வோர்ட்பிரஸ் 1.5 ஒரு ஜாக்பாட்!

வோர்ட்பிரஸ்
WordPress ஒரு சிறப்பான வலைப்பதிவு மென்பொருள் நிரல். பி.எச்.பி மற்றும் மை-எஸ்க்யூஎல் (PHP & MySql) போன்ற திறமூல மென்கலன்களைக் கொண்டு இயங்குவது. முழுவதும் இலவசமாகக் கிடைக்கும் இந்த இயற்பொதி முழுவதுமாக வளர்ந்து 1.5 என்ற திறனிலக்கை எட்டியுள்ளது.

ப்ளாக்கர் போன்ற சேவைகளை பாவிக்காமல் நீங்களே உங்கள் வலைத்தளத்தை குடியேற்றி நிரல்களின் செயல்படுத்த இயலுமானால் இந்த வோர்ட்பிரஸ் ஒரு வரப்பிரசாதம்.

நவன் பகவதியின் வலைப்பூ மற்றும் என் ஆங்கில சோம்பேரிப் பின்னல்கள்முதலியன இந்தக் கோப்பின் மூலம் இயக்கப் படுபவை.

மேல்விவரம் வேண்டுமானால் ஒரு கூச்சல் போடுங்கள்!

3 Comments


  1. /ப்ளாக்கர் போன்ற சேவைகளை பாவிக்காமல் நீங்களே உங்கள் வலைத்தளத்தை குடியேற்றி நிரல்களின் செயல்படுத்த இயலுமானால் இந்த வோர்ட்பிரஸ் ஒரு வரப்பிரசாதம்/

    இதற்கென தனியாக இடம் வாங்க வேண்டியிருக்குமா? அல்லது geocities போன்ற இலவச இடங்களைக் கொண்டு சமாளித்துக் கொள்ள முடியுமா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க ஸார் 🙂


  2. ஆமாம்.
    தனியிடம் வாடகைக்குப் பிடிக்க வேண்டியிருக்கும்!

    ஏனென்றால் PHP, MySql முதலிய கருவி/தரவுத் தளம் அங்கு server side-ல் இயக்க வசதிகள் இருக்க வேண்டும். அவற்றை உங்கள் இச்சைப்படி இயக்க உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். எந்த இலவச சேவையிலும் (தற்போது) இந்த வசதி இல்லை.

    ஆனால் வோர்ட்பிரஸ் சேவையை பயன்படுத்தி உங்கள் வலைப் பூக்களை இலவசமாக மலர விட சில சேவைகள் உள்ளன. அவற்றை நீங்கள் மாதிரி பார்க்கலாம். Wpblogs.com என்கிற தளத்தில் சென்று மூன்று டொமைன் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து உங்கள் வலைப்பதிவின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். (http://raja.wordpressblogs.com/ என்பது போல)

    ஆனால், இந்தப் பரந்த வலையுலகில் ஒரு முத்திரை பதிக்கும் விதமாக, உங்கள் டொமைன் பெயரிலேயே ஒரு சிற்றரசை நிறுவ விரும்பினால் ஒரு குரல் கொடுங்கள். குறைந்த சிலவில் என் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்ய முடியும். டொமைன் பெயரைப் பதிவு செய்யவும், Hosting செய்யவும் இலவசப் பரிந்துரைகள் செய்ய இயலும். Suggestions தான் இலவசம்! 🙂


  3. தகவல்களுக்கு நன்றி ஸார் 🙂 இன்னும் சிலவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்.

Comments are closed.