உங்களுக்குத் தெரிந்தால் விடை / விளக்கம் அளியுங்களேன்!
- "ஆரம்பகட்ட சுதந்திரப் போராளிகள் அதனை பேருமே வெள்ளைக்காரங்களை ஆதரித்தவர்கள்தான்" என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன் குமுதத்திற்கு அளித்துள்ள பேட்டியில். அது நிஜமா?
- இராமாயணத்தில் திருமனத்தின்போது இராமனுக்கு வயது பன்னிரெண்டு. சீதைக்கு ஆறு. இத்தனை சிறுவயதில் “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்” என்பதெல்லாம் சாத்தியமா?
- கர்நாடக இசையை ரசிப்பதற்கு அந்த இசையின் இலக்கண டெக்னிகல் நுணுக்கங்கள் பற்றிய அறிவு தேவையில்லை. உண்மையில் அத்தகைய அறிவு இசையை இசையாக ரசிப்பதற்குத் தடையாக இருக்கும் என்று பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய கூற்று சரியா?
- நேரடியாக கச்செரிகளில் கேட்கும்போது நன்றாக இருந்த பாட்டு ரெகார்டு செய்து கேட்டால் நன்றாக இருப்பதில்லையே, ஏன்? ஒருவேளை நேரில் கேட்கும்போது visual effect தூக்கலாக இருப்பதால் பாடுபவர்களின் குறைகள் நம் மனத்தில் பதிவாவதில்லையோ!
- கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடகர்களும் பக்க வாத்தியக்காரர்களும் மைக்செட் – சவுண்டு டெக்னீஷியன்களிடம் மன்றாடிக்கொண்டே இருக்கிறார்களே, ஏன்?
- பி.ஜே.பி தன் தனித்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சியின் B Team போல் ஆகிவிட்டது என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்களே, இது முற்றிலும் சரியா?
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஜூன் 3rd, 2009. 1 மறுமொழி.
அந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், காண்போர் மனத்தைப் பிரமிக்கச் செய்து மயக்கும் தன்மையனவாயும், அமைந்திருந்தன. அவளது மேனி தகத்தகாயமாய் மின்னும் சுவர்ணச் சாயல் உடையதாகவும், தாமரை, ரோஜா முதலியவற்றின் மிருதுத் தனமையும் புதுமையும், செழுமையும் கொண்டதாயும் காணப்பட்டது. இரதி தேவியோ, தெய்வ ரம்பையோ என எவரும் ஐயுற்றுக் கலங்கி உருகும்படி, மக அற்புதமான சிருஷ்டியாய் அமைந்திருந்த அந்த வடிவழகியின் சிரத்தில் நீண்டு கருத்து அடர்ந்து மினுமினுப்பாய் காணப்பட்ட அளகபாரம் கண்கொள்ளாத எழிலாய் விளங்கியது. அவளது முகார விந்தத்தைக் காணும்போது எல்லாம், கபடமற்ற மாடப் புறாவின் முகமே எவர் மனத்திலும் நினைவுக்கு வரும். அந்த முக மண்டலத்தில் இருந்து ஜ்வலித்த அற்புதமான காந்த சக்தி எந்த இடத்தில் ஒளிய வைக்கப்பட்டிருந்தது என்பது அவளைப் படைத்த பிரம்மாவுக்குக் கூட தெரியுமோ, தெரியாதோ என்று நாம் நிச்சயம் ஐயுறலாம்.
அந்த மடவன்னம் அவளது தாயின் கர்ப்பத்தில் ஒளிந்திருந்த காலத்தில் எந்தத் தெய்வம் கூடவே மறைந்திருந்து அளவுகளை எடுத்து வசீகர சக்திகளை அமைத்து, அத்தகைய அற்புத உருவைச் சிருஷ்டித்து உதவியதோ, எதற்காக அந்தத் தெய்வம் மறைந்திருந்து அப்படி அரும்பாடு பட்டதோ என்று எவரும் கருதி பிரமித்து மயக்கும்படி அந்த மாதரசியின் வடிவம் அமைந்திருந்தது. வில் போல வளைந்து அடர்த்தியான புருவ ஜதையும், காதளவோடிய கலகக் கண்களும், அமிர்தம் கசிந்த குங்கும நிற இதழ்களும், முகத்தைப் பழித்த பற்களும், மார்பில் கம்பீரமாய் விம்மி நிமிர்ந்து குவவி நின்ற சக்கரவாள மிதுனமும், சரிந்து குறுகிய துடி இடையும், கான்போர் உயிரைக் குடித்த தொடை, பின் தட்டு ஆகியவற்றின் சாமுத்திரிகா லட்சண அமைப்பும், புஷ்ப இதழின் மிருத்தன்மையையும், தந்தக் குச்சிகளின் தோற்றத்தையும் கொண்டிருந்த கை விரல்களும், ஒன்றுகூடி சதா காலமும் கோடிக்கணக்கில் மன்மத பாணங்களை எய்தபடி இருந்தன. ஆதலால் அந்த இன்பவல்லியைக் காணும்போது பஞ்சேந்திரியங்களும் ஒரே நொடியில் கலங்கிக் கலகலத்து நெக்குவிட்டுப் போமென்று திண்ணமாய்க் கூறலாம்.
எப்படி இருக்கிறது வர்ணனை! மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: புத்தகப் பரண் :: நாள்: ஜூன் 14th, 2009. 1 மறுமொழி.
நேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார்?
எல்லாம் கில்மா வேலை தான்! பிரகாஷ் ரேஞ்சுக்கு இல்லையென்றாலும் சுமார் 30-35 இளம் பெண்களுடன் (அவர்களுடைய இசைவுடன்தான்) பலவித உல்லாச போஸ்களில் வீடியோ படம் பிடித்து வைத்திருப்பதை பலர் பார்த்துவிட்டு ஊரெல்லாம் அதைப் பற்றியே பேசத் தொடங்கிய பின்னர் தான் விவகாரம் வில்லங்கமாகப் போயிற்று. (ஊரெல்லாம் இதைப் பற்றிப் பேசாமல் வேறு எதைப் பற்றிப் பேசுவார்கள்!)
சரி, அந்த பலான கிளுகிளு படங்கள் பப்ளிக்காக வெளியே தெரிய வந்தது எப்படி என்று தினந்தோறும் ”நம்பர் ஒன்” நாளிதழைப் படித்து அறிவைக் கூர்மையாகத் தீட்டி வைத்திருக்கும் நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.
எல்லாம் அந்த “வண்தகடு” செய்த சேஷ்டைதான்! அதுதான் சார் ஹார்டு டிஸ்க்.
பலான கம்ப்யூட்டர் வாத்தியாருடைய “லாப்டாப்” கணினிக்குள் வைரஸ் புகுந்துவிட்டது. இவர் பண்ணும் ஜல்சாக்களால் பொறாமை கொண்ட எவனோ வைரஸ் அனுபிவிட்டான் என்கிறார் இவர். அந்த லாப்டாப்பின் பழுதை நீக்க திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கணினி ரிப்பேர் கடையில் கொடுத்திருக்கிறார். அங்கு வேலை செய்யும் இளைஞர்கள் வைரைஸை நீக்கியபின் வண்தகட்டினுள் நுழைந்து பார்த்தால், “தோடா” என்று மூக்கில் விரல் வைக்குமளவிற்கு பலான படங்கள் – பல போஸ்களின் (வத்தியார்தான்) பலபல கிளுகிளு இளம் பெண்களுடன் – கொட்டிக் கிடக்கின்றன.
அவ்வளவுதான். மேட்டர் பரவலாக மென்தகடுகள் (CD) மற்றும் செல்ஃபோன் கார்டுகள் மூலம் பல்கிப் பரவத் தொடங்கி விட்டன. ஆசாமி இப்போது கைது!
அது கிடக்கட்டும். இப்போது என் இடுகையின் மேட்டர் என்னவென்றால், கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் நம் அந்தரங்க விஷயங்களை அடுத்தவர் கண்ணுக்கும் கருத்துக்கும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதுதான்.
ஒரு பெண் தன் கணவனிடம் வாழாமல் தனியாக இருந்தார். மணமுறிவுக்கு ஒப்பாமல் கணவனிடமிருந்து ஒருகணிசமான துகையைக் கேட்டு வழக்கு தொடுத்திருந்தார். அந்த நேரத்தில் அவளுடைய செல்ஃபோனை ரிப்பேர் செய்யக் கொடுத்திருந்தார். அதில் இருந்த கார்டில் பணம் கொடுக்கல் வாங்கல் பற்றிய குறிப்புகள், பான் கார்டு விவரங்கள் இன்னும் சில முக்கிய தரவுகள் பதிவு செய்திருந்தார். அந்தப் பெண் சிலரோடு சேர்ந்து இருக்கும் ஃபோட்டோக்களும் இருந்தன. அந்த ரிப்பேர் கடையின் முதலாளி கணவனுக்கு வேண்டியவர். அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அந்தப் பெண்ணின் வழக்கு தோற்றுவிட்டது.
உங்கள் கணிப்பில் ஒன்று முக்கிய விவரமாகத் தோன்றா விட்டாலும் பிறர் அதை தவறாகப் பயன்படுத்தலாமல்லவா. அதனால் செல் ஃபோனை பிறரிடம் கொடுப்பதற்கு முன்னால் அதிலுள்ள மெமரி கார்டை எடுத்துவிட்டுக் கொடுங்கள். அதற்கு முன் ஃபோன் மெமரியிலுள்ள அனைத்து சமாசாரங்களையும் கார்டுக்கு மாற்றிவிடுங்கள். அதன்பின் ஃபோன் மெமரியை சுத்தம் செய்துவிடுங்கள். நிறைய சேமித்து வைத்திருந்தால் அனைத்தையும் உங்கள் கணினியில் back-up செய்துவிடுங்கள்.
சரி. கணிணியின் Hard disk-ல் முக்கிய கோப்புக்களை (files) நீக்கிவிட்டால் (delete) யாரும் பார்க்க முடியாதே என்கிறீர்களா? ஐயா, நீங்கள் டெலீட் செய்த கோப்புகள் உணமையில் அழிக்கப் படுவதில்லை. அவற்றைப் பற்றிய விவரம் மட்டும் வண் தகட்டின் அட்டவணையிலிருந்து (index) நீக்கப் படுகிறது. அவ்வளவுதான். மீண்டும் தகட்டின் அந்த பிரதேசங்களில் வேறு கோப்பு எழுதப்படும் வரை அவை அங்கே பத்திரமாக இருக்கும். இதனால் நீக்கியவற்றை சுலபமாக மீள் கொணரலாம் (Undelete).
தவிர, பழுதான ஹார்டு டிஸ்கிலிருந்து கோப்புக்களை மீட்பதற்காக சில சிறப்பு மென்பொருட்கள் உள்ளன (data recovery software). இவற்றின் துணை கொண்டு தகடுகளில் ஆழப் பதிந்திருக்கும் 0-களையும் 1-களையும் வெளிக் கொணர இயலும்.
ஆகையால் மகா ஜனங்களே, உங்கள் வண் தகடு பழுதாகிப் போனால், அல்லது அது தேவையில்லை என்று எண்ணினால், யாரிடமும் தானம் கொடுக்காதீர்கள்; பழைய சாமான் வாங்குபவரிடம் போடாதீர்கள். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு சுருட்டிக் கொண்டு கிடக்குமோ! ஹார்டு டிஸ்கை ஒரு நல்ல சுத்தியல் கொண்டு சுக்குநூறாக நொறுக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். மென் தகடுகள், மெமரி கார்டுகளுக்கும் இதே மரண அடி முறைதான் சிறந்தது.
அமேரிக்க தற்காப்பு அமைச்சக அலுவலங்களில் (Pentagon) வண் தகடுகளை நூடில்ஸ் போல் shredding செய்துவிடுவார்களாம்.
மைக்ரோசாஃப்டின் இந்த வலைப் பக்கத்தில் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாக பல அறிவுரைகளை எழுதியிருக்கிறார்கள். படியுங்கள்.
சார்ந்த வகை: கணினி :: நாள்: ஜூன் 29th, 2009. 5 மறுமொழிகள்.





சமீபத்திய மறுமொழிகள்