துளித்துளி

குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும் — உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
— பாரதியார்

சரி, விருந்தினராக வந்துள்ளீர்கள். வேறு ஏதாவது தேடிப் பெறுங்களேன், நிறைய எழுதியிருக்கிறேனே! ஜூன் 2005 Archives

2

வந்தே விட்டது!

xxxஆமாம். இனிமேல் "பலான" சமாசாரங்கள் – "சரோஜாதேவி கதைகள்" தரத்தில் உள்ளவை, நிற்கும் படங்கள், ஓடும் படங்கள், டாக்டர் பிரகாஷ் காட்டிய படங்கள் போன்றவை – "XXX" மார்க் போட்ட வலைத் தளங்களாக தனியாக இனம் பிரித்துக் காட்டப்படும். இதற்காக .xxx (.com, .net, .org போல) என்ற டொமைன் பெயர்கள் (TLD) பதிவு செய்யப்படும். இந்த முடிவை இதற்காக அமைக்கப்பட்டுள்ள ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) என்ற குழு பலத்த சர்ச்சைக் கிடையே எடுத்துள்ளது. இந்த விஷயம் கடந்த சில வருடங்களாகவே கடுமையாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த முறையை அமல்படுத்தினால் பாலியல் பற்றிய தரவுகள், அடக்கங்கள் கொண்ட தளங்கள் ஒரு ஓரமாக .xxx வகைப்படுத்தி ஒதுக்கப்படும். இதனால் அவற்றை சுலபமாக இனம் கண்டு இளஞ்சிறார்கள் கண்களுக்கும் கருத்துக்கும் உட்புகாமல் மறைப்பது சுலபமாகும். இந்தக் காரணத்தைக் காட்டியே இத்தகைய முறை பாவிக்கப்பட வேண்டும் என்று பலர் முயற்சி செய்து வந்தனர்.

ஆனால், வேறு சிலரோ, பாலுணர்வு பற்றிய ஆரோக்கியமான சர்ச்சைகளைக்கூட இந்த வகை தளங்களாக சித்தரிக்கப் பட்டு தடை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்று வாதாடுகிறார்கள். கருச்சிதைவு, ஓரினச் சேர்க்கை முதலியவற்றைப் பற்றிப் பொதுவாக இனிமேல் பேசமுடியாது; அவற்றை மக்கள்முன் விவாதிக்கும் தளங்கள்கூட தடை செய்யப் படலாம் என்பது பல தனி நபர் உரிமைக்காகப் போராடும் குழுக்களுடைய பயம்.

இந்த ஆண்டு கடைசியில் அமுலுக்கு வரப்போகும் இவ்வகை டொமைன் பெயர்களை பதிவு செய்யும் முன்னுரிமை ICM ரெஜிஸ்ட்ரி என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகவே நண்பர்களே, "ஆண் குறி" போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசைதீர இப்பவே எழுதித் தள்ளிவிடுங்கள்!

சார்ந்த வகை: கணினி :: நாள்: . 2 மறுமொழிகள்#

4

ப்ளாக்கர்.காம் அளிக்கும் இலவச செவையின் உதவியாலும், முகுந்த் அவர்களின் "எ-கலப்பை" மென்பொருள் மற்றும் உமர் அவர்களின் தேனீ எழுத்துரு ஆகியவற்றின் உபயத்தாலும், நம் தோழர்கள் வலைப்பதிவில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காசியின் உதவியால் அவையெல்லாம் தமிழ்மணத்தில் பூத்துக் குலுங்குகின்றன. ப்ளாக்ஸ்பாட்டில் உள்ளிட்டவுடன், எவ்வித நிபுணத்துவத்தின் தேவையுமில்லாமல் ஒருங்குறித் தமிழ் எழுத்துருவில் வலைப்பதிவாளர்களின் ஆக்கங்கள் "பட்டனைத் தட்டிவிட்டால் தட்டிலே ரெண்டு இட்டிலி விழுவது போல்" தெரிவதால், தமிழ் வலைப்பதிவுகள் நிறைய முளைக்க ஆரம்பித்து விட்டன. என்ணிக்கை கூடுமளவுக்கு தரம் கூடியிருக்கிறதா என்னும் ஆராய்ச்சியை நுகர்வோர் கண்ணோட்டத்திற்கே விட்டு விடலாம் என்று எண்ணுகிறேன். சுரேஷ் கண்ணன் கூறியிருப்பதுபோல் சிலர் இந்த சேவையை தம் outlet-ஆகவும், வேறு சிலர் toilet-ஆகவும் பாவித்து வருகிறார்கள என்பது சிந்தனை செய்ய வேண்டிய கருத்து! மேலும் வாசிக்க…

2

சென்ற திங்களில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றேன். வழியிலும், அவ்வூரிலும் நான் கண்ட காட்சிகள் சில.
சுட்டி விட்டால் விரியும் சமர்த்துப் படங்களவை!

கிராம ரம்மியம்

மன்னிக்கவும்!

மீதமுள்ளதை நாளை இடுகிறேன்.

சார்ந்த வகை: பொது :: நாள்: . 2 மறுமொழிகள்#

13

இன்னும் சிறிது இளைப்பாருங்கள்! சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்!

பச்சைப் பசேல்

வண்டாடும் சோலை

வைக்கோல் போர்

ஒளி முழுதும் உனக்கே சொந்தமோ?

சார்ந்த வகை: பொது :: நாள்: . 13 மறுமொழிகள்#

2

கணிதமேதை வீட்டுத் திண்ணைஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவதற்கு அந்த இணைய இதழின் பங்களிப்பு பற்றியும் மிக விளக்கமாக திரு. இராஜாராம் அவர்கள் எடுத்துரைத்தார். முக்கியமாக வர்த்தக ரீதியில் இயங்கும் பத்திரிக்கைகள் எல்லாவித கருத்துக்களுக்கும் இடம் கொடுக்கும் சாத்தியம் இல்லாமலிருப்பதையும், அந்தப் பெரிய இடைவெளியை தின்ணை இதழ் இட்டு நிரப்புவதையும், அதுவே அவர்களின் பெரிய சாதனையாகவும் குறிப்பிட்டார். மேலும் அறிவியல் விளக்கக் கட்டுரைகளுக்கும், அறிவியல் கன்ணோட்டத்தில் எழுதப்பட்டவைகளுக்கும் அவர்கள் ஊக்கம் கொடுப்பதும், அதே நேரத்தில் புதினங்களுக்கும், பல்சுவை ஆக்கங்களுக்கும் இடமளிப்பதும் குறிப்பிடப்பட்டது. இரா. முருகன், நாகரத்தினம் கிருஷ்ணா ஆகியோரின் நாவல்கள் தின்ணையிலேயே எழுதப்பட்டு வெளிவந்தது என்ற செய்தியையும் தெரிவித்தார். இணையத்திலேயே புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டதையும் விளக்கினார். அமெரிக்காவில் வசித்தாலும், தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே ஒரு தொண்டு நோக்கில், தன் ஆர்வத்தினால் உந்தப்பட்டு இதுபோன்ற இதழை நடத்தி வருவது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாக அந்தப் பேட்டியைக் கண்ட அனைவராலும் நிச்சயமாக உணரப்பட்டிருக்கும். தமிழில் நன்கு எழுதக் கூடிய எவரும் தங்கள் படைப்புக்களை திண்ணைக்கு அனுப்பலாம், அவை பிரசுரிக்கப்படும், என்ற அவருடைய அறிவிப்பு எழுதத் துடிக்கும் பலருக்கு ஒரு இனிய செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பேட்டியெடுத்த திருமதி. நிர்மலா பெரியசாமி அவர்கள் தன் அதிர்க்குரலில் முக்கியமான செய்திகளை மீண்டுமொருமுறை பரைசாற்றுவதுபோல் எடுத்துரைத்தார். ஆனால் கடைசி சில நிமிஷங்கள் வரை அதிகமாக குறுக்கே பேசாமல் இராஜாராம் அவர்களைப் பேசவிட்டார். அதனால் அவர்தம் கருத்துக்களை முழுமையாகத் தெரிவிக்க முடிந்தது. மேலும் வாசிக்க…