துளித்துளி

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்ப்போம் உயிர் வளர்ப்போமே
— திருமூலர்

சரி, விருந்தினராக வந்துள்ளீர்கள். வேறு ஏதாவது தேடிப் பெறுங்களேன், நிறைய எழுதியிருக்கிறேனே! டிசம்பர் 2004 Archives

4

முன்பு கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது மர்லின் மன்றோ உட்பட பல நூற்றுக்கணக்கான பெண்கள் அவருடன் உறவு வைத்திருந்ததாக செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் சொன்னார், இவை எல்லாமே உண்மையாக இருந்திருந்தால் கென்னடிக்கு ஒரு காப்பி கோப்பையைத் தூக்கக் கூட சக்தி மிஞ்சியிருந்திருக்காது என்று! (அதனால்தான் மோனிகாவோட நிறுத்திக்கிட்டாரோ அவருடைய மானசீக சிஷ்யர் கிலிண்டன்?)

ஆனால் கென்னடிபோல் ஒரு romantic ஆசாமியாக இல்லாவிட்டாலும் இப்போது போலீசார்களாலும் , பத்திரிக்கை மற்றும் ஊடகங்களாலும் பல பெண்களுடன் பலவிதத்தொடர்புகள் வைத்திருந்ததாக ஜயேந்திரர் சித்தரிக்கப் படுகிறார்! இந்தப் பெண்கள் பல ஊர்கள் மற்றும் பின்னணியிலிருந்து, பலவித சைஸ், ஷேப்புக்களில் வந்து பேட்டி தருகிறார்கள். வற்றாத ஊற்றாக தொடர் குற்றச்சாட்டுக்கள் பெருகிய வன்ணம் இருக்கின்றன. முதலில் ஸ்ரீரங்கம் உஷா, பின் அனுராதா, இப்போது ஜூ.வி அடுக்கும் பெயர்களான விஜயா, வனஜா, சரோஜா, மைதிலி, ஜெய லட்சுமி (இது வேறொருவராம்!! இன்று எஸ்.எம்.எஸ்ஸில் வந்த கொஞ்சம் "விழுப்பு" ஜோக்:-
'What is the difference between Jeyendirar and Jeyalakshmi?'
'Jeyendirar is in police custody. But police is in Jayalakshmi's custody!) இப்படிப் பல பெயர்கள் சுடச்சுட பரிமாறப்படுகின்றன.

ஜெயேந்திரரை அவற்றில் முடிச்சுப் போட்டு சில மஞ்சள் பத்திரிக்கைகள் தம் விற்பனையைப் பெருக்குவதற்காக அடிக்கும் கூத்தைப் பார்த்தால் கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து காஞ்சீபுரம் சம்பந்தப்பட்ட எல்லா சாவுகள் (கொசு, தவளை, கரப்பான் பூச்சி, மரவட்டை உட்பட) மற்றும் பெண்கள் சம்பந்தப் பட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர்தான் காரணம் என்பார்கள் போலிருக்கிறது!

ஆனால் இவை ஓவராகப் போகும்போது மக்களுக்கும் ஒரு சலிப்பு உண்டாகி ஜெயேந்திரரை செத்த பாம்பை அடிப்பதுபோல் செய்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படுவது நிச்சயம்.

சரி. இந்த episode-ஐ வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்போம்:- மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: பொது :: நாள்: . 4 மறுமொழிகள்#

1

சிறு வயதில் ரேடியோதான் எனக்கு நெருங்கிய துணை. எங்கள் வீட்டு வால்வு ரேடியோவில் – முதலில் Texla பிறகு Bush – இரவு நேரங்களில் கர்னாடக சங்கீதம் தான் குத்தகை – அதிலும் செம்மங்குடி போன்ற மூக்கு வித்வான்கள்தான் ”நீ இழு, நான் இழு” என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள், நீர் வற்றிக் கொண்டிருக்கும் குட்டையின் சேற்றில் படுத்து சொர்க்கத்தை அநுபவிக்கும் எருமை மாட்டின் "கொய்ங்" போல! இந்த சங்கீதக் காரர்களுக்கு அநாவசியமாக வாய் வேறு எதற்கு – மூக்கு ஒன்றே போதுமே என்று நான் பல முறை என்ணியிருக்கிறேன்.எம்.எஸ் என் அம்மாவிடம் "இப்படி இழுத்து இழுத்து பாடுவதுதான் சங்கீதமா? ஏன், இனிமையாகப் பாடக் கூடாது என்று ஏதாவது இலக்கணக் கட்டாயமா?" என்று கேட்கும்போதெல்லாம், "டேய், ஜிஎன்பி, எம். எஸ் – இவங்களைக் கேட்டுப்பார்டா. அது தாண்டா சங்கீதம்" என்று பதில் சொல்லுவார். அப்போதிலிருந்தே அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்கள் போல் நானும் எம்.எஸ் பாடல்களைக் கேட்டு அந்த இசையின்பத்தை அநுபவித்து வருகிறேன்.

சில வருடங்களுக்கு முன் திருவையாறு தியாகப் பிரும்ம ஆராதனைக்குச் சென்றிருந்தேன். வழக்கத்தை விட தாங்க முடியாத கூட்டம். காலையிலிருந்தே கையில் சாப்பாடு, தண்ணீருடன் கொட்டகைக் குள்ளேயே பல பெண்மணிகள் உட்கார்ந்திருந்தனர். நேரம் ஆக ஆகக் கூட்டம் கூடிக் கொண்டே வந்தது. ஆம், அன்று ஒரு சிறப்பான நாள். பல வருடங்கள் இடைவெளிக்குப் பின் அன்று தான் எம்.எஸ் அவர்கள் ஆராதனையில் பாட இருந்தார்கள்! மேடையை நெருங்க முடியாத அளவுக்குக் கூட்டம். நானும் எனக்குத் தெரிந்த தலைகள் மூலம் கிட்டத்தில் போக முற்பட்டேன். பலிக்கவில்லை. முன்னமையே முயற்சி செய்து அங்குள்ள நிர்வாகிகள் யாரையாவது சிபாரிசு பிடித்திருக்கலாமே என்று
தோன்றியது. சரி. இப்போது என்ன செய்வது? கடைசியில் அமர்ந்து கேட்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது மேடையின் அருகில் அமர்ந்து எம்.எஸ் கச்சேரியை கேட்க வேண்டும் என்கிற வெறி. மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: இசை :: நாள்: . 1 மறுமொழி#

1

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று என்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆனால் சங்கீதம் என்பது வேறு அனுபவம்; சங்கீதக் காரர்களை அருகில் காண்பது வேறு அனுபவம். ஒரு கை விரல்களைக் கொண்டு எண்ணக் கூடிய வெகு சிலரைத் தவிர மீதியுள்ள வித்வான்களைக் காதால் மட்டும் கேட்டு விட்டு ஓடிப்போனால் உங்களுக்கு நல்லது! அவர்களுடன் நெருக்கமே கூடாது. சபா செயலர்கள் எப்படி நெருங்காமலிருக்க முடியும் என்று கேட்கலாம். அவர்கள் நிலை வேறு. அந்த இரு சாராரும் ஒரு மாதிரி symbiotic existance உள்ளவர்கள். இருவர்களும் ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்துக் கொண்டு "தடுக்கும் கோலமுமாக" இருப்பார்கள். மேலும் அந்த இரு சாராரும் ஒரு மொத்த அமைப்பின் complementary-ஆக, ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பதால் ஒரு வணிகம் சார்ந்த உறவு கொண்டு ஒழுகும் கட்டாயத்தில் இருப்பவர்கள். இவர்களை விட்டு விட்டு நம்மைப் போல் சாதாரணர்களைப் பற்றிப் பார்ப்போம்! மேலும் வாசிக்க…

சார்ந்த வகை: பொது :: நாள்: . 1 மறுமொழி#

0

அவர்களுக்கு
கடல்தான் அன்னை.
கடல்தான் வாழ்வு
கடல்தான் வயிற்றை நிரப்பும்
அட்சய பாத்திரம்
ஆனால்
அந்தக் கடலே
கணக்கற்றோருக்குக்
காலனானான் நேற்று.

"ட்சூனாமீ" என்ற அலைப் பிசாசின் ஊழித் தாண்டவத்தின் கொடுமையால் மாந்தர்கள் வெறும் எண்ணிக்கையாய் மாறிப்போயினர்!

ட்சூனாமீஜப்பானிய மொழியில் எழுதினால் நெற்றியில் தரிக்கும் நாமம் போன்றதொரு தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த பிரளய காலத்துப் பேய், கபந்தன் போல் கடற்கரையோரத்தில் கண்டவரையெல்லாம் கவர்ந்து கபளீகரம் செய்து விட்டது.

இதோ காண்கிறீர்களே அதுதான் இரு கீற்று ஜப்பானிய மொழி ட்சூனாமீ. "ட்சூ" (துறைமுகம்), "னாமீ" (அலை). அதாவது கடற்கரையையும் துறைமுகங்களையும் தாக்கும் ராட்சஸ அலைகள் எனப் பெயர் கொள்ளலாம்.

இவை ஒன்றன்பின் ஒன்றாக மலைபோல் எழக்கூடிய பேரலைகள். கடலடித் தரையின் கீழ் நிகழும் நில அதிர்வுகள், பொங்கி யெழும் எரிமலைகள், நடுக்கங்கள் தவிர, பூமியில் தாக்கும் எரி விண்மீன்கள் மற்றும் வான் கற்கள் இவைகளாலும் இந்த ட்சூனாமி என்கிற பொங்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கி உயிருக்கும், பொருளுக்கும் பெருத்த சேதத்தை உலகமெங்கும் பற்பல கால கட்டங்களில் விளைவித்து வருகின்றன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

http://www.pbs.org/ என்ற வலைத் தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் Flash Animations-களை இங்கு காணலாம். இவற்றை நீங்கள் உங்கள் உலாவியில் (browser) காணவேண்டுமானால் Shockwave Flash Plug-in என்கிற உள்ளீட்டு நிரலி தேவைப்படும். சாதாரணமாக எல்லா உலாவிகளிலும் இது உள்ளடக்கம் என்றாலும், தேவைப் பட்டால் இந்த வலை உரலுக்குச் சென்று அந்த குட்டி சொவ்வறையைப் பெற்று அதனை அதன் செய்முறைப்படி உலாவியினுள் இட்டடபின் அந்தக் குறும்படங்களைக் காணலாம்.

ஆழ்கடலின் அடியிலமைந்த நிலமங்கையின் பாதங்கள் (oceanic plates or tectonic plates), கண்டங்களின் எல்லைகளின்பால் அமைந்த பாளங்களினூடே சொறுகிக் கொள்வதால் (slip under continental plates), ஒருவித "தப்புப் பாளங்கள்" (faults) ஏற்படுகின்றன. இதனால் நில நடுக்கம் ஏற்பட்டு, ஆழ்கடல் நிலத்தின் ஒரு பகுதி மேலெழும்பி, அதன் மேலுள்ள நீர்ப்பகுதியையும் திடீரென்று தூக்கி எம்பச் செய்கிறது. கடலின் நிகழும் "ட்சூனாமீ" என்கிற இந்த பௌதிக மாறுபாடு முதலில் சாதுவாகத் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் மணிக்கு 800 கி.மீ வரை வேகம் கொண்டு ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பரப்பில் பாய்ந்து சென்று கரை கண்ட இடமெல்லாம் தாக்கிச் செல்கிறது. இந்த சைத்தானுக்கு கரைகளைக் காண்டால் வெறி பிடித்துவிடும். கடலின்பால் லேசாக எழும்பிப் பயனம் செய்யும் ட்சுனாமீ கரையைக்கண்டால் 30-40 மீட்டர்கள் உயரம் வரை எட்டி கரையை ஒரு நீராலான மலைபோல் தாக்குகிறது. இதிலிருந்து தப்புவது மிகக் கடினம். சென்னையைத் தாக்கிய ட்சூனாமீ சுமார் 10-15 அடி உயரம் வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கடற்கரையோரங்களில் அமைந்த நிலப் பகுதிதான் (ridge) இந்தத் தாக்குதலைத் தாங்கி, ஊருக்குள் அலை அடிக்காமல் காக்க வேண்டும். ஆனால் ஊரே கரையின் மேல் இருந்தால்?

அதுதானே இங்கு நிகழ்ந்தது!

சரி, மேற்கொண்டு என்ன செய்யப் போகிறோம்?

1

நம் நாட்டில் National Institute of Oceanography மற்றும் Indian Space Research Organisation எல்லாம் உள்ளன. இவைகளின் சேவைகளை பத்திரிக்கைகள் விவரமாக பறை சாற்றியுள்ளன.

தனக்குத் தானே பட்டங்கள் அள்ளித் தந்துகொள்ளும் தலைவர்களுக்கும் பஞ்சமில்லை.

ஆமாம், கருப்பு சிறப்பாடையுடன் நடைப் பயணம் வந்தாரே, அவர் தன் படையுடன் கடலூருக்கும், நாகைக்கும், கன்னியா குமரிக்கும் சென்று அங்கு ஒன்றுமேயின்றித் தவிக்கும் ஏழைகளுக்கு சேவை செய்வாரா?

எல்லோரையும் தேர்தலின்போது காணலாம்!

Vote bank politics is the poor man's burden!