துளித்துளி

உண்மையும் பொய்யே
உடல்வெறும் பையே!

சரி, விருந்தினராக வந்துள்ளீர்கள். வேறு ஏதாவது தேடிப் பெறுங்களேன், நிறைய எழுதியிருக்கிறேனே! டிசம்பர் 2007 Archives

3

தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?

தையல் இயந்திரம்

சார்ந்த வகை: எப்படி :: நாள்: . 3 மறுமொழிகள்#

5

கழிப்பிடம்தேடி களிப்பீர்! எதெதெற்கோ போர்டுகளையும் கட்-அவுட்டுகளையும் வைத்து சாலையை அடைக்கிறார்களே, நம் மக்கள் கண்ட இடங்களையெல்லாம் நரகலாக்கும் நாகரிகமற்ற பழக்கத்தை மாற்றும் வகையில் இந்த அறிவிப்புப் பலகையை அனைத்துப் பொது இடங்களிலும் வைத்தாலென்ன?

இதுக்கெல்லாம் அசருவோமா நாங்கள் என்கிறீர்களா!!

படம் – நன்றி: Mike Jolley

4

நண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று! கிடைத்தவற்றை இட்டிருக்கின்றேன்!

ஸிப்பர் இணைப்பு

ஸிப்பர் அவிழ்ப்பு

ஸிப்பர்

zipper-open.gif

zipper

நன்றி:-

சார்ந்த வகை: எப்படி :: நாள்: . 4 மறுமொழிகள்#

சார்ந்த வகை: எப்படி :: நாள்: . 2 மறுமொழிகள்#

1

நான் ஒரு நேர்முகத் தேர்வுக்கு டில்லி சென்றிருந்தபோது டை கட்டிக் கொண்டு செல்லவேண்டியிருந்தது. ஆனால் எனக்கு அதன் முடிச்சை ஒழுங்காகப் போட நாளதுவரை தெரியாது! நல்லவேளையாக நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர் எனக்கு double knot போட்டு நேர்த்தியாகக் கட்டிவிட்டார். நம் நாட்டிற்கு இதெல்லாம் தேவையில்லாத அலங்காரம் என்று நமக்குத் தோன்றினாலும் பல இடங்களில் இன்னும் இந்த குட்டை தேவையாகத்தானே இருக்கிறது!

என்னைபோல் நீங்களும் சிரமப்படக்கூடாதே என்பதற்காக இந்த செய்முறை விளக்கம். இதைவிட சிறந்த விளக்கப்படம் உங்கள் கைவசம் இருந்தால் தெரிவியுங்கள். சுட்டுவிடலாம்! :lol:
(படத்தைக் தட்டினால் பெரிசாகும் – உங்களுக்குத் தெரியாதா என்ன!)

டை

சார்ந்த வகை: எப்படி :: நாள்: . 1 மறுமொழி#

2

வேண்டாமே இந்த வேலை!

4

என்ன இரண்டுவிதமான இசையா? இரண்டும் ஒன்றுதானே, என்று கேட்கிறீர்களா! கொஞ்சம் பொறுங்கள் மாற்றுக் கருத்துக்காரர்களும் ஒப்புக்கொள்ளவேண்டாமா. அவர்கள் சிந்தனைக்கு சில வாதங்களை முன்வைப்போம், தெளிவு பெறுவார்கள் என்னும் நம்பிக்கையுடன்!

மாம்பலம் சகோதரிகள்இப்போது சென்னையில் நடைபெறும் இசைவிழா நிகழ்வுகளில் ஒருநாள் மாலை "மாம்பலம் சகோதரிகளி"ன் (திருமதிகள் விஜயலக்ஷ்மி, சித்ரா) இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தேன். அன்று அவர்கள் முழுதுமே தமிழ்ப் பாடல்களைத்தான் பாடினார்கள். அருணாசலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், பாபனாசம் சிவன், மகாகவி பாரதியார், அருணகிரிநாதர் போன்றோர் படல்களை தங்கள் கம்பீரமான குரலில் அழகே வடித்தனர். சிறப்பான ஒலிப்புடன் கூடிய அந்த இசை என் நெஞ்சைக் கொள்ளை கொண்டது.

அதன்பின் வரிசையாக விஜய சிவா, மகாநதி சோபனா போன்றோர் இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். அவர்களும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினார்கள். அவ்வாறு ஒலித்த தமிழ்ப் பாடல்களெல்லாம் மற்ற பிரபலமான தெலுங்கு மொழிப்பாடல்களைப் போலவே இரசிகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்றன.

ஜி.என்.பாலசுப்பிரமணியம்தென்னிந்திய இசையின் கடந்த சில ஆண்டுகளின் வரலாற்றை சிறிது நோக்கினோமானால், அப்போது மிகப் பிரபலமாக விளங்கிய திரு. ஜி.என்.பாலசுப்பிரமனியம் (ஜி.என்.பி), மதுரை மணி ஐயர் போன்றோர் பெருமை பெற்றதே அவர்கள் பாடிய தமிழ்ப் பாடல்களினால்தான் என்பதை அனைவரும் அறிவர். ஜி.என்.பி.யின் "திக்குத் தெரியாத காட்டில்", "சொன்னதைச் செய்திட சாகசமா", "மா ரமணன்" போன்றவை இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல் மணி ஐயரின் "காவாவா", "தாயே யசோதா" போன்றவையும் திருமதி. எம்.எஸ் அவர்கள் பாடியுள்ள எண்ணற்ற தமிழ்ப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களின் பெருமைகளை என்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த இசை என்னும் நுண்கலையில் ஆரிய, திராவிட இருமுனை அரசியலைப் புகுத்தி, பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்து, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டார்கள் எனவும், தமிழிசையை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு அதனை "கர்நாடக இசை" என்று பெயர் மாற்றி தெலுங்கிலும் கன்னடத்திலும் பாடத் தொடங்கிவிட்டனர் எனவும் புலம்பிக்கொண்டிருக்கும் சிலருக்கு இசை அறிவுமில்லை, வரலாற்றறிவுமில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

டாக்டர் க. பூரணச்சந்திரன் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்:-
மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . 4 மறுமொழிகள்#