இதென்ன அநியாயம்!

சரி, வாங்கி விட்டால் போகிறது என்கிறீர்களா, இதோ உங்கள் பையில் விழப்போகும் ஓட்டையின் அளவு:

நீங்கள் பழைய ஜன்னல்வாசியாயிருந்தால் – $99 (சுமார் ரூ. 5000/= வரி கிரி எல்லாம் சேர்த்து)
நீங்கள் உங்கள் கணிப்பொறி இல்லத்தில் புதிதாக இப்போது தான் ஜன்னல் வைப்பவராக இருந்தால் – $199 (சுமார் ரூ. 9000/=)

முழுவதும் இனாம் எங்கள் உலாவி என்று தம்பட்டம் அடித்து நெட்ஸ்கேப்பை அடித்து விரட்டி அட்டகாசம் செய்து விட்டு இப்போது அதன் ஓட்டையை அடைக்க உங்களின் பர்ஸில் ஓட்டை போட ஆரம்பித்து விட்டது மைக்ரோஸாஃப்ட்!

இந்தக்கணந்தனில் உங்கள் மனதில் என்ன என்ணம் ஓடுகிறது என்பதை என்னால் கணிக்க முடிகிறது!

“எதற்கு இந்த IE-ஐக் கட்டிக்கொண்டு அழவேண்டும்? வேறு உலாவி இல்லையா, என்ன?”

ஆகா, இதுவல்லவா ஞானோதயம்!

ஏன் இல்லை, IE-ஐ விட பன்மடங்கு சிற்ந்த, கட்டுக் கோப்பான, பாதுகாப்பான “மோஸில்லா”, “ஃபையர் ஃபாக்ஸ்” போன்றவை பெருமளவில் செயல் படுகின்றன. உடனே உஜாலாவுக்கு மாறுங்கள்!

அவை முழுவதும் இனாமாகக் கிடைக்கின்றன. அவை திறந்த நிரலும் (Open source) கூட. இயக்குவதும் மிகச் சுலபம்.

நம்மில் சிலர் நினைக்கலாம் – நாங்கள் “சுட்ட” பழம் மட்டும் உண்பவர்கள். $$ – எவ்வளவு போட்டாலும் எங்களுக்கு அது பொருட்டல்ல (எல்லாத்துக்கும் “பே பே”!) என்று – ஐயா உங்களைக் கவனிக்க தரைப்படை, காளாட்படை, குதிரைப் படை என்று தயாராகிக் கொண்டிருக்கிறது. கவனமாக இருங்கள்!

கட்டுத்தளைகளைக் களைந்தெறிந்து வெளியே வாருங்கள்!
திறந்த வெளிக்கு வந்து சுத்ந்திரக்காற்றை உள்வாங்குங்கள்! அநியாயத்துக்குத் துணை போகாதீர்கள்.

Pages: 1 2 3

1 Comment


  1. விண்டோஸ் லாங்க்கார்ன் (Windows Longhorn) 2006இல் தான் வெளிவரும் என்ற நிலையில் மைக்ரோஸாஃப்டிற்கு இடைப்பட்ட இந்த காலத்தில் வருவாய்க்கு ஏதாவது ஒரு வழி வேண்டும். அதனால் தான் இந்த முயற்சி.

    அதே நேரத்தில் நம் ஆட்கள் இதனை எல்லாம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. என் வலைப்பதிவினை வாசிப்பவற்களில் நிறைய பேர் இன்னமும் ‘IE 5.0’ உபயோகிக்கிறார்கள் எனபது தான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *