ஏப் 16
அடுத்து ரொம்ப சீரியஸா எதோ எழுதறதா இருக்கேன். அதுக்கு முன்னாடி உங்களுக்காக சில நேரப் போக்கிகள் (Time wasters).
- இந்தச் சுட்டியில் தெரியும் அழகி எப்படி உங்கள் கர்ஸர் செல்லுமிடமெல்லாம் திரும்புகிறார் பாருங்கள்! மூக்கைத் தடவினால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கண் சிமிட்டுகிறார். வாயருகே வருடினால் லேசாக உதடுகளை அசைக்கிறார். தூள்தான்!
- டான்ஸ் மாஸ்டர்!
- பறக்கும் பெங்குவின்கள்!
- உலகிலேயே மிகக் கடினமான கணினி விளையாட்டு இதுதானாம்!
- கை விரலே கைப் பேசியானால்!
என்ன, ஜாலியா பொழுது போச்சா!
குறிச்சொற்கள்:
பொழுது போக்கு,
games,
time wasters
:: (பார்வை 166 முறை) ::
மா 08
என் உடனுறைப் பேசியின் செயல்திற நேரத்தைக் கூட்ட ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அதுவோ ஒரு மகளிர் கல்லூ்ரியின் எதிரில் அமைந்திருக்கும் கடை. மாலை கல்லூரி விடும் நேரம். கேட்கவேண்டுமா கூட்டத்திற்கு!
"ஒரு பத்து ரூபா ஏர்டெல் குடுங்க", இப்படிப் போகிறது வியாபாரம். அவரும் போஸ்டேஜ் ஸ்டாம்ப் போன்ற காகிதத் துண்டு ஒன்றைக் கிழித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து ரூபாய்க்கு என்ன பேசமுடியும் என்று எனக்கு ஒரே ஆச்சரியம். அந்த ஐயத்தைப் போக்க கடைக்காரரிடமே "பத்து ரூபாய்க்கு எவ்வளவுங்க டாக் டைம்" என்று கேட்டேன். அவர் பதிலேதும் சொல்லவில்லை.
சிறிது நேரம் கழித்து அந்தப் பெண்கள் எல்லோரும் கலைந்து சென்றபின் அவர் மெதுவாக, "பத்துரூபாய்க்கு ஐந்து ரூபாய்தான் டாக் டைம்" என்று எனக்கு அறிவூட்டினார். அடுத்து நான் கேட்க நினைத்த வினாவுக்கு அவர் விடையாகச் சொன்னது இது:
" இதுங்க சும்மா 'மிஸ்ஸீடு கால்' தான சார் கொடுக்குதுங்க" என்றார்!
அது சரி. ஆனால் இந்தப் பெண்கள் எல்லோரும் எப்போது பார்த்தாலும் காதிலிருக்கும் கம்மலோடு சேர்த்து கைப்பேசியையும் ஒட்டிக்கொண்டு, "கெக்கே கெக்கே" என்று சிரித்துப் பேசியவண்ணம்தானே இருக்கிறார்கள். அது எப்படி - என்று யோசித்தேன். பிறகு எனக்குப் பழக்கமான ஒரு பெண்ணிடமே இதைப்பற்றிக் கேட்டேன். "இது கூடத்தெரியாதா உங்களுக்கு அங்க்ஸ்? நாங்க மிஸ்டு கால் கொடுப்போம். சில பைத்தியக்காரப் பசங்க தன் கைக்காசு செலவு பண்ணி எங்க கிட்ட கடலை வறுப்பானுங்க" என்றாள்!
எஸ்.எம்.எஸ்ஸுக்கு அடுத்தபடி இந்த மிஸ்டு கால்கள்தான் செல்ஃபோனின் அதிகபட்ச பயன்பாடு என்பது எனக்குத் தெரியவந்தது அப்போதுதான். "நீ அந்த ஸ்டாப்பிங்ல எறங்கியதும் ஒரு மிஸ்டு கால் கொடு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" - இது சர்வ சாதாரணமாக நாம் கேட்கும் உரையாடல்.
ஸெல் ஃபோனைக் கண்டுபிடித்தவர்களும், அதன் பயன்பாட்டு சேவை நடத்துவோரும் மிஸ்டு கால்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்திருப்பார்களா!
உங்களுக்குத் தெரிந்த வேறு மிஸ்டுகால் பயன்பாடுகளைப் பற்றி எனக்கும் தெரிவியுங்களேன். பில் ரொம்ப ஆகுது!!
குறிச்சொற்கள்:
கைப்பேசி,
செல்ஃபோன்,
missed call,
mobile,
phone
:: (பார்வை 236 முறை) ::
பிப் 05
:: (பார்வை 165 முறை) ::
ஆக 30
ஆண்கள் எல்லோரும் கொடுமைக்காரர்கள் போலவும், பெண்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலவும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே கடைசியில் சாதித்துவிடுகிறார்கள். ஆண்களின் சூரத்தனமெல்லாம் சும்மா பந்தாவோடு சரி. "Last laugh" குறிப்பிடப்படும் கடைசி வெற்றி பெண்கள் கையில்தான். இந்த உண்மை சரித்திர நிகழ்வுகள் முதல் அன்றாட நடப்புகள் வரை மீண்டும் மீண்டும் பலவிதங்களீல் நிருபிக்கப்படுன்றது.
சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தன் திருமணத்தன்று ஓடிப்போய் தன் பழைய காதலனைக் கைப்பிடித்திருக்கிறார். ஆனால் திருமண மண்டபத்தில் இவளுக்காக பட்டுப் புடவை, தாலி, மோதிரம் போன்றவற்றிற்கு ஏராளமாக செலவழித்து விட்டு, தாலியும் கையுமாக பேஸ்தடித்துக்கொண்டு நிற்கிறான் மணமகன்!
கடைசியில் அவன் காவல்துறையில் புகார் கொடுத்தபிறகு பெண்வீட்டார் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய இன்றைய தினமலர் செய்தி இதோ:-

:: (பார்வை 338 முறை) ::
ஜூலை 22
ஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு "ரௌத்ரம் பழகி"யிருக்கிறார்!!
- சங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது
- தி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை.
- அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியப் போக்கு
- கருணாநிதி பெங்களூரு செல்வது காவிரிக்காக அல்ல
சரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் "ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்" பற்றித் தெரிய வேண்டுமா?
அவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்!
:: (பார்வை 373 முறை) ::
ஜூலை 19
அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்)
யார்தான் எவரைப் பற்றித்தான் கருத்து வெளியிடுவது என்பது வகை தொகையில்லாமல் போய்விட்டது!
கருத்து மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை, ஒரு உன்னத மனிதனைப் பற்றி கருத்தாழம் ஏதுமில்லாமல், "ஓ" போடுவதற்கு கைவசம் சில பக்கங்கள் கிடைத்துள்ளன என்பதற்காக மிக மோசமாக விமரிசிப்பது ஒரு நகைப்புக்கிடமான செயல்!
ஆனந்த விகடனில் சிறிது காலமாக திரு. ஞானி அவர்கள் சில பக்கங்களை நிரந்தரக் குத்தகையாக எடுத்திருக்கிறார். ஏதோ பெண்களின் மாதவிடாய் எப்படி வருகிறது போன்ற அந்தரங்க சமாசாரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார் - அதுவும் "இதுவரை எங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாமலே இருந்து விட்டதே! நீங்களல்லவா எங்கள் ஞான"க் கண்ணைத் திறந்து விட்டீர்கள்" என்று வரும் ரசிகர் மன்ற மடல்களை தனிப் பெட்டியாக வெளியிட்டு மார்தாட்டுதல் வேறு!
சரி, அந்த இருட்டு சமாசாரங்களையே எழுதிவிட்டுப் போகட்டும். மக்களின் "அஞ்ஞான" இருளைப் போக்க அவராலான கைங்கர்யம் என்று பக்கங்களைப் புரட்டி விட்டுச் செல்லலாம். ஆனால், இவர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி அரைகுறை ஞானத்துடன் தாக்கியிருப்பதைப் பார்த்தால், இவர் உடலின் "கீழ் மட்ட"ப் பகுதிகளைப் பற்றிப் படிப்பதை விடுத்து, மேல் மாடியை அதற்கான நிபுணர்களைக் கொண்டு சிறிது தீவிர வட்டகைத்தல் மிக அவசியம் எனத் தோன்றுகிறது!!
சரி, இவர் என்னதான் எழுதியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்:-
மிகுதியையும் வாசிக்க »
:: (பார்வை 544 முறை) ::
ஏப் 05
நிறைய பேர் நம் கிரிக்கெட் டீமுக்கு வேறுவேறு வேலைகளைக் கொடுத்து கௌரவித்துவிட்டார்கள்.
நாமும் எதாவது புதிதாக படம் காட்டலாமே என்று எண்ணிய வேளையில் கிடைத்தது இது:
அந்தப் படத்தை இப்போது காணோம்!
அதனாலென்ன! கொஞ்சம் பொறுங்கள். வேறு கிரிக்கெட் பற்றி ஜோக் படங்கள் கிட்டாமலா போய்விடும்!
மீண்டும் வருக!
:: (பார்வை 495 முறை) ::
சமீபத்திய மறுமொழிகள்