யார் குற்றவாளி?

தற்போது தினமும் செய்திகளில் அடிபடும் விஷயம் தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை தடுப்பு ஊசி போட்டதினால் மரணமடையும் குழந்தைகள் பற்றிய துயரச் செய்திகள்தான். அநேகமாக தினமும் இதுபோன்ற செய்திகள் வந்து நெஞ்சை நோகச் செய்கின்றன.

இத்தகைய சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தபின் நடக்கவேண்டிய சடங்குகள் செவ்வனே செய்து முடிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் அறிக்கை விட்டனர். அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். நிபுணர் குழுவினர் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். “எல்லா மட்டத்திலும் விசாரணை முடிந்தபின் அரசுக்கு அறிகையை அளிப்போம்” என்று கூறிவிட்டனர். அந்த அறிக்கை என்ன்வாகும்? இதற்குமுன் நடந்த பல்வேறு விசாரணை அறிக்கைகளின் கதிதான் இதற்கும்.

ஆனால், இந்தத் தவறுக்குப் பொறுப்பானவர்கள் யார்? மத்திய அரசும், மத்திய அரசில் சுகாதாரப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரும் இதற்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று கூறிவிட்டனர். மாநில அரசும் கைவிரித்தாகி விட்டது. நர்சுகள்தான் தவறு செய்துவிட்டனர் என்றனர். அவர்களும் இது அநியாயப் பழி எங்கள் மேல் என்கின்றனர்.

குழந்தைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் இந்த அறிக்கைகளைப் படித்து திருப்தி அடைய வேண்டியதுதானா!

பின் யார்தான் குற்றவாளி? இறந்த குழந்தைகளா!!

Leave a Reply

Your email address will not be published.