எனக்கு மிகவும் "டென்ஷண்" ஏற்றிவிடும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தியாகராஜ ஆராதனையின் முத்தாய்ப்பான "பஞ்சரத்ன கீர்த்தனை" கோஷ்டி கானம்தான். தொலைக்காட்சி இல்லாத காலத்தில் ரேடியோ நேரடி ஒலிபரப்பின்போதும் அப்படித்தான். ஒவ்வொரு பாடகரும் நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு, பலவிதமான் சுருதிகளில் ஒரு cacophony-ஐ கிளப்பிக் கொண்டிருப்பார்கள். டி.வி வந்தவுடன் இது இன்னும் மோசமாகிவிட்டது. பக்தியோ, சிரத்தையோ சிறிதுமில்லாமல், டி.வியில் முகம் காண்பிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டு, அங்கு அடிக்கப்படும் லூட்டியைக் கண்டால் சாதாரணமானவர்களுக்குக் கூட பிரஷர் ஏறிவிடும்.
இன்று காலை பொதிகையில் பஞ்சரத்ன கீர்த்தனை நேரடி ஒளிபரப்பு. அங்கே வெளிச்சமாகக் காணமுடிந்தது பகட்டும், படாடோபமும் தான். "பஞ்ச"மாக இருந்த ரத்தினங்கள், பக்தியும், ஈடுபாடும், தியாகராஜர்மேல் நன்றியுணர்வும்!
மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: இசை :: நாள்: ஜன 19th, 2006. 1 மறுமொழி.
சில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் "ப்ரேக்ஃபாஸ்ட்" என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது!) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் ஸ்டேஷனில் வண்டி ஏறித்தான் பொன்மலை செல்லவேண்டும். இரவு சாப்பாடு "மாயவரம் லாட்ஜ்" அல்லது "ஆர்.டி.ஸி"யில்.
அந்த ஆனந்தா லாட்ஜில் ரெகுலராக சாப்பிடுபவர்களுக்கு "பில்" கொடுப்பது கிடையாது. சாப்பிட்ட பிறகு "கல்லா"வில் இருக்கும் கணக்கு நோட்டில் நம் பக்கத்தை எடுத்து நாமாக எவ்வளவு அணாவுக்கு சாப்பிட்டோம் என்று கணக்கு போட்டு எழுதிவைக்க வேண்டியதுதான். அடுத்த மாத ஆரம்பத்தில் கூட்டுப் புல்ளி போட்டு கணக்கை நேர் பண்ணவேண்டும். அநேகமாக யாரும் ஏமாற்றுவது கிடையாது. இப்படி நம்பிக்கையிலேயேதான் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனந்தா லாட்ஜில் டிஃபன் மிக ருசியாக இருக்கும். ஒருநாள் காலையில் "கமகம"வென்று நெய்ப்பொங்கல். நல்ல பசி வேறு எனக்கு. ஒரு "பிடி" பிடித்துக் கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு "புஸ்தி" மீசைக்காரப் பெரியவர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: ஜன 21st, 2006. 11 மறுமொழிகள்.
பி.ஜி.வுட் ஹவுஸின் கதைகளில வரும் சீமான்களின் வீட்டு ஊழியர்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நிறைய சர்ச்சைகள் எழும். அவர்களுக்குள் ஒரு ஏணிப்படி போன்ற அமைப்பு (pecking order) இருக்கும். இது தெரியாமல் எஜமானர்கள் அவர்களிடம் காட்டும் அணுகுமுறை அவர்களுக்கு எற்புடையதாக அமையவில்லையெனில் சில சிக்கல்கள் தோன்றும். அதன் விளவுகளை அவர் மிக்க நகைச்சுவையுடன் வர்ணிப்பார். "வேலட்" என்று அழைக்கப்படும் "கனவானின் தனிப்பட்ட கனவான்" (இதில் இரண்டாவது "கனவான்" எனும் சொல் "உதவியாளர்" என்ற பொருளைக் கொள்ளும். என்றாலும் வுட் ஹவுஸ் "Gentleman's personal Gentleman" என்றே அழைக்கிறார். இது அவருடைய சிறப்பான சொல்லாட்சி), தவிர சமையல் மற்றும் சில சில்லுண்டி வேலைகளைச் செய்யும் "பட்லர்" (அந்தக் காலத்தில் வெள்ளைக்கார சீமாட்டிகளிடம் அடிமையாக இருந்தபோது, நம் ஆட்கள் பந்தாவுடன் பேசிய "பட்லர் இங்கிலிபீஸ்" நினைவுக்கு வருகிறதா!), மற்றும் தோட்டக்காரர்கள், வாட்ச்மேன் – இப்படி வெவ்வேறு படிநிலைகளில் பல பணியாளர்கள் இருந்தனர்.
இதுபோல் நம்மூரில் உள்ள சாப்பாடு ஹோட்டல்களிலும் காபி கிளப்புகளிலும் பணியாற்றும் சிப்பந்திகளுக்கிடையேயிலும் ஏற்றதாழ்வு இருக்கிறது. நான் குறிப்பிடுவது என்போன்றவர்கள் செல்லும் சாதாரண கஃபேக்களைப் பற்றித்தான் – கார்ப்பொரேட் (விண்மீன்கள் மின்னும்) ஹோட்டல்களைப்பற்றியல்ல. (அதற்காக நான் "பெத்த" ஓட்டல்களுக்கு சென்றதேயில்லை என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். முழுமையான "ஓஸி"யில் எத்தனை முறை சென்றிருக்கிறேன்! இப்பவும் அழைப்பு பலரிடமிருந்து வருகிறது. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். காரணத்தை என் முந்தைய பதிவில் காணலாம்.)
முதலாளி என்று ஒருவர் இருப்பார். சிறிய கடைகளில் அவரே கல்லாவில் இருப்பார். அவர் பல தொழில் செய்பவராகவோ அல்லது பல இடங்களில் கடை வைத்து ஆங்காங்கு சென்று காசை அள்ளி சாக்கில் நிரப்பிக் கொண்டு, பிறகு சி.வீ 1, சி.வீ 2, சி.வீ 3 என்று ரவுண்டு வருவதற்கே நேரம் போதாமல் தவிப்பவராகவோ (இடையிடையே மாமியார் வீட்டில் வேறு வாசம்) இருந்தால், கல்லாவில் தன் மனைவியின் (நம்பர் என்ன? – இங்குதான் சிக்கல்) உறவினரையோ அல்லது வைப்பாட்டியின் (இங்கு பிரச்னையே கிடையாது) உறவினரையோ அமர்ந்தியிருப்பார். அபூர்வமாக அம்மணிகளே நேரடியாக வீற்றிருந்து காசு வாங்கிப் போடுவதும் உண்டு.
ஒரு நள்ளிரவில் ஹோசூரிலிருந்து சென்னை செல்ல வேறுவகை ஊர்திகள் கிடைக்காததால் ஒரு லாரியில் ஏறிப் பயணம் செய்ய நேரிட்டது. அப்போது கிருஷ்ணகிரி அருகில் ஒரு சாப்பாட்டுக் கடையில் வண்டியை நிறுத்தி, இட்லி, புரோட்டா என்று ஓட்டுநர் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தபோது பார்த்தால், அங்கு நெருக்கியடிக்கும் லாரிக்காரர்கள் கூட்டம். காரணம், கல்லாவில் ஒரு பெண். நெடிய தோற்றம். மலர்ச்சியான முகம். "வழித்து விட்டாற்போன்ற" அழகு, மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: ஜன 22nd, 2006.
திரு. ஞானியார் ரசிகவ் அவர்களின் "இரட்டை முதுகலைப் பட்டதாரிகளை"ப் பற்றிய இந்தப் பதிவைப் படித்தவுடன் என்னுடைய அனுபவங்களையும் பதிக்கலாமென்று எண்ணினேன்.
முன்பெல்லாம் திருச்சி கோட்டை இரெயில்வே நிலயத்திற்குப் போகும் வழி மிக இருட்டாயிருக்கும். இரு பக்கமும் புதராக வேறு இருக்கும் (இப்போது முழுதுமாக உருமாறிவிட்டது). பொழுது சாய்ந்தபிறகு யார் அந்தப் பக்கம் போனாலும் அங்கு அலைந்து கொண்டிருக்கும் "அழகிகள்" கையைப் பிடித்து இழுத்து விடுவார்கள். இதனால் விளக்கு வைத்தபிறகு அந்தப் பக்கம் போவதை பெரும்பாலும் எல்லோரும் தவிர்ப்பார்கள் – வாடிக்கையாளர்களைத் தவிர.
ஒரு முறை என் ரூம்மேட்டை ஜங்ஷன் சென்று ரயிலேற்றிவிட்டு அவனுடன் கோட்டை வரை வந்து, பின் அங்கு இறங்கி டாடா காட்டிவிட்டு வெளிவந்தேன். இரவு சுமார் 10 மணியிருக்கும். ஸ்டேஷனிலிருந்து மெயின் ரோடு வரையிலான பாதையை வேகவேகமாகக் கடக்க முற்பட்டேன். இருட்டில் முகம் தெரியாத பூதங்கள் இரண்டு என்னை வழிமறித்தன. "டேய், என்னடா ஓடர? இதோ பார், அந்த ஐயா எப்படி எங்களோட வர்ரார் பாரு. நீயும் வாடா. காசை அப்பறம் கொடு. வாடா" என்றபடி கையைப் பிடுத்து வலிக்கத் தொடங்கினார். எனக்கு நடுங்க ஆரம்பித்தது. கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். "ஓடராம் பாருடா, டேய், ஒனக்கு சாமானம் இல்லே?" இப்படிக் கூப்பாடு போட ஆரம்பித்தனர். தெப்பக்குளக்கரையில்தான் என் ஓட்டம் நின்றது. அதற்குள் வியர்த்து விட்டது. அப்பா, அன்றைக்கு எனக்கு இரத்தக் காட்டேரியெல்லாம் கனவில் வந்தன.
நான் வசித்த ஆண்டார் தெரு முனையும், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதியும் இதுபோன்ற பரத்தமை வணிகத்திற்குப் பேர்பெற்றது. அப்போதெல்லாம் இவ்வளவு கடைகளோ, பர்மா பஜாரோ கிடையாது. அங்கு வசித்தவர்கள் இந்தக் கரைச்சலை ஒழித்து, அந்த ஏரியாவுக்கு ஏற்பட்ட கெட்ட பெயரைத் துடைப்பதற்காக ஒன்றுகூடி திரு. ஐயன் பெருமாள் கோனார் தலைமையில் ஒரு குழு அமைத்து சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பிறகு இது குறைந்தது. வெகு நாட்கள் அங்கிருந்த ஒரு தெரு முக்கில் "விபசார வீடுகளுக்கு வருபவர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப்படும்" என்ற போர்டைப் பார்த்திருக்கிறேன். அதுபோல் சின்னக் கடைத்தெரு பகுதியையும் குறிப்பிடுவார்கள். அங்கெல்லாம் ஒரு முறை சென்று என்னதான் செய்கிறார்கள் என்று (ஒரு பூராயத்திற்காக) பார்க்கவேண்டுமென்று ஆசை. ஆனால் போதுமான தைரியமில்லை. நல்ல பிள்ளையாகவே வளர்ந்ததுதான் காரணமோ என்னமோ!
அந்தக் காலத்தில் விராலிமலை போகிறேன் என்றாலே ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். அதேபோல் சென்னையில் கோடம்பாக்கம் போகிறேன் என்றாலும் அதுதான் பொருள்.
ஒரு நள்ளிரவில் மதுரையில் ஸ்டேஷனில் இறங்கி விடுதியை நோக்கி டவுன் ஹால் ரோடு வழியாகச் செல்லும்போது ஒருவன் என் கூடவே மரியாதையாக நடந்து வந்து, "சார், என்ன சார் வேகமா போறீய்ங்க. இப்பவே பாதிராவு ஆச்சில்ல, இனி போய் என்ன செய்ய? என் கூட வாங்க. இந்த மணி தொழில்ல சுத்தமில்ல. மத்த பயலுகள்ளாம் சும்மா 16 வயசு, 18 வயசுன்னு பொய் சொல்லிட்டுத் திரியுவாங்க. இந்த மணிகிட்ட அதெல்லாம் கிடையாது. கியாரெண்டியா 25-க்கு தாண்டாது. அயன் சரக்கு. உங்களை மாதிரி பெரிய அதிகாரிகளுக்கின்ன கொணாந்தது. வாங்க, ரூம்பெல்லாம் போட்டு வைச்சிருக்கான் இந்த மணி" என்று கேன்வாஸ் பண்ண ஆரம்பித்தார். அப்பெல்லாம் நான் தெளிஞ்சுட்டேன், பயந்தெல்லாம் ஓடல்ல. "அப்பா மணி, இப்ப ரொம்ப டயர்டா இருக்கு. ரூமுக்கு போய் தூங்கணும். நாளைக்கு பார்க்கலாம்" என்றேன். அவர் கொஞ்சமும் மனம் கோணாமல் "நாளைக்கு இந்த முக்கில வந்து 'மணீ'ன்னு ஒரு குரல் கொடுங்க. ஓடி வந்துடுவமில்ல". என்றார். இன்னும் எனக்கு மணியின் சேவையைப் பெறும் பாக்கியம் கிட்டவில்லை!
சில நாட்களுக்குமுன் என் மனைவி வெளிநாடு சென்றிருந்தபோது என் நண்பரொருவர் ஒரு செல்பேசி எண்ணைக் கொடுத்து, ஒரு பெயரையும் கூறி, "வார முடிவில் இந்த எண்ணுக்கு டயல் செய்து, 'ஒரு நதி கடலைத் தேடுகிறது' என்று (ஆங்கிலத்தில்) சொல். பிறகு அவளே பேசுவாள். உனக்கு கம்பெனி கொடுப்பாள். கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும்" என்றான். எனக்கு ஒரே த்ரில் (திகிலும் கூட). அதையே யோசித்தவண்ணம் படுத்தேன். லேசில் தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து பேப்பரைப் புரட்டினால், தன்னைக் காதலிக்கவில்லை யென்பதற்காக ஒரு நல்ல பெண்ணின் கைப்பேசி என்ணை, இதுபோல் "கால்கேர்ல்" நம்பர் என்று பலரிடம் கொடுத்து, அந்தப் பெண்ணைத் துன்புறுத்தியதற்காக ஒருவன் கைது செய்யப்பட்டான் என்று ஒரு செய்தி வந்திருந்தது. அவ்வளவுதான்! அந்த என்ணை நாளது வரையில் அழைக்கவில்லை என்றாலும் அந்த எண் என் டயரியில் இன்னமும் இருக்கிறது என்னவோ உண்மை!
ஆனால் எனக்கென்னவோ இந்த விலைமாதர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் நிச்சயமாக ஒரு தேடுதலினாலோ, திமிரினாலோ இத்தகைய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டர்கள். அவர்கள் அந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்கள் என்றே நினைக்கிறேன். பேங்காக்கில் இதுபோல் "ஜில்பாஞ்சி" எல்லாம் நிறைய இருக்குமாம். தெரிந்தவர்கள் விளக்கலாம்!
சார்ந்த வகை: பொது :: நாள்: ஜன 23rd, 2006.
மேலைநாடுகளில் ஆரம்பப் பள்ளிகளிலேயே மிகுந்த அளவில் கணிப்பொறியின் புழக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக மாணாக்கர்கள் கையில் மடிக்கணிகளின் பயன்பாடு தொடங்கியுள்ளது. இது தவிர ஆசிரியர்கள் இணையம் மூலமும், ஆடியோ, வீடியோ பரிமாற்றங்கள் மூலமும் பாடம் நடத்தத் தொடங்கியுள்ளார்கள். மாணவர்களும் அதே முறையில் பதிலளிக்கிறார்கள். இத்தகைய கணினிப் பயன்பாட்டினால் மாணவர்களுக்கு காகிதம், எழுதுகோல் கொண்டு, மனத்தின் எண்ணங்களை கோர்வையாக்கி, முழுமையான, இலக்கனத்திற்கு உட்பட்ட வாக்கியங்களை பிழையில்லாமல் அமைத்து, நீண்ட கட்டுரைகளை எழுதும் திறன் குறைந்து விட்டதாக பலர் வருத்தப் படுகிறார்கள். "எஸெமெஸ்" மற்றும் "சாட்" செய்யும் வகையிலேயே பாடங்களிலும் வார்த்தைகளைக் கீறி, துண்டுபோட்டு துப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: ஜன 24th, 2006. 4 மறுமொழிகள்.
ஆமாம். இட்லிதான் சிற்றுண்டிகளின் "ராணி", முக்கியமாக காலை உணவுகளில். அதனை சரியான பக்குவத்தில் செய்து, அதன் உடன் செல்லும் பதார்த்தங்களும் சரியாக அமைந்தால் அது அமிர்தத்துக்குச் சமம். எல்லா வயதினருக்கும், எத்தகைய நோயிருந்தாலும், எளிதில் செரிமானமாகி தெம்பளிக்கும் சீருணவு இட்லியே!
"பட்டனைத் தட்டிவிட்டா, ரெண்டு இட்டலி தட்டில விழவோணும்; சட்டினி சாம்பாரும் விழவோணும்" என்று டி.ஏ.மதுரம் அவர்கள் என்.எஸ்.கிருஷ்ணனிடம் வெளியிட்ட ஆசை நிறைவேறும் நாள் இன்னும் வரவில்லையென்றே எண்ணுகிறேன். அவர் எதிர்பார்த்ததுபோன்ற ஒரு "இட்டலி மெஷினு" இன்னும் பொதுஜன உபயோகத்துக்கு வரவில்லை. ஆனாலும் இட்லி செய்முறை சிறிது எளிதாக்கப்பட்டு, பெருமளவில் உற்பத்தி செய்யும் (mass production) நிலைக்கு வந்துவிட்டது. வணிகமுறை உணவகங்களிலும், கேண்டீன்களிலும் கொதிகலனில் உற்பத்தியாகும் நீராவி மூலம் இட்லி வேகும் முறை தொடங்கி பல வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அதற்குமேல் அந்தத் துறையில் தொழில்நுட்பம் வளர்ச்சியடையவில்லை என்றே சொல்லலாம்.
எங்களூரில் முதன்முதலாக எங்களுடைய அறவை மில்லில், இட்லிக்கு மாவு அறைக்கும் இயந்திரம் இயக்கப்பட்டபோது யாரும் அறைக்க வரவில்லை. வீட்டில் ஆட்டுக்கல்லில் மணிக்கணக்காக மாவறைப்பதற்காக மனித இயந்திரங்கள் இருந்தபோது "இதுவேறு எதற்கு" என்பது ஒரு காரணமாக இருந்தாலும், மின்சாரம் மூலம் இயங்கும் இயந்திரத்தில் அரைத்தால் மாவு சூடாகிவிடும்; அதனால் உடல்நலத்துக்கு கேடு என்கிற என்ணப்பாங்கும் வேறொரு காரணம். மின் விளக்கு பாவித்தால் ஆயுள் குறையும் என்கிற நம்பிக்கை இருந்த ஊர் அது!
ஆனால் ஒருவார காலத்துக்குள் எங்கள் இயந்திரம் இரண்டு ஷிஃப்டு வேலை செய்யவேண்டியதாயிற்று. அதுவும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் 24 மணிநேரமும் தொடர்ந்து ஓடியது. வாடிக்கையாளர்களிடையே, "என்னோடது முதல்ல போடு" என்று சண்டைகள் மூண்டன. ஆகையால் நாங்கள் அவசரமாக இன்னொரு மெஷின் பூட்டவேண்டியதாயிற்று.
இட்லியின் முதன்மையான வரையறை அது மென்மையாக இருத்தல் வேண்டும். இட்லியில் கல் இருக்கலாம். ஆனால் இட்லியே கல்லாக இருக்கக் கூடாது!
அவ்வாறு இட்லி மெதுமெதுவென்று (ஒரு அழகிய இளம்பெண்ணின் மென்பாதங்கள் போன்று) இருக்கவேண்டுமானால், இட்லிமாவு "புசுபுசு"வென்று பொங்கி யிருக்கவேண்டும்.
சரி, முதலில் மாவு தயாரிப்போம்: மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: பொது :: நாள்: ஜன 28th, 2006. 7 மறுமொழிகள்.
தமிழ்நாடு அரசின் தேர்தல் துறை வாக்காளர் பட்டியலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. அதனை இந்தப் பக்கத்தில் கண்டு, உங்கள் பெயர் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொள்ளலாம். உங்கள் பெயர், தொகுதி இவற்றை இட்டு தேடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். தீநரியில் தமிழ் எழுத்துறுக்கள் பதிவது சிறிது கடினமாக இருக்கிறது. I.E-ஐ பாவிப்பது நல்லது.
உங்கள் பெயர் விட்டுப் போயிருந்தால் நேரடியாக இணையத்திலேயே பதிவு செய்ய இலகுவாக ஒரு விண்ணப்பப் படிவமும் உள்ளது.
அப்பாடி. என் பெயர் இருக்கிறது! ஆனால் வாக்குச் சாவடிக்குச் சென்று "கைமேல் வை மை" எனும்போது கையை விரித்துவிட்டார்களென்றால்? ஆரவாரமில்லாமல் அகத்துக்கு மீண்டு, அட்டணங்கால் போட்டு அமர்வதைத் தவிர வேறுவழி?
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: ஜன 30th, 2006.


சமீபத்திய மறுமொழிகள்