"விண்டோஸ்" இயங்குதளத்தை உருவாக்கும் "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனம் இப்போது ஒரு புதிய குண்டைத்தூக்கிப் போட்டிருக்கிறது.
இதைப்பற்றி இங்கே பேசியாக வேண்டிய கட்டாயம்? ஏனென்றால் நீங்கள் எல்லொரும் கணினி வழியாகத்தானே இதை வாசிக்கிறீர்கள்!
மைக்ரோஸாஃப்ட் கம்பேனியின் நடைமுறைகளைக் கவனித்து வரும் எவருக்கும் அவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்களோ என்ற பயம் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் இதோ ஒரு புதிய கொடூரம்!
ஜன்னல் இயங்கு தளத்துடன் கைகோத்தபடி உங்கள் கணினியுள் குடியேரும் "இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர்" என்ற உலாவி (browser) ஒரு குறைப்பிரசவம்! அதில் உள்ள சல்லடைக்கண் போன்ற ஓட்டைகளை எண்ண உங்கள் வாழ்நாள் போதாது. வழியில் போகிற வருகிற விஷக் கோப்புக்களையெல்லாம் உங்கள் கணினியுள் அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரை தொங்கலில் விட்டுவிடும். ஆனால் வலை மேய்வோரில் 95 சதம் பேர் அந்த உலாவியில் சவாரி செய்வதால் மென் பொருள் பாதுகாப்புத் துறையில் வணிகம் செய்யும் பலர் கணிசமான லாபம் ஈட்ட இது ஒரு காரணமாக இருந்து வருகிறது. அவ்வப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் நானும் சமர்த்து என்று காண்பிக்க "சேவைப் பொதி", "பாதுகாப்பு அறண்" என்று கொடுத்துக் கொண்டு வருகிறது.
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 24th, 2004. 1 மறுமொழி.
இன்று இந்தியாவையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கணினி மென்பொருள்தான். "எல்லா மார்க்கங்களும் ஒரே கடவுளைத்தான் குறிக்கின்றன, எல்லா நதிகளும் ஒரே கடலில் கலப்பது போல" என்கிற cliché (இந்தக் கூற்றை எல்லோரும் ஒத்துக்கொள்வதில்லை – நீ வேண்டுமானால் என்னுடன் சேர்; அப்போதுதான் நாம் இருவர் வணங்கும் கடவுளும் ஒருவரே எனக்கொள்ளலாம் – என்பது சிலர் வாதம்!) போல எந்தப் படிப்பு படித்தாலும் ஒரு மென்பொருள் நிறுவனத்திலோ அல்லது மென்பொருளைக் கையாண்டு வேறுபல சேவைகள் செய்யும் நிறுவனத்திலோ வேலைக்கு சேருவதுதான் எல்லோருடைய குறிக்கோளும். அப்பத்தான் நாலு காசு பார்க்க முடியும், திருமண மார்க்கெட்டிலும் மதிப்பிருக்கும். இதுதான் இன்றைய நிலை. பெரிய நிறுவனங்கள், ஒருசில பெயர் பெற்ற கல்லூரிகளுக்கே சென்று மெகானிகலோ, எலெக்ட்ரிகலோ, பாறாங்கல்லோ (அல்லது டி.வியில் வரும் "இந்த நிகய்ச்சியை அலிப்பவர்கல்"லோ!) யாராயிருந்தாலும் வலைபோட்டு வாரி எடுத்து (troll) சேர்த்துக்கொள்கிறார்கள்.
இந்தத்துறையில் பெருமளவில் வேலை பார்ப்பவர்கள் (மருத்துவர்களுக்கு ஸ்டெதெஸ்கோப் போல இவர்களுக்கு அடையாள அட்டைகள் – இரண்டுமே கழுத்தில்தான் தொங்கும்!) கூட்டம் நிறைந்திருப்பது பெங்களூரில்தான். அமெரிக்காவிலிருந்து outsourcing செய்யவேண்டும் என்று நினைத்தவுடன் அவர்கள் மனதில் முதலில் தோன்றும் இலக்கு பெங்களூரே. இந்தியாவின் பல மானிலங்களிலிருந்தும் இங்கு வந்து e-குப்பை கொட்டுகிறார்கள்! மேலும் அமேரிக்காவில் நித்திய கண்டமாக எப்போது pink slip கொடுப்பார்கள் என்ற பயத்தில் தூக்கத்தை இழப்பதைவிட அங்கிருந்து ஓடும் வேலைகளை இங்கு வந்து பிடித்துவிடலாம் என்று நாடு திரும்பும் techies கள் வீடு தேடுவதும் பெங்களூரில்தான்! இதனால் ஏற்பட்ட விளைவுகள் சில:- மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 27th, 2004. 7 மறுமொழிகள்.
இப்போது எல்லோரையும் ஏன் இப்படி சீனா மோகம் பிடித்து ஆட்டுகிறது!
அமெரிக்காவோ இன்றைக்கு "U.S of A, Made in China" என்று மாறிவிட்டது. Macy's, Wal-Mart, B.J's, Costco, K-Mart, Sears போன்ற ஸ்டோர்களில் எங்கு சென்றாலும் நீங்கள் வாங்கும் பொருட்கள் சீனாவில் செய்தவைதான். கூடிய சீக்கிரத்தில் முழு உலகத்துக்கும் உற்பத்தி மையமாக சீனா ஆகக்கூடிய நிலை உருவாகலாம். இதற்குக் காரணம் இன்றைய சீனா கம்யூனிஸத்தையும் முதலாளித்துவத்தையும் கலந்து ஒரு cocktail செய்து, மக்களை அடக்கி ஒரு கட்டுக்குள் வைக்க கம்யூனிஸத்தையும், பன்னாட்டு முதலீடுகளை வரவேற்க கேபிடலிஸத்தையும் உபயோகித்து, இருமுகம் கொண்ட அமைப்பாக விளங்குவதுதான். இன்னும் சிலர் ஒரு cynical view-வைக் கொண்டிருக்கிறார்கள் – சீனாவில் பொருள் உற்பத்தியெல்லாம் பெரும்பாலும் சிறைகளில் செய்யப்படுவதால் உழைப்பூதியச் சிலவுகள் almost a zilch என்று! இந்தியாவிலும் சிறுகச்சிறுக சீனாவின் தயாரிப்புக்கள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. Thomson (டின்-டின் ரசிகர்களுக்கு: இது Thomson without "P"!) TV நிறுவனத்தை ஒரு சீனக் கம்பெனி வாங்கிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இந்திய மென்பொருள் நிறுவனங்களும் சீனாவில் போய் தங்கள் மையங்களைத் துவங்க போட்டி போட்டுக்கொண்டு செல்கிறார்கள். மேலும் வாசிக்க…
சார்ந்த வகை: என்ன நடக்குது இங்கே :: நாள்: செப் 30th, 2004. 4 மறுமொழிகள்.
சமீபத்திய மறுமொழிகள்