதில்பெறும் நேரம் (SATA வண்தகடு வேகத்தில் செயல்படுவார்).

சில நாட்களுக்குமுன் இணையத்தில் சிலர் ஒரு படர்ச்சி இழையைத் (meme) தொடங்கினார்கள். "மீம்" என்றழைக்கப்படும் இந்தச் சொல் பலர் கையில் மாட்டிக்கொண்டு மிம்மி, கும்மி என்று வெம்மிக் கொண்டிருந்தது சில காலம். மெறியம் வெப்ஸ்டர் அகராதியிலிருந்து இந்த சொல்லின் சரியான உச்சரித்தல் அறியவேண்டின் இந்த சுட்டியை சிமிட்டினால் கேட்கலாம்! அந்த இழை ஓடிக்கொண்டிருக்கும்போது சில பாசாங்குசர்கள் புத்தகக்கடைப் பட்டியலில் கண்ட அனைத்து நூல்களையும் படித்துவிட்டதாக மளிகைக் கடை "ரோக்கா" போல அட்டவணையிட்டு "மெத்தப் படித்தவர்களாகி" அகமகிழ்ந்தனர் (உண்மையிலேயே தான் படித்த புத்தகங்களின் பெயர்களைப் பகிர்ந்து கொண்டவர்களை நான் பழிக்கவில்லை).

சரி. நான் ஏதாவது படித்தேனா இல்லையா? அவசரப்படாதீர்கள். இப்போது கிடைத்துள்ள நீண்ட வாரமுற்றில் எத்தையாவது வாசித்துவிடவேண்டுமென்ற உறுதியுடன் நான் எடுத்துக் கொண்ட புத்தகம் வெறும் 160 பக்கங்களைக் கொண்ட நோஞ்சான். ஏனெனில் இப்போதுதான் டேவ் பேர்ரி எழுதிய ஆண்மகர்களின் அதீத குண விசேஷங்களைப் பற்றிய புத்தகத்தைப் படித்து சிரித்து, பின் ஒரு பதிவும் போட்டு முடித்துள்ளேன்.

அப்படி நான் படித்துக் கிழித்த தமிழ்ப் புத்தகம்தான் என்ன? நாளைவரை பொறுங்கள். இப்போது சுடச்சுட "மோர்க்கூழு" அழைக்கிறது!