பிப் 28
ஒரு விநோதக் கதை
ஆக்கியோர்: மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் (1935)
ரீவணன்
சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரீவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.
கேளீர், ரீவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.
இதைக்கேட்டவுடன் ரீவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.
வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-
இலங்கையில் ராவணன் தர்மராஜ்யம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜீவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாக்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.
அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். மிகுதியையும் வாசிக்க »
குறிச்சொற்கள்:
பாரதி,
bharathi,
Bharathiyar,
bharati
:: (பார்வை 275 முறை) ::
பிப் 23
போகிறவர், வருகிறவரெல்லாம் நம்மை ஆண்டுவிட்டுச் சென்றனரே, ஏன்?

குறிச்சொற்கள்:
அடிமை,
ஆங்கிலேயர்,
இந்தியா,
colonialism,
english,
slavery
:: (பார்வை 247 முறை) ::
பிப் 19
இந்தப் பத்தியை வாசித்துப் பாருங்கள்:-
இலக்கியப் படைப்புகளை படித்து அறிய கோட்பாட்டு அறிமுகமே தேவை இல்லை. படைப்புகள் அளிக்கும் மொழிச்சித்திரத்தை வாழ்க்கையனுபவம்போலவே விரித்துக் கொள்ளும் கற்பனை தேவை. அப்படைப்புகளில் வெளிபப்டும் நுட்பமான உள்ளர்த்தங்களை வாழ்க்கையில் போட்டுப்பார்த்து அறியும் கூர்மை தேவை. நவீன இலக்கிய வடிவங்களில் ஓர் அறிமுகம் இருப்பதும் நல்லது.
ஆனால் இலக்கியப் படைப்புகளை சமூக,அரசியல் சூழல்களில் வைத்து மதிப்பிட்டு நோக்கவும் விவாதிக்கவும் கோட்பாடுகளின் உதவி தேவை. பெரும்பாலும் இக்கோட்பாடுகள் மொழியியல் தத்துவம் மதம் அரசியல் அறிவியல்துறைகள் போன்று இலக்கியமல்லாத ஒரு துறையின் கருவிகளை இலக்கியத்தின் மீது பிரயோகித்துப் பார்ப்பவையாகவே உள்ளன. இலக்கியம் மீதான பல கோணங்களினாலான ஆய்வுக்கு இவை உதவும். அவ்வளவுதான்.
எழுத்தாளர் ஜெயமோஹன் தன் வலைப்பதிவில் எழுதியுள்ள ஒரு விளக்கத்திலிருந்து பிய்த்த பகுதி இது. என்ன சொல்லவருகிறார் என்பது உங்களுக்கு ஏதாவது புரிகிறதோ! எனக்குப் புரியவில்லை ஐயா!
முதலில் 'பின் நவீனத்துவம்" என்னும் அறிவுசால் குறிச்சொல்லை எடுத்துக் கொள்வோம். பரமபத சோபன படத்திலுள்ள மகாப் பெரிய ஏணிபோன்றது இந்த பரிபாஷை. நீங்கள் எதை எழுதினாலும் அதில் இந்தச் சொல்லை சகாயமாக ஆங்காங்கே தெளித்துவிட்டீர்களானால் திராவிட மற்றும் இடதுசாரி அறிவு ஜீவிகள் மத்தியிலும் பொதுவாக இலக்கியவாதிகள் குழுமத்திலும் உங்கள் மதிப்பு ஜிவ்வென்று உயர்ந்துவிடும். எங்கும் பரவலாகப் பேசப்படுவீர்கள். இத்தன்மையான வெகுஜனப் புரிதலுக்கு அப்பாற்பட்ட அறிவாளிகளுக்கென்று உள்ள அலங்காரங்களான குர்தா, ஜோல்னாப்பை ஏதும் தேவையில்லை! நீங்கள் உங்கள் தெரிவுக்குற்கேற்ப சஃபாரி சூட் பொன்ற நாட்டு சோக்காளி உடையலங்கரங்களை மாட்டிக்கொண்டு பவனி வரலாம்!
கிழ்க்கண்ட சொற்சிதைவுகளை ஏதோவொரு வலைப் பதிவில் பர்த்தேன் - எதிலென்று நினைவில்லை. இதுபோன்று சொற்களால் சிலந்திவலை பின்னுவதும் ஒரு "பின் நவீ…" முறைதான்!
மிகுதியையும் வாசிக்க »
குறிச்சொற்கள்:
நவீனம்,
பின் நவீனத்துவம்,
மணமுறிவு,
post modernism,
postmodernism
:: (பார்வை 338 முறை) ::
பிப் 12
சமீபத்தில் நடந்த நிகழ்வு இது, சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிலகமொன்றில்.
வெடியைச் சுற்றியிருக்கும் காகிதங்களில் ஏதோ அரபு மொழி எழுத்து தென்பட்டதாம். இதுபோதாதா இஸ்லாமியரின் மத உணர்வுகள் புண்படுவதற்கு! உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். வெடிக்கடை அதிபரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். வானுலகத்திலிருக்கும் ஆண்டவரும் திருப்தியடைந்துவிட்டார்!
சில நாட்களுக்கு முன்பு ஒரு physiotherapy (இதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?) சிகிச்சையகத்தில் சேவைபெற வரும் நபர்களில் சிலரின் கால்களுக்கு ஒருவித பயிற்சி அளிப்பதற்காக சிறிய மஞ்சள் பைகளில் மணல் நிறப்பி தைத்து வைத்திருந்ததைக் கண்டேன். அவற்றில் எல்லாம் இந்துக் கடவுட்களின் படம்தான் வரைந்திருந்தது. அதன்மேல் கால் வைத்துத்தான் பலர் நின்று பயிற்சி பெறுகிறார்கள். இந்துக்கள் உட்பட அனைத்து மதத்தினரும் அதுபோல் எந்தவிதப் பிரச்னையையும் கிளப்பாமல் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அதனை ஒரு துணிப்பையாகத்தான் அவர்கள் அனைவரும் காண்கிறார்களேயன்றி, கடவுளாக அல்ல. உண்மையில் இந்து மதம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தம் உள்ளத்தினுள்தானே காணச் சொல்கிறது!
அப்படிப் பார்த்தால் கடவுளர்களின் படங்களைத் தாங்கி நிற்கும் பழைய காலண்டர்களையும், ஆன்மீக இதழ்களையும் என்ன செய்வது - அவற்றை கடவுளாகவே பார்ப்பதா, அல்லது வெறும் காகிதமாகக் கருதுவதா!
மனதை விரித்தால் மனித நேயம் வளரும்!
குறிச்சொற்கள்:
இஸ்லாம்,
ஹிந்து மதம்,
hindu,
islam
:: (பார்வை 201 முறை) ::
பிப் 09
:: (பார்வை 203 முறை) ::
பிப் 06
சௌந்திரராஜன் தெய்வபக்தி நிரம்பியவர். தினமும் பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து, பூஜைகளை முடித்தபின் தான் எதையும் உண்பார். எந்நேரமும் தெய்வ சிந்தனைதான். அதுவும் இராமன்தான் அவருடைய இஷ்ட தெய்வம். தியகராஜருடைய கிருதிகளை நெக்குருகப் பாடிக்கொண்டேயிருப்பார். அவர்கள் வீட்டு டிவியில் ஆன்மீக நிகழ்ச்சிகள்தான் ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியும் அதேபோல் கோயில், குளம் என்றுதான் பேசிக்கொண்டிருப்பார். எந்தக் கோயிலில் என்ன விசேஷம் என்று விசாரித்து சென்ற வண்ணம் இருப்பார். விரதம், உபவாசம் என்று உடலை வருத்திக் கொள்வார். இதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு சிந்தனையே கிடையாது. செயலும் கிடையாது. தவிர, உதவி என்று யார் வந்து கேட்டாலும் தன்னாலியன்றதைச் செய்யத் தயங்கவே மாட்டார்கள். தம் ஜன்மமே பிறருக்குப் பயன்படத்தான் என்ற சித்தாந்தத்தில் பூரண நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் விளங்கினர்.
அவர்களுக்கு ஒரே குழந்தை, அவர்களது மகன். அவனுக்கு இப்போது 33 வயது முடிந்துவிட்டது. ஆனால் அந்தப் புத்திரன் விஷயத்தில் அவர்கள் அனவரதமும் தொழும் அந்த பெருமாள் அவர்களை மிகவும் சோதித்துவிட்டார்!
ஆம். அந்தப் பையன் ஆட்டிஸம் (Autism) எனப்படும் நுண்ணுணர்வு வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளான். அது தவிர வேறு சில மூளை தொடர்பான கோளாறுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்போது உட்கொண்ட வீரியமிக்க மருந்துகளின் தாக்கத்தால் பேசும் சக்தியையும் அநேகமாக இழந்துவிட்டான். ஒரு பெரிய உருவம் கொண்ட 1 வயது குழந்தைபோல அவனைக் கருதவேண்டிய நிலை.
அந்தப் பையனின் சில அடிப்படை இயல்புகள்-
- அவனால் பிறர் பேசுவதை உள்வாங்கி எதிர்வினை புரிய இயலாது
- அவனுடைய வீட்டில் எல்லாப் பொருட்களும் முன்பிருந்த நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பான். ஒரு நாற்காலி சிறிது இடம் பெயர்ந்திருந்தாலும் உடனே மாற்றி வைத்துவிடுவான்
- தன் குடும்பத்தினர் மற்றும் நன்கு பழகியவர்களைக் காணும்போது அவர்களின் தலைமுடி சிறிது கலைந்திருந்தால்கூட ஓடிச் சென்று அதனை சரி செய்வான். மோதிரம் சிறிது சுழன்றிருந்தாலும் நுணுக்கமாகக் கவனித்து அதனை நேராக்குவான்
- அவனுக்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் எங்கிருந்தாலும் உடனே எடுத்துச் சாப்பிட்டுவிடுவான். அதனால் பெரும்பாலும் அடுத்தவர் இல்லங்களுக்கோ பொது இடங்களுக்கோ அவனை அழைத்துச் செல்ல மாட்டார்கள்
- நடந்து செல்லும்போது எதிரே வரும் நபரின்மேல் இடித்துக் கொண்டே செல்வான்
இவையெல்லாம் இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.
சௌந்திரராஜன் தம்பதிகளுக்கும் வயதாகி விட்டது. தங்களுக்குப் பிறகு இந்தப் பையனை யார் கவனமாகப் பார்த்துக் கொள்வார்கள் என்னும் கவலை அவர்களை வாட்டிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு பிறரிடம் பழகுவது எப்ப்படி, பொது இடங்களில் நடந்துகொள்வது எப்படி போன்றவை ஒன்றும் தெரியாது.
இந்தப் பையனுக்கு விமோசனம் என்ன?
அவன் பெயர் ஸ்ரீராம்!
அவர்கள் அன்றாடம் தொழும் ஸ்ரீராமன்தான் வழிகாட்டவேண்டும்!
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்;
வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே -
இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால்.
குறிச்சொற்கள்:
autism,
child,
cure,
parents
:: (பார்வை 184 முறை) ::
பிப் 05
:: (பார்வை 165 முறை) ::
பிப் 04
பெரிதாகத் தெரிய படத்தின்மேல் கிள்ளிவிடுங்கள்!
குறிச்சொற்கள்:
ஏமாற்றுதல்,
சாமியார்,
dupes,
gullible,
shortcuts
:: (பார்வை 226 முறை) ::
சமீபத்திய மறுமொழிகள்